ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி அமைப்பு உருவாகிறதுஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி ... ... பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி லாக்கர் பாது­காப்பு சிக்­க­லுக்கு மாற்­றுத்­தீர்­வுகள் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2017
00:15

லாக்­கரில் வைக்­கப்­படும் பொருட்­களின் இழப்­பிற்கு வங்­கிகள் பொறுப்­பேற்­காது என தெளிவுபடுத்­தப்­பட்ட நிலையில், லாக்கர் பாது­காப்பு, வீட்டில் பாது­காப்பு பெட்­டகம் அமைப்­பது, காப்­பீடு பெறு­வது ஆகி­யவை குறித்து ஒரு அலசல்.

நகைகள் உள்­ளிட்ட விலை உயர்ந்த பொருட்­களை வீட்டில் வைத்­தி­ருப்­பதை விட வங்கி லாக்­கரில் வைத்­தி­ருப்­பது பாது­காப்­பா­னது எனும் எண்­ணத்தை அசைப்­பது போல, கடந்த மாதம் இறு­தியில் வெளி­யான செய்தி அமைந்­தது. வங்கி லாக்­கரில் வைக்­கப்­படும் பொருட்­க­ளுக்கு ஏற்­படும் இழப்­பு­க­ளுக்கு வங்­கிகள் பொறுப்­பேற்­காது என, ரிசர்வ் வங்கி தெளி­வு­ப­டுத்­தி­யது. ஆர்.டி.ஐ., கோரிக்கை ஒன்­றுக்கு அளித்த விளக்­கத்தில், லாக்கர் பொருட்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்­களே பொறுப்பு என, ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்­கிகள் தெரி­வித்­தி­ருந்­தன.

யார் பொறுப்பு?
இந்த செய்தி பொது­மக்கள் மத்­தியில் குழப்­பத்­தையும், அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யது. வங்கி லாக்­கரில் வைக்­கப்­படும் பொருட்­களின் பாது­காப்­பிற்கு வாடிக்­கை­யா­ளர்­களே பொறுப்பு என்றால் லாக்கர் வசதி எதற்கு எனும் கேள்­வியும் இயல்­பாக எழு­கி­றது. லாக்­கரில் வைக்­கப்­படும் பொருட்­களின் பாது­காப்­பிற்கு வங்­கிகள் பொறுப்­பேற்­காது என்றால், ‘ஹோம் சேப்’ எனப்­படும் பாது­காப்பு பெட்­டக வச­தியை, வீட்­டி­லேயே அமைத்­துக்­கொள்­ளலாம் என்ற கருத்து பர­வ­லாக முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

தற்­போது நவீன வச­திகள் கொண்ட பாது­காப்பு பெட்­ட­கங்கள் பல­வித வடி­வங்­களில் கிடைப்­பதால், வீட்­டி­லேயே பெட்­டகம் அமைத்து நகைகள் உள்­ளிட்­ட­வற்றை அதில் வைக்­கலாம் என கரு­தப்­ப­டு­கி­றது. எப்­ப­டியும் வங்கி லாக்கர் வசதி என்­பது செலவு மிகுந்­த­தா­கவே இருப்­ப­தையும், சேவை கட்­ட­ண­மாக ஆண்­டுக்கு பல ஆயிரம் வரை செலவு செய்ய வேண்­டி­யி­ருப்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். மேலும், பல வங்­கிகள் லாக்கர் வசதி பெற வைப்பு நிதி பெற வேண்டும் என்றும் நிர்ப்­பந்­திக்­கின்­றன.

