பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
10:15

மும்பை : கார்ப்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு, அமெரிக்க பங்குச்சந்தைகளின் உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 20) ஏற்றத்துடன் துவங்கி உள்ளன.
சென்செக்ஸ் மீண்டும் 32,000 புள்ளிகளையும், நிப்டி 9900 புள்ளிகளையும் கடந்து வர்த்தகமாகி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 101.77 புள்ளிகள் உயர்ந்து 32,057.12 புள்ளிகளாகவும், நிப்டி 22.95 புள்ளிகள் உயர்ந்து 9922.55 புள்ளிகளாகவும் உள்ளன.
வங்கிகள், கட்டுமானம், மின்துறை, ஆட்டோ உள்ளிட்ட துறைகளின் பங்கு மதிப்புக்கள் உயர்வுடன் காணப்படுகின்றன. ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் அதிக லாபம் ஈட்டி உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|