ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி அமைப்பு உருவாகிறதுஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி ... ... பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேமிப்பு தடைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2017
00:14

நிதி வாழ்க்­கையில் பாது­காப்பை பெற சேமிப்பு இன்­றி­ய­மை­யா­தது. ஆனால், பலரும் சேமிக்க நினைத்­தாலும், சேமிக்க முடி­யாமல் தடு­மா­று­கின்­றனர். சேமிப்பின் அரு­மையை அறிந்­தி­ருந்தும், திட்­ட­மிட்­ட­படி சேமிக்க முடி­யாமல் அவ­திப்­ப­டு­ப­வர்­களில் நீங்­களும் ஒரு­வரா... உங்கள் தடு­மாற்­றத்­திற்கும், சேமிப்பை தள்­ளிப்­போ­டு­வ­தற்கும் இந்த தடைகள் கார­ண­மாக இருக்­கலாம்.

வாழ்க்­கைத்­தரம்போனஸ் அல்­லது எதிர்­பா­ராத தொகை திடீ­ரென கிடைத்தால் நீங்கள் என்ன செய்­வீர்கள். அந்த தொகையை கொண்டு நீண்ட நாட்­க­ளாக வாங்க நினைத்த விலை உயர்ந்த பொருளை வாங்­கு­வீர்­களா... அப்­ப­டி­யெனில் அது தான் முதல் சிக்கல். வரு­மா­னத்­திற்கு ஏற்ப வாழ்க்­ைகத்­த­ரத்தை உயர்த்­திக் ­கொள்ள விரும்­பு­வது சேமிப்பின் முதல் எதிரி. கூடுதல் தொகை கிடைத்தால் அதை சேமிப்­பாக கரு­துங்கள்.
தள்­ளிப்­போ­டு­வது
சம்­பளம் வந்­த­வுடன் முதல் செலவு உங்­க­ளுக்­கா­ன­தாக இருக்க வேண்டும். அதா­வது, சேமிப்­பிற்கு என ஒதுக்க வேண்டும். குறைந்­தது, 10 சத­வீத தொகையை இவ்­வாறு ஒதுக்­கி­விட்டு தான் மற்ற செல­வு­களை திட்­ட­மிட வேண்டும். மாறாக அடுத்த மாதம் அல்­லது பின்னர் பார்த்­துக் ­கொள்­ளலாம் என தள்­ளிப்­போட்டால், அதுவே தொடர் கதை­யாகி விடும்.
இந்த கணம்...
பலரும், எதிர்காலத்தை பிறகு பார்த்துக் கொள்­ளலாம், இந்தக் கணத்தில் வாழ்க்­கையை அனு­ப­விப்போம் என்ற மன­நி­லையை கொண்­டுள்­ளனர். இவர்கள் சேமிப்பை ஒரு சுமை­யா­கவும் கரு­து­கின்­றனர். ஆனால், இந்த கணத்தில் வாழும் வாழ்க்கை சிக்­க­லா­ன­தாக மாறலாம். எதிர் காலத்­திற்கு சேமிக்கும் போது எந்த விருப்­பத்­தையும் திட்­ட­மிட்டு நிறை­வேற்றிக் கொள்­ளலாம்.
தாராளம்
உற­வி­னரோ, நண்­பரோ கேட்­ட­வுடன் பணம் கொடுத்­து­விடும் தாராள மனம் கொண்­ட­வரா நீங்கள். எனில், இதுவும் சேமிப்பை சிக்­க­லாக்­கலாம். மற்­ற­வர்­க­ளுக்கு உத­வு­வது அவ­சியம் தான். ஆனால், அது உங்கள் நிதி எதிர்­கா­லத்தை பாதிக்கக் கூடாது. எனவே, முதலில் உங்­க­ளுக்­கான தொகையை சேமி­யுங்கள். புகைப்­பி­டிப்­பது, ஆடம்­ப­ர­மாக செலவு செய்­வது போன்ற மோச­மான பழக்­கங்­களும் சேமிப்பை பாதிக்­கலாம்.
ஒப்­பீடு
மற்­ற­வர்­க­ளுடன் உங்­களை ஒப்­பிட்­டுக்­கொள்வதும் சேமிப்­பிற்கு வேட்டு வைக்­கலாம். ஏனெனில், மற்­ற­வர்கள் செய்யும் செல­வுகள் அல்­லது அவர்­க­ளிடம் உள்ள வச­தி­களை பார்த்து உங்கள் தேவையை தீர்­மா­னிக்கும் போது, அவை நிதி நோக்கில் மோச­மான முடி­வு­க­ளாக அமை­யலாம். எனவே, எப்­போதும் உங்கள் அள­வு­கோல்­க­ளுக்கு ஏற்­பவே தேவை­களை தீர்­மா­னி­யுங்கள். மற்­ற­வர்கள் கடன் வாங்கி கூட செலவு செய்து கொண்­டி­ருக்­கலாம் என்­பதை நினைவில் கொள்­ளுங்கள்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)