இந்த சூழலில், பாது­காப்பு பெட்­டகம் வாங்கக் கூடி­ய­வர்கள் வீட்­டி­லேயே நகைகள் உள்­ளிட்ட விலை உயர்ந்த பொருட்­களை பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கலாம் என, யோசனை கூறப்­ப­டு­கி­றது. ஆனால், அதிக அள­வி­லான பொருட்­களை லாக்­கரில் வைக்க விரும்புகின்றவருக்கு வீட்டு பாது­காப்பு பெட்­டக வசதி பொருத்­த­மாக இருக்­காது என்று வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். வங்­கிகள் பொருட்­களின் பாது­காப்பு ரிஸ்க் தொடர்­பாக எச்­ச­ரித்­தாலும், லாக்கர் பாது­காப்­பிற்கு அவை விரி­வான ஏற்­பா­டு­களை செய்­வதை வல்­லு­னர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

கேளுங்கள்
லாக்­கர்கள் பாது­காப்­பான சூழலில் அமைக்­கப்­பட்டு, தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனவே, வாடிக்­கை­யா­ளர்கள் லாக்­கரை தேர்வு செய்யும் முன், வங்­கி­க­ளிடம் பாது­காப்பு ஏற்­பா­டுகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்­கின்­றனர். பாது­காப்பு ஏற்­பா­டுகள் குறித்து, வங்­கிகள் திருப்­தி­க­ர­மான அல்­லது பொறுப்­பான பதில் அளிக்­கா­விட்டால், வேறு வங்­கி­களை நாட வேண்டும். வங்கி கடை­சி­யாக பாது­காப்பு ஏற்­பா­டு­களை எப்­போது புதுப்­பித்­தது என்று வாடிக்­கை­யாளர் தெரிந்து கொள்­ளலாம். வீட்டில் பாது­காப்பு பெட்­டக வசதி அமைப்­பது எளிது என்­றாலும், இவற்­றிலும் செலவு முக்­கிய அம்சம் என்­பதை மனதில் கொள்ள வேண்டும். நவீன பெட்­ட­கங்கள், அத்­து­மீறல் முயற்சி தொடர்­பான மொபைல்­போ­னுக்கு தகவல் தெரி­விக்கும் வசதி கொண்­டுள்­ளன. இவற்றின் விலை அதி­க­மாக இருக்கும்.

காப்பீடு வசதி
இதற்கு மாற்­றாக தனியார் லாக்கர் வச­தியை நாடலாம். பல தனியார் நிறு­வ­னங்கள் லாக்கர் வச­தியை அளிக்­கின்­றன. ஆனால், இவற்­றுக்­கான கட்­டணம், வங்கி லாக்கர் கட்­ட­ணத்தை விட கூடு­த­லாக இருக்கும் என்­ப­தையும் நினைவில் கொள்ள வேண்டும்.எந்த லாக்கர் வச­தியை தேர்வு செய்­தாலும், நகைகள் உள்­ளிட்ட விலை உயர்ந்த பொருட்­க­ளுக்கு காப்­பீடு வசதி பெறு­வது சிறந்­தது என, வல்­லு­னர்கள் சொல்­கின்­றனர். நகை­க­ளுக்­கான காப்­பீடு வசதி தனியே இருப்­ப­தோடு, இல்ல காப்­பீட்டின் கீழும், நகை­க­ளுக்­கான காப்­பீட்டை பெறலாம் என்­கின்­றனர். வீட்டில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் போது மற்றும் பய­ணத்தின் போதும் நகை­க­ளுக்கு காப்­பீடு பெறும் வசதி இருக்­கி­றது. அதே நேரத்தில் முத­லீடு நோக்கில் தங்க நகை வாங்­கு­பவர்கள், நகை­க­ளுக்கு பதில் காகித வடிவில் தங்­கத்தில் முத­லீடு செய்து ரிஸ்க்கை குறைக்­கலாம் என்றும் வல்­லு­னர்கள் ஆலோ­சனை அளிக்­கின்­றனர்.
எது பாது­காப்பு?* ஹோம் சேப் வச­தியை நாடலாம். தனியார் லாக்கர் வச­தியும் இருக்­கின்­றன.* லாக்கர் பரா­ம­ரிப்பு செலவுமிக்­கது.* நகைகள் பாது­காப்­பிற்கு காப்­பீடு பெறலாம்.* காகித வடிவ தங்க முத­லீட்டை நாடலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)