பதிவு செய்த நாள்
22 ஜூலை2017
00:13

மும்பை:தேசிய காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரை அலுவலக தலைமை அதிகாரி, ஓ.பி.குப்தா கூறியதாவது:தேசிய காப்புரிமை வாரியத்தை, அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்துடன் இணைக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள், இரு அமைப்புகளும் இணைக்கப்பட்டு, செயல்பட துவங்கிவிடும். காப்புரிமை வாரியம் செயல்பட துவங்கியதும், நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.
புதிய அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த பரிசீலனை நடைபெறுகிறது.காப்புரிமை விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து, மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதை, மேலும் குறைப்பதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன.நாடு முழுவதும், அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்தாண்டு, 200க்கும் அதிகமான பள்ளிகள், கல்லுாரிகளில், அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|