தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ... மொபைல் போன் தயாரிப்பு  ரூ.90 ஆயிரம் கோடியை எட்டியது மொபைல் போன் தயாரிப்பு ரூ.90 ஆயிரம் கோடியை எட்டியது ...
ஜி.எஸ்.டி.,கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2017
01:43

​​ஏற்­று­மதி செய்­யும் போது உள்ள வழி­மு­றை­கள், ஜி.எஸ்.டி., சட்­டம் வந்த பின் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளதா?--– கன­க­வேல், சென்னை

ஆம். தற்­போது, ​​ஏற்­று­மதி செய்­யும் போது உள்ள வழி­மு­றை­கள் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்டு உள்ளன. ஆவ­ணங்­களின் பதிவு​,​ வழி­மு­றை­களும் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இருக்­கும். இதற்கு முன், தாக்­கல் செய்த, ஏ.ஆர்.இ., -1 மற்­றும் ஏ.ஆர்.இ., -2 படி­வங்­கள், தற்­போது தாக்­கல் செய்­யத் தேவை­யில்லை. ‘ஷிப்­பிங் பில்’ மட்­டும் இருந்­தால் போது­மா­னது.

எஸ்.இ.இசட்., எனப்­படும், சிறப்பு பொரு­ளா­தார மண்­டல பகு­தி­யி­லுள்ள ஒரு நிறு­வ­னத்­திற்கு, வழங்­கல் செய்ய வேண்­டு­மெ­னில், கண்­டிப்­பாக, ஜி.எஸ்.டி., பதிவு பெற்­றி­ருக்க வேண்­டும் என, கூறு­கின்­ற­னர்​.​ இதை சற்று விளக்­க­வும்.– ஜலா­லு­தீன், ஐத­ர­ாபாத்

சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­ல­மா­னது, தனி அங்­கீ­கா­ரம் பெற்­றுள்­ளது. சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்­திற்கு வழங்­கக் கூடிய வழங்­கல்­கள், வெளி மாநில வழங்­க­லாக கரு­தப்­படும். எனவே, பதிவு பெற்ற நபர் மட்­டுமே, வெளி மாநில வழங்­க­லில் ஈடு­பட முடி­யும் என்­ப­தால், இத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு, ஜி.எஸ்.டி., பதிவு அவ­சி­யம்.

நாங்­கள், பொருட்­களை வெளி நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்து வரு­கி­றோம். அத்­த­கைய பொருட்­களை, மீண்­டும் வேறு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்து விடு­கி­றோம். ஜி.எஸ்.டி., சட்­டத்­திற்கு முன், இத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு வரியை திரும்ப பெறும் சலுகை இருந்­தது. ஜி.எஸ்.டி., வந்த பின், அத்­த­கைய சலுகை தொட­ருமா? ஜி.எஸ்.டி.,க்கு முன் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பொருட்­களை, ஜி.எஸ்.டி.,க்கு பின் ஏற்­று­மதி செய்­தோ­மா­னால், அத்­த­கைய பயன் கிடைக்­குமா?– கந்­த­சாமி, பெங்­க­ளூரு

ஜி.எஸ்.டி.,க்கு முன் இருந்த​ அனைத்து ​சலு­கை­களும் கிடைக்க பெறும். ஜி.எஸ்.டி., வந்த பின்­ன­ரும் கூட, வரியை திரும்ப பெறும் சலுகை தொட­ரும். இறக்­கு­ம­தி­யின் போது செலுத்­திய, ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., மற்­றும் காம்­பென்­சே­ஷன் செஸ் வரியை, ‘ரீபண்டு’ ஆக திரும்ப பெற­லாம்.

