பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
15:54

புதுடில்லி : ஜியோ பீச்சர்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், டெலிகாம் மற்றும் மொபைல் போன் நிறுவனங்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 4ஜி சேவைகளை அறிமுகம் செய்து டெலிகாம் சந்தையில் ஒட்டுமொத்த விலையை முற்றிலுமாக மாற்றியமைத்த ஜியோ தற்சமயம் மலிவு விலையில் பீச்சர் போன்களை வெளியிட இருக்கிறது.
மலிவு விலையிலான பீச்சர்போன் மற்றும் 4ஜி வோல்ட்இ வசதி இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜியோ சேவைகளும், சில ஜியோ செயலிகளை இயக்கும் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுவதால் பீச்சர்போன் விற்பனை ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சார்ந்த ஜியோ இந்தியாவில் 20 கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அறிமுகமாகும் பீச்சர் போன்கள் இரண்டு ஆண்டிற்குள் இந்த இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 4ஜி வோல்ட்இ ஜியோ பீச்சர்போனின் விலை ரூ.1000-ரூ.1500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் முதற்கட்டமாக ஒரு கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை ஜியோ பீச்சர்போனில் 2.4 இன்ச் கலர் டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 2 எம்பி பிரைமரி கேமரா, வி.ஜி.ஏ. செல்ஃபி கேமரா 2000 எம்ஏஎச் பேட்டரி, எஃப்.எம். ரேடியோ, ப்ளூடூத் 4.1 உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. ஜியோ பீச்சர்போனில் டிஜ்ட்டல் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|