பதிவு செய்த நாள்
22 ஜூலை2017
00:40

புதுடில்லி:மத்திய அரசு, தோல் மற்றும் காலணி துறையின் ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்பை பெருக்க, 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான, ஊக்கச்சலுகை திட்டத்தை, விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஆண்டு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறைக்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான,ஊக்கச்சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது போல, தோல் மற்றும் காலணி துறையின் வளர்ச்சிக்கு, 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இத்திட்டத்திற்கு, நிதிச் செலவின குழு, ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, திட்ட வரைவு அறிக்கை, அனைத்து அமைச்சகங்களின் கருத்து கேட்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.விரைவில், இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும். இத்திட்டத்தின் கீழ், தோல், தோல் பொருட்கள், காலணிகள் உள்ளிட்ட துறைகளுக்கு, வரி மற்றும்அது சாரா சலுகைகள் கிடைக்கும்.தற்போது, தோல் மற்றும் காலணி துறையில், 30 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இத்துறையில், 1 கோடி ரூபாய் முதலீடு செய்தால், 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே, ஊக்கச்சலுகை திட்டம் மூலம், தோல் மற்றும் காலணி தயாரிப்பு துறையில் வேலைவாய்ப்பு பெருகும். அத்துடன், ஏற்றுமதியில், சீனாவின் கடுமையான போட்டியை சமாளிக்க முடியும் என, மத்திய அரசு கருதுகிறது.தற்போது, இத்துறையின் ஏற்றுமதி, 700 கோடி டாலராக உள்ளது. இதை, 2020ல், 1,500 கோடி டாலராக உயர்த்த, அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்கு, ஊக்கச்சலுகை திட்டம் பெரிதும் துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|