உணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடுஉணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடு ... சந்தை ஏன் இவ்­வ­ளவு உயர்ந்து நிற்­கிறது? சந்தை ஏன் இவ்­வ­ளவு உயர்ந்து நிற்­கிறது? ...
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
02:13

இந்­திய பங்­குச் சந்தை, வர­லாற்று உயர்­வில் இருந்து, கடந்த வாரம், சிறிய இறக்­கம் கண்டு முடி­வ­டைந்­தது. தேசிய பங்­குச் சந்தை, ‘நிப்டி’ குறி­யீட்டு எண், 9,900 புள்­ளி­களை கடந்து வியா­பா­ரம் ஆனது.ஜூலை, 14 முதல், நிப்டி, 9,900 என்ற நிலை­யில், சீராக வர்த்­த­கம் நடை­பெ­று­கிறது. சர்­வ­தேச சந்­தை­யில் ஏற்­பட்ட உயர்வு, அத­னு­டன் ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தின் முதல் காலாண்டு நிதி அறிக்கை லாப­க­ர­மாக அமைந்­த­தால், அந்த பங்கு உயர்ந்­த­து­டன், மொத்த சந்­தை­யில் ஏறு­மு­கம் காணப்­பட்­டது.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, இரு முக்­கிய நிகழ்­வு­களின் அடிப்­ப­டை­யில், சந்தை போக்கு இருக்­கும். முத­லா­வ­தாக, வர இருக்­கும் நிறு­வ­னங்­களின் முதல் காலாண்டு நிதி அறிக்கை. இரண்­டா­வ­தாக, எப் அண்டு ஓ செட்­டில்­மென்ட் ஆவது.எச்.டி.எப்.சி., பேங்க், ஆக்­சிஸ் பேங்க், யெஸ் பேங்க், பெட­ரல் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் போன்ற தனி­யார் வங்­கி­கள் மற்­றும் பல முன்­னணி நிறு­வ­னங்­களின் காலாண்டு அறிக்­கை­கள் வர உள்ளன. இதில், ஐ.டி.சி., ஏசி­யன் பெயின்ட்ஸ், எச்.சி.எல்., ஜீ, எல் அண்டு டி, மாருதி போன்­ற­வை­யும் அடங்­கும்.இந்த வார­மும், சந்­தை­யின் போக்­கில் ஏறு­மு­கம் காணப்­படும். ‘நிப்டி’ குறி­யீட்டு எண், 10 ஆயி­ரம் என்ற நிலையை கடக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இச்­சூ­ழ­லில், சில சர்­வ­தேச நிகழ்­வு­களும், அதன் தாக்­கத்தை, நம் சந்­தை­யில் பிர­தி­ப­லிக்­கும்.புதன்­ கி­ழமை நடை­பெற உள்ள, அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் வட்டி விகித கூட்­டத்­தில், வட்டி விகி­தம், 1.25 சத­வீ­தம் என்­ப­தில், எந்த மாற்­ற­மும் இருக்­காது என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எனி­னும், அடுத்து வரும் கூட்­டங்­களில், வட்டி விகித உயர்வு குறித்த எதிர்­பார்ப்­பும் இதில் அடங்­கும்.மேலும், 28ல் வெளி­வர உள்ள, இரண்­டாம் காலாண்­டின் (ஏப்., – ஜூன் வரை) மொத்த உள்­நாட்டு உற்­பத்தி விப­ர­மும் வெளி­வர உள்­ளது. மேலும், இன்று, ‘ஒபெக்’ கூட்­ட­மைப்பு நாடு­களின் சந்­திப்பு நடை­பெற உள்­ளது. இதில், எண்­ணெய் உற்­பத்தி குறைப்பு பற்றி விவா­திக்­கப்­படும்.வரும் நாட்­களில், ‘நிப்டி’ நிலை­யில், 10,045 இலக்­கா­கும்; 9,815 சப்­போர்ட் ஆகும்.
