சந்தை ஏன் இவ்­வ­ளவு உயர்ந்து நிற்­கிறது?சந்தை ஏன் இவ்­வ­ளவு உயர்ந்து நிற்­கிறது? ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.43 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.43 ...
எப்­போது திரும்பி வரும் ரூ.2 லட்­சம் கோடி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
02:14

வங்­கி­களின் வாராக்­க­டனை வசூல் செய்ய வந்­தி­ருக்­கும், வலி­மை­யான ஆயு­தம் தான், புதிய திவால் சட்­டம். 12 பெரிய நிறு­வ­னங்­கள் மீது, சட்ட ரீதி­யாக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­யால், 2 லட்­சம் கோடி ரூபாய் திரும்ப வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அவ்­வ­ள­வும் திரும்பி வருமா?

வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்னை, பெரிய தலை­வலி. பொதுத் துறை வங்­கி­களும், தனி­யார் வங்­கி­களும் என்ன தான் லாபம் சம்­பா­தித்­தா­லும், ஏற்­க­னவே கொடுத்து, திரும்ப வரா­மல் போன தொகை, அவற்­றின் ஒட்­டு­மொத்த வலி­மையை சிதைக்­கின்றன.பல வங்­கி­கள், வாராக்­க­டன்­களை சீர்­செய்ய, பல முயற்­சி­களை மேற்­கொண்­டன. குறிப்­பாக, கடனை திருப்­பித் தர வேண்­டிய காலத்தை, 20 – 25 ஆண்­டு­கள் வரை நீட்­டித்­துக் கொடுத்­தன. புதிய கடன்­கள் மூலம், பல நிறு­வ­னங்­களை இயங்க செய்து, அதன் மூலம் வரு­வாய் ஈட்டி, பழைய கடன்­களை பைசல் செய்ய வாய்ப்பு அளித்­தன. இவை எது­வுமே பயன் தர­வில்லை.இந்­நி­லை­யில் தான், புதிய திவால் சட்­டம் அம­லுக்கு வந்­தது. கூடவே, மத்­திய அரசு, கடனை திரும்­பச் செலுத்­தாத நிறு­வ­னங்­கள் மீது, உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு, மத்­திய ரிசர்வ் வங்­கிக்கு அனு­ம­தி­யும் வழங்­கி­யது. விளைவு, கடன்­களை கட்­டாத, 500 நிறு­வ­னங்­களை, ஆர்.பி.ஐ., ஆய்­வுக்கு உட்­ப­டுத்தி, அதில், முதல், 12 நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை வெளி­யிட்­டது.சிக்கல்கள்இவர்­கள் எல்­லா­ரும், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்­ற­வர்­கள். அதில், 60 சத­வீ­தம் வரை, வாராக்­க­டன்­க­ளாக மாறி­விட்­டவை. மிச்­ச­முள்ள, 488 நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து, அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­குள் கடனை வசூல் செய்ய வேண்­டும். திரும்­பப் பெற முடி­ய­வில்லை என்­றால், அவை­யும் திவால் சட்­டத்­தின் கீழ் கொண்டு வரப்­படும்.தேசிய நிறு­வன சட்ட தீர்ப்­பா­யம் தான், 12 நிறு­வ­னங்­களின் தலை­யெ­ழுத்தை நிர்­ண­யிக்­கப் போகும் இடம். வழக்கு பதிந்த, 14 நாட்­க­ளுக்­குள், குறிப்­பிட்ட நிறு­வ­னத்­தின் மீது, திவால் நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கும் முடிவை, தீர்ப்­பா­யம் எடுக்­கும். அனு­ம­திக்­கப்­பட்­டால், திவால் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளும் அலு­வ­லரை, தீர்ப்­பா­யம் நிய­மித்து, 180 நாட்­க­ளுக்­குள், அதற்­கான திட்­டத்தை வழங்­கச் சொல்­லும். தேவைப்­பட்­டால், கூடு­த­லாக, 90 நாட்­களும் வழங்­கப்­படும். 270 நாட்­களில், குறிப்­பிட்ட நிறு­வ­னங்­களின் நிர்­வா­கக் குழு இயங்க முடி­யாது.இந்த கால கட்­டத்­திற்­குள், பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தை வேறொ­ரு­வரோ, வேறு குழு­மமோ வாங்­கு­வ­தற்கு ஏது­வான திட்­டத்தை தயா­ரித்து வழங்க வேண்­டும். 270 நாட்­க­ளுக்­குள் திட்­டம் ஏதும் உரு­வா­க­வில்லை என்­றால், அந்­நி­று­வ­னத்­தின் சொத்­து­களை ஏலத்­துக்கு கொண்டு வரு­வதை தவிர, வேறு வழி­யில்லை.