சார், நான் உண­வ­கம் வைத்­துள்­ளேன். கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்­தால், 5 சத­வீ­தம், சி.ஜி.எஸ்.டி., மற்­றும் 5 சத­வீ­தம், எஸ்.ஜி.எஸ்.டி., ​வரி ​செலுத்த வேண்­டுமா?– வாகை, அருப்­புக்­கோட்டை

உண­வ­கம் வைத்­தி­ருக்­கும் ஒரு நபர், கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்­யும் போது, மொத்­த­மாக சலுகை வரி­யான, 5 சத­வீ­தத்தை செலுத்­தி­னால் போதும். இத்­த­கைய வரி சத­வீ­தம், சி.ஜி.எஸ்.டி., 2.5 சத­வீ­த­மா­க­வும், எஸ்.ஜி.எஸ்.டி., 2.5 சத­வீ­த­மா­க­வும் பிரிக்­கப்­பட்டு செலுத்த வேண்­டும்.

நான், கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்­துள்­ளேன். என் வழங்­க­லின் விலைப் பட்­டி­ய­லில், மாற்­றம் ஏதே­னும் செய்ய வேண்­டுமா?– குண­நிதி, விழுப்­பு­ரம்

ஆம். உங்­களின் விலைப் பட்­டி­ய­லில், ‘டேக்ஸ் இன்­வாய்ஸ்’ என, குறிப்­பி­டு­வ­தற்கு பதில், ‘பில் ஆப் சப்ளை’ எனக் குறிப்­பிட்டு, வரி வசூல் செய்­யா­மல் வழங்க வேண்­டும்.

நான், ஒரு மென்­பொ­ருள் நிறு­வ­னத்­தில் வேலை செய்­கி­றேன். என் காரை, தற்­போது, 4 ​லட்­சம் ரூபாய்க்கு விற்­பனை செய்ய உள்­ளேன். இதில், ஜி.எஸ்.டி., உண்டா? இந்த காரை, என் நிறு­வ­னம் வாங்­கி­னால், அதற்கு நிறு­வ­னம் வரி செலுத்த வேண்­டுமா?– வெங்­கட்­ரா­மன், சென்னை

இத்­த­கைய பரி­வர்த்­தனை வியா­பா­ரத்­தின் போதோ அல்­லது அதன் முன்­னேற்­றத்­திற்­கா­கவோ நடத்­தப்­படும் வழங்­க­லாக கரு­தப்­பட மாட்­டாது. எனவே, இதில், ஜி.எஸ்.டி., இருக்­காது. உங்­கள் நிறு­வ­னம், உங்­க­ளி­ட­மி­ருந்து காரை வாங்­கி­னா­லும், அதற்கு வரி செலுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

நாங்­கள், தமி­ழ­கத்­தில் எங்­க­ளது நிறு­வ­னம் மூலம், பொருட்­களை உற்­பத்தி செய்து வரு­கி­றோம். தனி­யாக எங்­கள் பொருட்­க­ளை­யும், இதர பொருட்­க­ளை­யும் விற்­ப­னை­யும் செய்து வரு­கி­றோம். இப்­போது, நாங்­கள் உற்­பத்­திக்கு தனி­யா­க­வும், விற்­ப­னைக்கு தனி­யா­க­வும், ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்­டுமா?– சாரதா, காஞ்­சி­பு­ரம்

நீங்­கள், இரு பதிவு பெற வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை. ஒரே, ஜி.எஸ்.டி., எண் பெற்று உற்­பத்தி, விற்­பனை மற்­றும் சேவை என, ​அனைத்து​ வழங்­கல்­க­ளி­லும் ஈடு­ப­ட­லாம்.

நான், கலவை வரி நிலையை தேர்வு செய்­துள்­ளேன். என் ஆண்டு மொத்த விற்­பனை, 75 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது, நான் ஆண்டு முடிவு வரை, கலவை வரி நிலை­யி­லேயே தொடர முடி­யுமா?– கோபி, ஆரணி

அவ்­வாறு தொடர முடி­யாது. உங்­கள் ஆண்டு விற்­பனை, 75 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது​,​ நீங்­கள் சாதா­ரண வரி திட்­டத்­திற்கு மாறி விடு­வீர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)