பதிவு செய்த நாள்
16 ஜூலை2017
04:44

புதுடில்லி : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் சேவைகள் துறை, கடந்த மே மாதம், 1,346 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1,343 கோடி டாலராக இருந்தது.இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 4 சதவீதம் உயர்ந்து, 762 கோடி டாலரில் இருந்து, 792 கோடி டாலராக அதிகரித்துள்ளது.நடப்பு 2017 – 18ம் நிதியாண்டின், ஏப்., – மே மாதங்களில், நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, 2,637 கோடி டாலராக, சற்றே உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 2,633 கோடி டாலராக இருந்தது.இதே காலத்தில், இறக்குமதி, 1,441 கோடி டாலரில் இருந்து, 1,511 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின், சேவைகள் துறைச் சார்ந்த சர்வதேச வர்த்தக புள்ளி விபரத்தின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, ஏற்றுமதி, இறக்குமதி குறித்த விபரங்களை தொகுத்து, 45 நாட்களுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|