பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
16:00

மும்பை: ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா புதிய கிளிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.43,076 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் 100 - 110சிசி பைக்களுக்கான சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிளிக் 110 சிசி ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா சார்ந்து உருவாகியுள்ளது. புதிய கிளிக் ஆண் மற்றும் பெண் என இருபாலினத்தவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சீட் உயரம் 743 மில்லிமீட்டரில் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா கிளிக் விரைவில் மற்ற மாநிலங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஸ்கூட்டர்கள் 40 சதவிகிதம் ஆக உள்ளது. மேலும் புதிய மாடல் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோன்டா கிளிக் 110 சிசி மாடலில் பிஎஸ் 5 ஹிட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 102 கிலோ எடை கொண்டுள்ள ஹோன்டா கிளிக் சீரற்ற சாலைகளிலும் எளிமையாக இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு நிறங்களில் கிடைக்கும் கிளிக்குடன் பல்வேறு கூடுதல் உபகரணங்களும் வழங்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|