பதிவு செய்த நாள்
15 ஜூலை2017
00:49
பெங்களூரு : இந்திய, ஐ.டி., துறையில், இரண்டாவது பெரிய நிறுவனமாக, இன்போசிஸ் திகழ்கிறது. ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 1.3 சதவீதம் உயர்ந்து, 3,483 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 3,436 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், இந்நிறுவனத்தின் வருவாய், 1.7 சதவீதம் உயர்ந்து, 16,782 கோடி ரூபாயில் இருந்து, 17,078 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டாலர் அடிப்படையில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 5.8 சதவீதம் உயர்ந்து, 54.10 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய், 6 சதவீதம் உயர்ந்து, 265 கோடியாக ஏற்றம் கண்டுள்ளது.
நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய், ரூபாய் மதிப்பில், 6.5 – 8.5 சதவீதம்; டாலர் மதிப்பில் 7.1 – 9.1 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஜூன் இறுதி நிலவரப்படி, இன்போசிஸ் நிறுவனத்தில், 1.98 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|