உணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடுஉணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடு ... பங்குச் சந்தை பங்குச் சந்தை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மியூச்­சுவல் பண்ட் முத­லீடு தரும் பலன்கள் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
02:11

அவ­சர கால நிதியை உரு­வாக்­கு­வதில் இருந்து, ஓய்வு காலத்­திற்­கான வரு­மானம் வரை பல­வித தேவை­களை நிறை­வேற்­றிக் ­கொள்ள மியூச்­சுவல் பண்ட்கள் கைகொ­டுக்கும்.
பல­ வ­கை­யான முத­லீட்டு வாய்ப்­பு­களில் பரஸ்­பர நிதி என கூறப்­படும் மியூச்­சுவல் பண்ட்கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. முத­லீட்­டா­ளர்கள் தங்கள் தேவைக்கு பொருத்­த­மான மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களை தேர்வு செய்து முத­லீடு செய்­வது நல்ல பலன் அளிக்கும் என, நிதி வல்­லு­னர்­களும் வலி­யு­றுத்­து­கின்­றனர். நேர­டி­யாக பங்­குச்­சந்­தையில் முத­லீடு செய்­யாமல் அதன் பலனை பெறு­வ­தற்­கான வழி­யாக கரு­தப்­படும் மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் பல­வகை இருக்­கின்­றன. சம­பங்­கு­களில் முத­லீடு செய்யும் ஈக்­விட்டி பண்ட், கடன் சார் முத­லீ­டு­களில் முத­லீடு செய்யும் டெப்ட் பண்ட், குறு­கிய கால முத­லீட்­டிற்கு ஏற்ற லிக்விட் பண்ட், சம­பங்கின் பல­னையும், டெப்ட் பண்டின் பாது­காப்­பையும் இணைந்து வழங்கும் பேலன்ஸ்டு பண்ட் உள்­ளிட்ட பல­வ­கை­யான திட்­டங்கள் இருக்­கின்­றன. முத­லீட்­டா­ளர்கள் இவற்றில் தங்கள் தேவை மற்றும் நிதி சூழ­லுக்கு ஏற்ற திட்­டங்­களை தேர்வு செய்து முத­லீடு செய்­வது அவ­சியம் என, நிதி வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். பொருத்­த­மான மியூச்­சுவல் பண்ட் திட்­டத்தின் மூலம் பல தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும். எஸ்.ஐ.பி., என சொல்­லப்­படும் குறிப்­பிட்ட கால அளவில் சீராக முத­லீடு செய்யும் திட்­டங்கள் சிறந்த சேமிப்பு பழக்­க­மாக அமை­வ­தோடு, நீண்ட கால நோக்கில் நல்ல பல­னையும் அளிக்க வல்­லவை. அவ­ச­ர­கால நிதிநீண்ட கால இலக்­குகள் போலவே திடீ­ரென எதிர்­பா­ராமல் ஏற்­படும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ளும் ஆற்­றலும் முக்­கியம். இதற்­காக அவ­ச­ர­கால நிதியை உரு­வாக்கி கொள்ள வேண்டும் என்­கின்­றனர். இந்த நிதியை உரு­வாக்க லிக்விட் பண்ட் ரக திட்­டங்கள் ஏற்­றவை. மாதம் ஒரு குறிப்­பிட்ட தொகையை இந்த வகை திட்­டத்தில் முத­லீடு செய்­வதன் மூலம் சில ஆண்­டு­களில் கணி­ச­மான தொகையை அவ­சர நிதி­யாக உரு­வாக்கி கொள்­ளலாம். எதிர்­பா­ராத நெருக்­க­டி­களில் இது கைகொ­டுக்கும். லிக்வின் பண்ட் திட்டம் சேமிப்பு கணக்கை விட மேம்­பட்­டது. அதே நேரத்தில் தேவை­யான போது பணத்தை எடுத்துக் கொள்­ளலாம்.இதே போல சொந்த வீடு வாங்­கு­வ­தற்­கான முன்­ப­ணத்தை திரட்­டவும் மியூச்­சுவல் பண்ட் முத­லீட்டை நாடலாம். வீட்டுக் கடன் பெற முன்­ப­ண­மாக எவ்­வ­ளவு தொகை தேவைப்­படும் என கணக்­கிட்டு அதற்­கேற்ப பொருத்­த­மான திட்­டத்தில் மாதந்­தோறும் முத­லீடு செய்து வரலாம். வீடு வாங்­கும்­போது இந்த தொகை கைகொ­டுக்கும். பெரும்­பா­லானோர் முன்­ப­ணத்­திற்­காக நீண்ட கால சேமிப்­பாக, பி.எப்., பணத்தில் கைவைப்­பதை வழக்­க­மாக கொண்­டுள்­ளனர். இதை தவிர்க்க வேண்டும் என, நிதி வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர்.