பதிவு செய்த நாள்
22 ஜூலை2017
00:29

சென்னை:தேசிய சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’–ன் தலைவர், ஆர்.சந்திரசேகர் கூறியதாவது:இந்திய, ஐ.டி., துறை, 39 லட்சம் பணியாளர்களுடன், 15,400 கோடி டாலர் விற்றுமுதலை கொண்டுள்ளது. இது, மேலும் அதிகரிக்க வேண்டும். அப்போது தான், வேலைவாய்ப்பும் உயரும்.
ஐ.டி., துறையில் தன்னிச்சையாக செயல்படும், ‘ரோபோ’ சாப்ட்வேர் பயன்பாடு காரணமாக, பணியாளர் எண்ணிக்கை குறைகிறது. இதை தவிர்க்க, பணியாளர்களின் திறனை மேம்படுத்த, ஐ.டி., நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வேலைகளுக்கு, அதிக திறனுள்ளோர் தேவைப்படுகின்றனர்.ஆகவே, வல்லுனர்களுக்கு மறுபயிற்சி வழங்கி, அவர்களின் திறனை மேம்படுத்துவது முக்கியமாகும்.
அது போல, வல்லுனர்களும், தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவில்லையென்றால், பணியில் நீடிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அமெரிக்காவில், புதிய தொழிற்நுட்பம் அல்லது வர்த்தகம் காரணமாக, ஆண்டுக்கு, 2.10 கோடி பேர் வேலை இழக்கின்றனர். அதே சமயம், புதிய தொழிற்நுட்பத்தின் அறிமுகத்தால், 2.30 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|