ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி அமைப்பு உருவாகிறதுஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் - இந்திய முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்க தனி ... ... பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்­தி­யா­வில் வேலை­வாய்ப்பு: நம்­பிக்கை தரும் சர்­வேக்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2017
00:21

நரேந்­திர மோடி தலை­மை­யி­லான பா.ஜ., அரசு ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து வைக்­கப்­படும் விமர்­ச­னங்­களில் முக்­கி­ய­மா­னது, வேலை­வாய்ப்பு பெரு­க­வில்லை என்­ப­து­தான். சமீ­பத்­தில் வெளி­யா­கி­யுள்ள மூன்று தக­வல்­கள் நம்மை கொஞ்­சம் நிம்­ம­தி­ய­டைய வைக்­கின்றன. ஆனால், அதி­லி­ருந்து வேறு சில கவ­லை­கள் எழு­வ­தைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

ஜூன் மாதம் முடி­வ­தற்­குள், இந்­தி­யா­வி­லுள்ள நிறு­வ­னங்­கள் எல்­லாம் தம்­மி­டம் வேலை­செய்­ப­வர்­க­ளுக்கு வருங்­கால வைப்பு நிதி, (பி.எப்.,) தொகை­யைச் செலுத்­தி­விட வேண்­டும் அல்­லது சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கையை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் என்ற மன்­னிப்­புத் திட்­டத்தை அறி­வித்­தது மத்­திய அரசு. சிக்­கல்­க­ளைத் தவிர்க்க விரும்­பிய நிறு­வ­னங்­கள், தாமா­கவே முன்­வந்து தம்­மி­டம் பணி­யாற்­றும் பணி­யா­ளர்­களின் விப­ரங்­களை வழங்­கி­ய­தோடு, வைப்பு நிதி­யை­யும் செலுத்­தி­யுள்ளன. ஆச்­ச­ரி­ய­க­ர­மான விப­ரம் இங்­கு­தான் வெளிப்­பட்­டது.

அதா­வது, ஜூன் இறு­தி­யில் பி.எப்., பிடித்­தம் செய்­யப்­படும், முறை­யாக வேலை­யில் இருப்­ப­வர்­களின் எண்­ணிக்கை, 3.8 கோடி­யி­லி­ருந்து 26 சத­வீ­தம் அதி­க­ரித்து, 4.81 கோடி­யாக உயர்ந்­துள்­ளது. கடந்த ஆறு மாதங்­களில் மட்­டும் ஒரு கோடி பேர்­, பி.எப்., கணக்­கில் சேர்க்­கப்­பட்­டு உள்­ள­னர். அதா­வது, இவர்­க­ளெல்­லாம் முன்­னரே வேலை­யில்­தான் இருந்­த­னர். ஆனால், அவர்­க­ளுக்கு, பி.எப்., பிடித்­தம் செய்­யப்­ப­டா­ம­லி­ருந்­தது. இப்­போது அவர்­களும் பி.எப்., வளை­யத்­துக்­குள் வந்­துள்­ள­தால், இரண்டு மூன்று நன்­மை­கள். ஒன்று, அவர்­க­ளுக்கு சமூக ரீதி­யான பாது­காப்பு கிடைக்க வாய்ப்பு. இரண்டு, இந்­தி­யா­வில் முறை­யான வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெற்­றுள்­ள­வர்­களின் உண்­மை­யான எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக வெளியே வரத் துவங்­கி­யுள்­ளது.

தொழி­லா­ளர் நலத்­து­றை­யின் கணக்­குப் படி, 2016ல், இந்­தி­யா­வில் சுமார் 47.5 கோடி பேர்­ வேலை பார்க்­கின்­ற­னர். இதில் முறை­யான வேலை­களில் இருப்­ப­வர்­கள் பத்து சத­வி­கி­தம் பேர்­கள் மட்­டுமே. இது­வும் தோரா­ய­மான கணக்­கு­தானே அன்றி, துல்­லி­ய­மான எண் அல்ல. இன்­னொரு துல்­லி­ய­மற்ற கணக்­கும் அவ்­வப்­போது தெரி­விக்­கப்­பட்டு வரு­வது கண்­கூடு. அதா­வது, ஒவ்­வொரு ஆண்­டும் வேலை­செய்­யத் தகு­தி­யுள்ள, 15 முதல் 59 வயது வரை­யுள்­ளோர், 1.2 கோடி பேர் வேலைச் சந்­தைக்கு வரு­கின்­ற­னர் என்­றொரு கணக்கு சொல்­லப்­ப­டு­கிறது. இந்த வய­தி­லுள்ள எல்லா­ருமே வேலை தேடு­வ­தில்லை. சிலர் மேற்­ப­டிப்பு, சுய­தொ­ழில் என்று நகர்ந்­து­வி­டு­கி­ன்றனர்­. கிரா­மத்­துப் பெண்­கள் எல்லா­ரும் வேலைச் சந்­தைக்கு வரு­வ­தில்லை. ஆக, இப்­ப­டிப்­பட்ட விடு­ப­டு­தல்­களை கணக்­கில் எடுத்­துக்­கொண்­டால், 60 லட்­சம் பேரா­வது ஒவ்­வொரு ஆண்­டும் வேலை­ தேடி வரு­கின்­ற­னர்.

