பதிவு செய்த நாள்
16 ஜூலை2017
04:44

புதுடில்லி : மூக்கு கண்ணாடி கடைகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த, மத்திய அரசு, புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.இதற்காக, மத்திய சுகாதார அமைச்சகம், தனி குழுவை அமைத்துள்ளது. இக்குழு, மூக்கு கண்ணாடி விற்பனை, கண் பரிசோதனை சேவையுடன் மூக்கு கண்ணாடியை விற்போர், மூக்கு கண்ணாடி தயாரிப்போர் ஆகியோருக்கான விதிமுறைகளை உருவாக்கும்.தற்போது, மூக்கு கண்ணாடி கடைகள், வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் உள்ளதால், அவற்றின் தரம், வழங்கும் சேவை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது. இனி, அவை, சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.இது குறித்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆர்.பி., கண் சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவர் அதுல் குமார் கூறியதாவது:கண் மருத்துவர்கள், மருத்துவமனைகளில் கண் பரிசோதனை, மருந்துகளை பரிந்துரைப்பது, கண் அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.பிளஸ் 2 முடித்தவர்கள், மூன்றாண்டு கண் பரிசோதனை கல்வி பயின்று, கண் பரிசோதனை பணியை மேற்கொள்கின்றனர். இத்தகையோரை பணிக்கு அமர்த்தி, அவர்களின் பரிந்துரைப்படி, மூக்கு கண்ணாடிகளை, கடைக்காரர்கள் விற்கின்றனர்.ஆனால், பல கடைகள், கண் பரிசோதகர்கள் இல்லாமலும், போதிய சாதனங்கள் இல்லாமலும் செயல்படுகின்றன.சாதாரண நபர்கள், கண் பரிசோதனை செய்து பரிந்துரைக்கும் கண்ணாடியால், பலர் பாதிக்கப்படுகின்றனர்.இதை தடுக்க, மூக்கு கண்ணாடி கடைகள் மற்றும் அங்கு பணியாற்றும் கண் பரிசோதகர்கள், கண்ணாடிகள் தயாரிப்போரை, ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், தவறான பரிந்துரையால் மூக்கு கண்ணாடி அணிந்து, பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாவது குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|