தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு ... ஜி.எஸ்.டி.,யால் வாகன துறைக்கு பயன்; சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஜி.எஸ்.டி.,யால் வாகன துறைக்கு பயன்; சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2017
06:16

நான், பங்கு வர்த்­தக தரகு தொழில் செய்து வரு­கி­றேன். இத்­த­கைய பரி­வர்த்­தனை, பொருட்­களின் விற்­ப­னை­யாக (ஸ்டாக்) கரு­தப்­ப­டுமா அல்­லது சேவை­யாக கரு­தப்­ப­டுமா?– முகேஷ், கட­லுார்இது, ஒரு சேவை­யாக கரு­தப்­படும். உங்­கள் தரகு வரு­மா­னம், நிர்­ண­யித்த உச்ச வரம்பை தாண்­டும் போது, நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்­டும்.
நாங்­கள் வாங்­கும், ‘ஆபீஸ்’ உப­க­ர­ணங்­க­ளுக்­கும், மூல­தன சாமான்­க­ளுக்­கும் உள்­ளீட்டு வரி பயன் பெற முடி­யுமா?– ராக­வன், அம­ரா­வதிஆம். உங்­களின் வணி­கம் சார்ந்த எந்த ஒரு செல­வி­லும், அவற்றை கொள்­மு­தல் செய்­யும் போது, ஜி.எஸ்.டி., செலுத்­தி­யி­ருப்­பின், அவற்றை உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம். இதற்கு, ஒரு­சில நிபந்­த­னை­களும் உள்ளன.
ஜி.எஸ்.டி.ஆர்., 1 ரிட்­டர்ன் படி­வத்தை, வழங்­கல் நடந்த, அடுத்த மாதம், 10ல் தாக்­கல் செய்ய வேண்­டுமா அல்­லது அதற்கு முன்­னரே தாக்­கல் செய்­ய­லாமா?– கிஷோர், சிட்­ல­பாக்­கம்நீங்­கள், வழங்­கல் நடந்த, அடுத்த மாதம், 10 வரை காத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. வழங்­கல் நடந்த உட­னேயே, ஜி.எஸ்.டி.என்., போர்ட்­ட­லில் விப­ரங்­களை பதி­வேற்­றம் செய்ய ஆரம்­பிக்­க­லாம். உதா­ர­ண­மாக, ஜூலை வழங்­கிய வழங்­கல்­களை, இம்­மா­தம், 24 முதல், ஜி.எஸ்.டி.என்., போர்ட்­ட­லில் பதி­வேற்­றம் செய்­ய­லாம்.
​ஐயா, சி.ஜி.எஸ்.டி., – எஸ்.ஜி.எஸ்.டி., ஆகிய இரு வரி­க­ளுக்­கும், தனித்­த­னியே, ‘ரிட்­டர்ன்’ தாக்­கல் செய்­யும் முறை உள்­ளதா?– ரவி, கும்­ப­கோ­ணம்சி.ஜி.எஸ்.டி., – எஸ்.ஜி.எஸ்.டி., – ஐ.ஜி.எஸ்.டி., ஆகிய மூன்று வரி­க­ளுக்­கும் சேர்த்து, ஒரே ரிட்­டர்ன் தாக்­கல் செய்­தால் போதும். தனித்­த­னியே ரிட்­டர்ன் தாக்­கல் செய்ய வேண்­டாம்.
சார், நான் ஐஸ் கிரீம் உற்­பத்தி செய்­கி­றேன். அதை வியா­பா­ரி­க­ளுக்­கும் விற்­பனை செய்­கி­றேன். மாதத்­திற்கு, 2 லட்­சம் ரூபாய் வரை விற்­பனை இருக்­கும். நான் கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்­தால், எத்­தனை சத­வீ­தம் வரி செலுத்த வேண்­டும்?– சுந்­தர், நாகப்­பட்­டி­னம்ஐஸ் கிரீம், புகை­யிலை, பான் மசாலா ​பொருட்­கள் ​ஆகி­ய­வற்றை உற்­பத்தி செய்­யும் உற்­பத்­தி­யா­ளர்­கள், கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்ய இய­லாது. எனவே உங்­க­ளால், காம்­போ­சி­ஷன் முறை­யில் வரி செலுத்த இய­லாது.