போனஸ் முத­லீடுபெரும்­பா­லானோர் போனஸ் போன்­றவை மூலம் பெருந்­தொகை கிடைக்கும் போது அதை செலவு செய்­யவே முற்­ப­டு­கின்­றனர். இந்த தொகையை இஷ்டம் போல செலவு செய்­வதை விட, முத­லீடு செய்­வதே சரி­யாக இருக்கும். வைப்பு நிதி போன்­ற­வற்றில் முத­லீடு செய்­வதை விட டெப்ட் பண்ட் வகை திட்­டத்தில் முத­லீடு செய்­யலாம். வரி சேமிப்­புக்கும் இது உத­வலாம். வைப்பு நிதியில் முத­லீடு செய்­யும்­போது அதன் பலன் முத­லீடு செய்­ப­வரின் வரு­மான வரி வரம்­பிற்கு ஏற்ப வரி உண்டு.இதே­போல இலக்­கு­களை நிறை­வேற்றிக் கொள்­ளவும் மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களை நாடலாம். எல்­லா­ருக்­குமே இலக்­குகள் உண்டு. பிள்­ளைகள் உயர் கல்வி முதல் வெளி­நாட்டு விடு­முறை வரை பல­வித இலக்­குகள் இருக்­கலாம். இவற்­றுக்­கான தொகையை திரட்­டு­வது எப்­படி? எஸ்.ஐ.பி., எனப்­படும், ‘சிஸ்­ட­மேட்டிக் இன்­வெஸ்ட்மென்ட் பிளான்’ வகை திட்­டங்­களில் பொருத்­த­மா­னதை தேர்வு செய்து மாதம் ஒரு தொகையை முத­லீடு செய்தால் இலக்­கிற்­கான நிதியை தயார் செய்து கொள்­ளலாம்.இதே­போல ஓய்வு காலத்தில் இருப்­ப­வர்­களும் தங்­க­ளுக்கு தேவைப்­படும் மாத வரு­மா­னத்­திற்கு எஸ்.டபிள்யூ.பி., எனப்­படும், ‘சிஸ்­ட­மேட்டிக் வித்­டி­ராயல் பிளான்’ வகை திட்­டங்­களில் முத­லீடு செய்­யலாம். இது, எஸ்.ஐ.பி., திட்­டங்­களில் தலைகீழ் வடிவம். முதலில் ஒரு பெரிய தொகையை முத­லீடு செய்து விட்டு, அதன் மூலம் மாதம் ஒரு குறிப்­பிட்ட தொகையை பெற்­றுக் ­கொள்­ளலாம். இவற்றில் சம்­பங்கு நிதி­களும் இருக்­கின்­றன என்­றாலும், கடன்சார் நிதி­களை நாடு­வது பாது­காப்­பாக இருக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது.
மொபைல் போனில் ஆதார் தக­வல்கள்
ஆதார் அட்டை தக­வல்கள் தேவைப்­படும் இடங்­களில் அவற்றை மொபைல் போன் மூலம் சமர்ப்­பிக்க உதவும் வகையில், ஸ்மார்ட்­போனில் ஆதார் தக­வல்­களை சமர்ப்­பிக்க வழி செய்யும், ‘எம் ஆதார்’ செயலி அறி­முகம் ஆகி­யுள்­ளது. (https://uidai.gov.in)ஆதார் எண்­களை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு இந்த செய­லியை ஆண்ட்­ராய்டு போன்­க­ளுக்­காக அறி­முகம் செய்­துள்­ளது. இதன் மூலம் பய­னா­ளிகள், ஆதார் அட்­டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம், முக­வரி மற்றும் புகைப்­படம் உள்­ளிட்ட தக­வல்­களை தங்கள் போனில் வைத்­தி­ருக்க முடியும். இவற்றை ஆதார் தக­வல்கள் தேவைப்­படும் இடத்தில் பயன்­ப­டுத்­தலாம். ஆதார் அட்­டையை கையில் வைத்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை.ஆதார் எண்­ணுடன் பதிவு செய்த மொபைல்போன் எண் மூலம் இந்த செய­லியை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். தக­வல்­களை இடம்­பெ­றச்­ செய்­வ­தோடு, பயோ­மெட்ரிக் தக­வல்­களை மற்­ற­வர்கள் அணு­க­ மு­டி­யாத வகையில் லாக் செய்து கொள்ளும் வச­தியும் அளிக்­கப்­பட்­டுள்­ளது. ஆதார தக­வல்­களை அப்டேட் செய்து கொள்ளும் வச­தியும் இருக்­கி­றது. ‘கியூ ஆர் கோட்’ மற்றும் இ.கே.ஒய்.சி., விப­ரங்­க­ளையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்­ளலாம். ஒரு போனில் ஒரு முறை மட்­டுமே ஆதார் தக­வல்­களை தர­வி­றக்கம் செய்ய முடியும். குடும்ப உறுப்­பி­னர்­களின் தக­வல்­க­ளையும் இணைத்துக் கொள்­ளலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)