பதிவு செய்த நாள்
19 ஜூலை2017
06:20

புதுடில்லி : ‘‘சர்வதேச வர்த்தகம் தொடர்பான விவகாரங்களை கையாள, நான்கு மையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:சர்வதேச வர்த்தகத்தில் தற்போதுள்ள சூழல், எதிர்காலத்தில் ஏற்பட உள்ள மாற்றங்கள், தேவைகள் போன்றவற்றுக்கு ஏற்ப, நாட்டின் வர்த்தக கொள்கையை வடிவமைப்பது அவசியமாகும்.இதையொட்டி, சர்வதேச வர்த்தக சட்டம், பிராந்திய வர்த்தக ஆய்வு, வர்த்தக வளர்ச்சி, திறன் வளர்ப்பு பயிற்சி என, நான்கு மையங்கள் அமைக்க, அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இவற்றில், வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம், பிராந்திய வர்த்தக மையம் ஆகியவை, ஏற்கனவே செயல்படத் துவங்கிவிட்டன. இவை, சி.ஆர்.ஐ.டி., எனப்படும், ஆய்வு மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் உலக வர்த்தக கூட்டமைப்பு சார்ந்த ஆய்வுப் பணிகளை விரிவுபடுத்த துணை புரியும்.
சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பானவற்றில், இந்தியாவின் நலனுக்காக இந்த மையம் பாடுபடும். அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை கொண்ட, வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம், மத்திய அரசுக்கு, வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை வழங்கும். பிராந்திய வர்த்தக மையம், பல்வேறு பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சியை ஆராய்ந்து, அவற்றில் இந்தியாவுக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து பரிந்துரைக்கும்.
வர்த்தகம் சார்ந்த திறன் வளர்ப்பு மையம், அரசு அதிகாரிகளுக்கு நவீன வர்த்தக நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கும். சர்வதேச வர்த்தக விவகாரங்களை திறமையுடன் கையாள, இந்த மையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|