கமாடிட்டி சந்தை
கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் துவக்­கத்­தில் உயர்வை கண்­டும், வார இறு­தி­யில் சரிவை சந்­திக்க நேர்ந்­தது. வாரம் ஒரு­முறை வெளி­வ­ரும் அமெ­ரிக்க எண்­ணெய் இருப்பு, ஜூலை, 14 உடன் முடி­வ­டை­யும் வாரத்­தில், 4.7 மில்­லி­யன் பேரல்­கள் குறைந்­தது. எதிர்­பார்த்­தது, 3.2 மில்­லி­யன் பேரல். எதிர்­பார்த்­ததை விட, அதி­க­மாக குறைவு ஏற்­பட்­ட­தால், சந்­தை­யில் விலை உயர்ந்து, ஒரு பேரல், 47.73 டாலர் என்ற உச்­சத்தை தொட்­டது. இருப்­பி­னும், விலை உயர்வு கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.கார­ணம், ஒபெக் நாடு­கள் தங்­கள் உற்­பத்­தி­யில், தின­சரி, 1.8 மில்­லி­யன் பேரல்­களை குறைக்க தீர்­மா­னித்­தது. இதில், நைஜீ­ரியா மற்­றும் லிபியா நாடு­க­ளுக்கு விலக்­க­ளிக்­கப்­பட்­டது. மேலும், பெருகி வரும் அமெ­ரிக்க எண்­ணெய் உற்­பத்தி, 2015யை விட அதி­க­ரித்து, தின­சரி, 9.43 மில்­லி­யன் பேரல்­கள் ஆனது.கடந்த வெள்­ளி­யன்று வெளி­வந்த சந்தை புள்ளி விப­ரப்­படி, ஒபெக் நாடு­களின், ஜூலை எண்­ணெய் உற்­பத்தி, 1.45 லட்­சம் பேரல்­கள் அதி­க­ரித்­தது. இது, ஜூன் மாதத்தை விட அதி­கம். இத­னால், சந்­தை­யில் எண்­ணெய் விலை சரிந்­தது.இன்று, ஒபெக் கூட்­ட­மைப்பு நாடு­களின், எண்­ணெய் துறை அமைச்­சர்­கள் ஒன்று கூடி, விலை பற்றி ஆலோ­சிக்க உள்­ள­னர். இந்த ஆண்டு துவக்­கம் முதல், இது­வரை, 12 சத­வீ­தம் விலை சரிந்­துள்­ளது. வரும் நாட்­களில், சர்­வ­தேச சந்­தை­யில், 45.50 டாலர் நல்ல சப்­போர்ட் ஆகும். இதை கடக்­கும் நிலை­யில், இதன் சரிவு தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
தங்கம்
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள், இரண்­டா­வது வார­மாக உயர்ந்து காணப்­ப­டு­கின்றன. அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான, யூரோ­வின் மதிப்பு கடு­மை­யாக உயர்ந்து, 14 மாத உச்­சத்­தில் வியா­பா­ர­மா­கிறது.அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு குறைவு, சந்­தை­யில் தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள் உயர கார­ண­மா­கி­யது. கடந்த, 20ல் நடை­பெற்ற, ஐரோப்­பிய மத்­திய வங்­கி­யின் நிதி கொள்கை கூட்­டத்­தில், நாட்­டின் தாராள நிதி கொள்­கை­யில், படிப்­ப­டி­யாக மாற்­றங்­கள் கொண்டு வரப்­படும் என, தெரி­விக்­கப்­பட்­டது. இதன்­பின், சந்­தை­யில் யூரோ நாண­யத்­தின் மதிப்பு உயர்ந்­தது.எஸ்.பி.டி.ஆர்., எனப்­படும், உல­கின் மிகப்­பெ­ரிய தங்க முத­லீட்டு பண்டு நிறு­வ­னத்­தின் இருப்பு அளவு, பிப்­ர­வ­ரியை விட குறைந்­துள்­ளது.பொது­வாக, அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்­சின் மதிப்பு கூடும் போதும், குறை­யும் போதும், அது தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­களில், எதிர்­தி­சை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.மேலும், பெருகி வரும் வட­கொ­ரி­யா­வின் ஏவு­கணை சோதனை, உல­க­ள­வில் பெரும் சஞ்­ச­லத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதன் கார­ண­மாக, சில முத­லீட்­டா­ளர்­கள், தங்­கள் முத­லீ­டு­களை பாது­காப்பு கருதி, தங்­கத்­தின் மீது திருப்பி வரு­கின்­ற­னர். இத­னா­லும், சந்­தை­யில் சாத­க­மான போக்கு நில­வு­கிறது. வரும் நாட்­க­ளி­லும், இது தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

செம்பு
கடந்த வாரம், செம்­பின் விலை உயர்ந்து வர்த்­த­க­மா­னது. தொழிற்­சாலை துறை­யில், அதி­க­ளவு நுகர்வு தேவை கொண்ட நாடு சீனா. சீனா­வின் தேவை உய­ரும் போது, சந்­தை­யில் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு விலை உய­ரும். இதன் அடிப்­ப­டை­யில், சமீ­பத்­தில் வெளி­வந்த சீன நாட்­டின் பொரு­ளா­தார கார­ணி­யான, ஜி.டி.பி., நடப்­பாண்­டின் இரண்­டாம் காலாண்­டில், அதா­வது, ஏப்., – ஜூன் வரை­யி­லான காலத்­தில், 6.9 சத­வீ­தம் வளர்ச்­சி­ய­டைந்து உள்­ளது. இது, சந்­தை­யில் பெரி­ய­ள­வில் தொழிற்­சாலை இடு­பொ­ருட்­களின் விலைக்கு சாத­க­மாக அமைந்­தது. லண்­டன் எக்­சேஞ்ச் செம்பு விலை, ஐந்து மாதங்­களை விட உயர்ந்து காணப்­ப­டு­கிறது.சர்­வ­தேச செம்பு ஆய்வு குழு­மம், சுரங்க உற்­பத்தி, 3.5 சத­வீ­தம் அள­வுக்கு, இந்த ஆண்­டின் முதல் நான்கு மாதங்­களில் குறைந்து உள்­ள­தாக தெரி­வித்­தது. இருப்­பி­னும், இக்­கால கட்­டத்­தில் நுகர்வு தேவை, 3 சத­வீ­தம் குறைந்­து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)