​​​​ஜி.எஸ்.டி​., ​​மைக்­ரே­ஷன் முறை­யில் பதிவு எண் பெற்­று­விட்­டேன். இப்­போது, ​​ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்ய முடி­யுமா?– மணி­கண்­டன், பவானிநீங்­கள் பெற்ற பதிவை ரத்து செய்­ய­லாம். நீங்­கள் பதிவை ரத்து செய்­வ­தற்­கான, ​​ஜி.எஸ்.டி., ​பதிவு 16 என்ற விண்­ணப்­பம் மூலம் விண்­ணப்­பிக்க வேண்­டும்.
​​​​ஜி.எஸ்.டி.,​ விதிப்­பிற்கு முன், ​​நாங்­கள் விற்ற பொருட்­க­ளுக்கு இப்­போது விலை­யேற்­றம் செய்­ய­லாமா? முன், ‘வாட்’ வரி வசூல் செய்­தி­ருந்­தோம். இப்­போது விலை­யேற்­றம் செய்­தால், அதில், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டுமா?– நதியா, குன்­னுார்​விலை­யில் மாற்­றம் செய்­ய­லாம். நீங்­கள் ​விலை­யேற்­றம் செய்த, 30 நாட்­க­ளுக்­குள், ‘டெபிட் நோட்’ அல்­லது துணை விலைப் பட்­டி­யல் மூலம், உரிய ஜி.எஸ்.டி., வசூல் செய்து, அவற்றை செலுத்த வேண்டு​ம்​.
நான், கன்­னி­யா­கு­ம­ரி­யில் வழக்­க­றி­ஞ­ராக பணி­யாற்ற துவங்கி உள்­ளேன்​.​ வழக்­க­றி­ஞர்­கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்ய வேண்­டுமா?– சோமு, ​நாகர்­கோ­வில்வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யின் பதி­வி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. உங்­களின் சேவைக்கு, சேவையை பெறு­ப­வர், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டும். எனவே, நீங்­கள் பதிவு பெற வேண்­டிய அவ­சி­யம் இல்லை.
நாங்­கள், ‘வாட்’ பதி­வின் போது, கலவை வரி திட்­டத்­தில் இருந்­தோம். தற்­போது, ஜி.எஸ்.டி., திட்­டத்­திற்கு ​மாறி உள்­ளோம்​. கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்­ய­வில்லை.​ ​எங்­க­ளி­டம், ​ஜூன், 30ல் இருந்த கையி­ருப்பு சரக்­கிற்கு, உள்­ளீட்டு வரி பயன் உண்டா?– மனோ­க­ரன், காங்­கே­யம்முன், கலவை வரி திட்­டத்­தில் இருந்­தா­லும்​,​ தற்­போது, ஜி.எஸ்.டி., வசூல் செய்து, அர­சுக்கு செலுத்­தும் முறையை தேர்ந்­தெ­டுத்​ததால், ​ உங்­க­ளுக்கு ஜூன், 30ல் இருந்த கையி­ருப்பு சரக்­கி­லுள்ள உள்­ளீட்டு வரி பயன் கிடைக்­கும். அத்­த­கைய கையி­ருப்பு சரக்கு, ​​ஜி.எஸ்.டி.,​ விதிப்­பிற்கு முன், ​ஓராண்­டுக்­குள் கொள்­மு­தல் செய்­த­தாக இருக்க வேண்­டும். அதற்­கு­ரிய விலைப் பட்­டி­யல் உங்­க­ளி­டம் இருக்க வேண்­டும். அப்­ப­டி­யி­ருந்­தால், அதற்­கு­ரிய அனைத்து உள்­ளீட்டு வரி பய­னும் கிடைக்­கும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)