பதிவு செய்த நாள்
22 ஜூலை2017
00:42

நாங்கள், அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறோம். ஒரு திருமண மண்டபத்தை கட்டி, அதை வாடகைக்கும் விடுகிறோம். இத்தகைய சூழலில், நாங்கள், அந்த வாடகைக்கு, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமா?– நாராயணன், ஈரோடுநீங்கள், வருமான வரி சட்டத்தில் விலக்கு பெற்றிருந்தால், உங்கள் மண்டபத்தின் வாடகை ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், நீங்கள், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டாம்.
ஐயா, நாங்கள் தவறான, ‘பான்’ எண் மூலம், ஜி.எஸ்.டி.ஆர்., பதிவை, ‘மைக்ரேஷன்’ மூலம் பெற்றுவிட்டோம். தற்போது, ‘பான்’ எண்ணை மாற்ற முடியுமா?– செல்வா, ராசிபுரம்நீங்கள், ‘பான்’ எண்ணை மாற்ற இயலாது. புதிய, ஜி.எஸ்.டி., எண்ணை பெற வேண்டும்.
சார், நான் மூலதன சரக்குகள் மீது, ஐ.டி.சி., பெற்று பதிவு செய்துவிட்டேன். மூலதன சரக்குகளை விற்பனை செய்தால், வரியின் தாக்கம் என்னவாக இருக்கும்?– நல்லதம்பி, சாத்துார்பதிவு செய்தவர் மூலதன பொருளை வாங்கும் போது பெற்ற, ஐ.டி.சி.,க்கு நிகரான, சதவீத புள்ளி அடிப்படையில், குறைக்கப்பட்ட தொகையையோ அல்லது மூலதன சரக்குகள் பரிமாற்றத்தின் மீதான வரியையோ (எது அதிகமோ அதை) செலுத்த வேண்டும்.
சார், நாங்கள் வழங்குதலுக்கான முன்பதிவு பெற்றுள்ளோம். இந்த முன்பதிவிற்கும் வரி வசூல் செய்ய வேண்டுமா?– மிதுன்ராஜ், ஊட்டிஆம். வழங்கல்களுக்கான முன்பதிவு பெற்ற வழங்குனர், அதற்கான, ஜி.எஸ்.டி.,யை செலுத்த வேண்டும்.
நான், தகவல் தொழிற்நுட்பத் துறையில் வரி செலுத்தும் ஒரு நபர். நிர்வாக இயக்குனர்களின் பயன்பாட்டிற்காக, மோட்டார் வாகனம் வாங்கினால், அதிலுள்ள, ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரி பயனாக பெற இயலுமா?– சுப்ரமணியன், சிதம்பரம்முடியாது. பயணியர் பயணிக்கும் வாகன நிறுவனம், சரக்குகள் பரிமாறும் அல்லது மோட்டார் வாகன பயிற்சி தரும் போக்குவரத்து துறையில் இருந்தால் மட்டுமே, ஒருவரால் மோட்டார் வாகனத்தின் மீது, உள்ளீட்டு வரி பயனை பெற முடியும். தகவல் தொழிற்நுட்பத் துறையில் இருக்கும் நீங்கள், வாகனத்தை அலுவலக பயன்பாட்டிற்காக வாங்கினாலும் கூட, உள்ளீட்டு வரி பயன் பெற இயலாது.
ஐயா, நான் வழங்கலில் ஈடுபட்டுள்ளேன். வழங்கல்களின் போது கொடுக்கப்படும் தள்ளுபடி தொகைக்கும், ஜி.எஸ்.டி., உண்டா?– கார்த்திகேயன், காஞ்சிபுரம்ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் வழங்கல்களுக்கு, தள்ளுபடி தொகையில், ஜி.எஸ்.டி., இல்லை.
நான், ‘ஜாப் ஒர்க்’ எடுத்து செய்யும் ஒரு பணியாளர். நான், ஜி.எஸ்.டி., பதிவு கட்டாயம் செய்ய வேண்டுமா? – ஷண்முகநாதன், சேலம்‘ஜாப் ஒர்க்’ ஒரு சேவை என்பதால், உங்களது ஆண்டு வருமானம் ஆரம்ப நிலையை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், பதிவு அவசியமில்லை.
ஐயா, அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் அத்தியாவசியமான பொருட்களுக்கும், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுமா?–தெய்வநாயகம், சென்னைபரிமாற்றங்கள் வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தில் இருந்தால், வழங்கப்பட்ட பொருட்களுக்கும், ஜி.எஸ்.டி.,யின் கீழ் வரி விதிக்கப்படும். மேலும், இதில் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படுவதின் மூலம் கொடுக்கல், வாங்கல் வியாபாரம் இல்லையென்றால், ஜி.எஸ்.டி.,யின் கீழ் வரி விதிக்கப்படமாட்டாது.
ஜி.எஸ்.டி.,யின் கீழ் வழங்குபவர் அல்லது பெறுபவர் இவர்களை தவிர, வேறு யாராவது வரி செலுத்த வேண்டுமா?– ராமஜெயம், திண்டிவனம்ஆம். மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட வகையான சில சேவைகளுக்கு வரி விதித்துள்ளது. அது, மின்னணு வர்த்தகத்தை இயக்குபவரின் சேவைகளாகும். சேவைகள் அதன் வழியாக வழங்கப்பட்டிருந்தால், அனைத்து சட்ட விதிமுறைகளும், இந்த மின்னணு வர்த்தகத்தை இயக்குபவரின் சேவைகளுக்கு பொருந்தும். அம்மாதிரி சேவைகளை வழங்கிய நபர், வரி செலுத்த கடமைப்பட்டவர் ஆவார்.ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|