இதி­லும் பெரு­ம­ளவு நக­ரம் சார்ந்த வேலை­க­ளுக்கே அதி­கம் பேர் வரு­கின்­ற­னர். சென்ற ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி அர­சாங்க காலத்­தி­லேயே ஏரா­ள­மா­னோர் கிரா­மங்­களில் வேலை­வாய்ப்­பு­கள் இல்­லா­த­தால், அரு­கில் உள்ள நக­ரங்­களை நோக்கி இடம் பெயர்ந்­து­விட்­டனர். இப்­போது நக­ரங்­களில் போது­மான வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­னவா என்­று­தான் பார்க்க வேண்­டும். உரு­வாக்­கப்­பட்­டுள்ளன என்­கிறது, ‘இந்­திய நுகர்­வுப் பொரு­ளா­தா­ரத்­துக்­கான மக்­கள் ஆய்வு மையம்’ வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை. ஆனால், அந்த வேலை­கள் எல்­லாம் முறை­சார்ந்த வேலை­கள் அல்ல. அதா­வது, எல்­லா­வ­கை­யான உரி­மை­க­ளு­டன் கூடிய மாதாந்­திர சம்­ப­ளம் வழங்­கும் வழக்­க­மான உத்­தி­யோ­கங்­கள் அல்ல அவை. மாறாக ஒப்­பந்­தப் பணி­கள் அல்­லது அன்­றா­டக் கூலி­கள்.

கடந்த, 2011 – 12 முதல் 2016 கால­கட்­டத்­தில் முறை­யான சம்­ப­ளம் பெறும் வேலை­கள் மிகப்­பெ­ரும் சரி­வைச் சந்­திக்க, சுய­தொ­ழில் செய்­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யும் பெரு­க­வில்லை. மாறாக, ஒப்­பந்­தப் பணி­யா­ளர்­களின் அளவே உயர்ந்­துள்­ளது. வேலை­யில் நிச்­ச­ய­மின்மை இதன் உடன்­பி­றந்த சகோ­தரி.முறை­சாரா ஒப்­பந்­தப் பணி­யா­ளர்­கள் விஷ­யத்­தில் இன்­னொரு போக்­கும் அதி­க­மாகி வரு­கிறது. எந்­த­வி­த­மான எழுத்­து­பூர்­வ­மான ஒப்­பந்­த­மும் இல்­லா­மல் பணிக்கு அமர்த்­தப்­ப­டு­ப­வர்­கள் சுமார் 71 சத­வி­கி­தம். இது இந்­தி­யா­வில் மட்­டு­மல்ல, உல­கெங்­கும் இது­தான் நிலைமை.

பணி­யா­ளர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கு­மான உறவு தொடர்ந்து மாறி­வ­ரு­கிறது. எந்­த­வி­த­மான நிரந்­த­ரப் பொறுப்­பு­க­ளை­யும் நிர்­வா­கங்­கள் ஏற்க விரும்­பு­வ­தில்லை.ஒவ்­வொரு தனி­ந­ப­ரும் வேலைச் சந்தை கோரும் திற­மை­க­ளை­யும் தனித்­து­வங்­க­ளை­யும் வளர்த்­துக்­கொண்டு, தயா­ராக இருக்­க­வேண்­டும். எப்­போ­தெல்­லாம் தேவை ஏற்­ப­டு­கி­றதோ, அங்கே வேலை செய்து சம்­பா­தித்­துக்­கொள்ள வேண்­டும். கேட்­கச் சிர­ம­மாக இருந்­தா­லும் இது­தான் எதிர்­கா­லம். இந்­நி­லை­யில், மத்­திய அர­சாங்­கம், வேலை உத்­த­ர­வா­த­முள்ள நிரந்­தத்­தன்­மை­யுள்ள முறை­சார்ந்த வேலை­களின் எண்­ணிக்­கையை உயர்த்த வேண்­டும் என்ற கோரிக்கை எழுந்து வரு­கிறது. தனி­யார் துறை­யும் இதே­போன்ற உத்­த­ர­வா­த­முள்ள வேலை­களை உரு­வாக்­க­வேண்­டும் என்ற எதிர்­பார்ப்­பும் அதி­க­மாகி வரு­கிறது. குறிப்­பாக, தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில்.

உத்­த­ர­வா­தம் தர­மு­டி­கி­றதோ இல்­லையோ, குறைந்­த­பட்­சம் வேலை­களின் எண்­ணிக்­கையை, ஐ.டி., நிறு­வ­னங்­கள் பெரு­ம­ளவு குறைக்­க­வில்லை என்­ப­து­தான் மூன்­றா­வது நிம்­ம­தி­யான செய்தி. ஜூன் மாதத்­தோடு முடிந்த காலாண்­டில், ஐ.டி., நிறு­வ­னங்­கள் வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளைப் பார்க்­கும்­போது இது உறு­தி­யா­கிறது. டி.சி.எஸ்.,சும் இன்­போ­சி­சும் உல­கெங்­கும் சுமார் 6 லட்­சம் பேருக்கு வேலை கொடுத்­துள்ளன. மார்ச் மாத இறு­தி­யில் 5,87,587 ஆக இருந்த பணி­யா­ளர் எண்­ணிக்கை ஜூன் மாத இறு­தி­யில் சற்றே சரிந்து, 5,84,362 என்ற அள­வுக்கு வந்­தி­ருக்­கிறது.

புதிய ஆள்­சேர்ப்பு தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தோடு, பயிற்சி பொறி­யாளர்­களின் எண்­ணிக்­கை­யும் பெரு­ம­ளவு குறைக்­கப்­பட்­டுள்­ளது. புதிய வேலை­கள் உரு­வா­வது ஒரு­பக்­கம் எவ்­வ­ளவு முக்­கி­யமோ, அது­போல் பழைய வேலை­கள் பறி­போ­கா­மல் காப்­பாற்­றப்­ப­டு­வ­தும் முக்­கி­ய­மா­னதே. இந்த இடத்­தில்­தான் அர­சின் கொள்கை ரீதி­யான தலை­யீடு முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது. நிடி ஆயோக் துணைத் தலை­வர் அர­விந்த் பன­க­ரியா தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட குழு, வேலை­வாய்ப்­பு­களை எப்­ப­டிச் சீராக, துல்­லி­ய­மா­கக் கணக்­கி­டு­வது என்­பது பற்­றிய தனது ஆலோ­ச­னை­களை வெளி­யிட்­டுள்­ளது. அதில், தொடர்ச்­சி­யான பல்­வேறு சர்­வேக்­கள், அர­சுத் துறை­யில் ஏதே­னும் ஒரு­வ­கை­யில் பதிவு செய்­து­கொண்­ட­வர்­களின் விப­ரங்­கள் ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­வது போன்ற ஆலோ­ச­னை­கள் தெரி­விக்­கப்­பட்­டுள்ளன.

சர்­வேக்­கள் வெறும் கண்­ணா­டி­கள்­தாம். எதி­ரில் இருப்­ப­வ­ரின் புறத்­தோற்­றத்­தைப் பிர­தி­ப­லிப்­ப­து­தான் கண்­ணாடி. ஆனால், கண்­ணா­டியை வைத்­துக்­கொண்டு அதன் எதி­ரே­யுள்ள மனி­த­னின் ஆரோக்­கி­யத்தை, எதிர்­பார்ப்­பு­களை, அகத்­தே­வை­க­ளைப் புரிந்­து­கொள்ள முடி­யாது. அதற்­குத் தேவை அக்­க­றை­யுள்ள அணு­கு­முறை. வேலை­வாய்ப்­பு­களின் எண்­ணிக்கை பெருக, இளை­ஞர்­கள் மத்­திய, மாநில அர­சு­க­ளி­டம் எதிர்­பார்ப்­பது இத்­த­கைய அக்­க­றை­யைத்­தான்.

-ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)