அப்­பாடா! சட்ட நட­வ­டிக்கை என்ன என்­பதை, ஒரு மாதிரி, 250 வார்த்­தை­க­ளுக்­குள் சொல்­லி­விட்­டேன். பிரச்­னைக்கு வரு­வோம். எங்­களை மட்­டும் ஏன் தனி­மைப்­ப­டுத்தி, நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என, பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள் நீதி­மன்­றங்­களை அணு­கின. ஆனால், அவை நிரா­க­ரிக்­கப்­பட்­டன என்­பது நல்ல செய்தி. அதே சம­யம், வேறு சில முக்­கி­ய­மான கேள்­வி­கள் தான், திவால் நடை­மு­றையை சிக்­க­லாக்­கு­கின்றன.முதல் விஷ­யம், பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­களை யார் வாங்­கு­வ­தற்கு முன்­வ­ரு­வர்? அவை, ஏற்­க­னவே நஷ்­ட­மான நிறு­வ­னங்­கள். அதன் மீது இருக்­கும் கடன்­களோ எக்­கச்­சக்­கம். வாங்­கு­ப­வர்­க­ளுக்கு சாத­க­மாக, வங்­கி­கள் இந்த கடன்­களில் ஒரு பகு­தி­யையோ, வட்­டி­யையோ தள்­ளு­படி செய்து தர வேண்­டும். இதை தான் ஆங்­கி­லத்­தில், மிக­வும் நாசூக்­காக, ‘ஹேர்­கட்’ என, குறிப்­பி­டு­கின்­ற­னர். இந்த முடி திருத்­தத்­துக்கு வங்­கி­கள் தயாரா? எவ்­வ­ளவு துாரம் தள்­ளு­படி செய்ய முடி­யும்?தள்­ளு­படி செய்­யப்­படும் தொகையை சமா­ளிக்க, இந்­திய வங்­கி­கள், 18 ஆயி­ரம் கோடி ரூபா­யை­யா­வது ஒதுக்கி வைக்க வேண்­டும் என, ஓர் ஆய்வு நிறு­வ­னம் கணித்­தி­ருக்­கிறது. இன்­னொரு கணக்­கும் சொல்­லப்­ப­டு­கிறது. ரூபாய்க்கு, 60 பைசா திரும்பி வந்­தாலே போதும்; 40 பைசாவை விட்­டுக் கொடுப்­ப­தில் தவ­றில்லை என்று.விஜய் மல்­லையா, மொத்த கட­னில், 6,868 கோடி ரூபாயை கட்­டு­வ­தாக தெரி­வித்த போது, இந்­திய வங்­கி­கள் முறுக்­கிக் கொண்­டன. மொத்த தொகை­யை­யும் கட்­டி­னால் தான், ஆச்சு என்று அடம்­பி­டித்­தன. கடை­சி­யில், ஒன்­றுமே கட்­டா­மல், வெளி­நாடு தப்பி ஓடி­யது தான் நிகர லாபம். ஆக, கிடைக்­கும் வரை லாபம் என, வங்­கி­கள் நடந்து கொள்ள வேண்­டும் என்­பது, சமீ­பத்­திய சிந்­தனை.இன்­னொரு தக­வ­லோடு இணைத்து பார்த்­தால் தான், இதன் அர்த்­தம் இன்­னும் தெளி­வாக தெரி­யும். உலக நாடு­கள் பல­வற்­றி­லும், திவால் சட்­டம் உண்டு. திவால் நட­வ­டிக்கை நிறைவு பெற்று, தீர்வு காண எவ்­வ­ளவு கால­மா­கும் என்­பதை பற்­றிய கணிப்பை, உலக வங்கி வெளி­யிட்டு உள்­ளது. அதன்­படி, சிங்­கப்­பூ­ரில், 10 மாதங்­களில் நட­வ­டிக்­கை­கள் நிறைவு பெற, பிரிட்­ட­னிலோ, ஓராண்டு ஆகிறது. சீனா­வில், இரு ஆண்­டு­கள் ஆக, இந்­தி­யா­விலோ, 4.3 ஆண்­டு­கள் ஆகின்றன! மேலும், இது­வரை, ரூபாய்க்கு, 25.7 பைசா தான் திரும்ப வந்­தி­ருக்­கிறது. இத­னோடு ஒப்­பி­டும் போது, 60 பைசா பெரிய தொகை தானே? என, வாதம் வைக்­கப்­ப­டு­கிறது.இன்­னொரு பெரிய பிரச்னை, நிறு­வ­னங்­களின் மதிப்பை கணக்­கி­டு­வது. அதற்கு நிர்­வா­கக் குழு­வி­ன­ரும், உள்ளே இருக்­கும் பணி­யா­ளர்­களும், திவால் குழு­வி­ன­ருக்கு உதவ வேண்­டும். இது, இணக்­க­மாக நடை­பெ­றும் என்­ப­தற்கு உத்­த­ர­வா­த­மில்லை. இத­னால், நிறு­வ­னத்­தின் மதிப்பை கணக்­கி­டு­வ­தில் குழப்­பம் ஏற்­ப­ட­லாம்.எச்சரிக்கைமேலும், திவால் குழு­வி­னர், முற்­றி­லும் வெளி­யி­லி­ருந்து வரும் துறை சார்ந்த வல்­லு­னர்­கள். அவர்­க­ளால், வங்­கி­களும், நிறு­வ­னங்­களும் ஏற்­கும் ஒரு சம­ரச திட்­டத்தை வகுத்­துத் தர முடி­யுமா என்­பது, இன்­னும் கேள்­வி­யா­கவே இருக்­கிறது.பெரிய நிறு­வ­னங்­கள் இப்­ப­டிப்­பட்ட பிரச்­னை­களை சந்­தித்­துக் கொண்­டி­ருக்க, சிறு மற்­றும் குறுந்­தொ­ழில்­களும் வங்­கிக் கடன்­களை கட்­டா­மல், திவால் நட­வ­டிக்­கைக்கு உள்­ளாகி வரு­கின்றன. அது, அடுத்­தொரு பெரிய கதை­யாக தொட­ரப் போகிறது. வங்­கி­களை பொறுத்­த­வரை, கொடுத்த கடன்­களை முடிந்த வரை மீட்க வேண்­டும் என, முயற்சி செய்­கின்றன. இதி­லி­ருந்து திரும்ப வரக்­கூ­டிய தொகை மிக­வும் குறை­வாக இருந்­தால், ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. ஆனால், வங்­கிக் கடனை திரும்­பச் செலுத்­தா­விட்­டால், நட­வ­டிக்­கையே இராது, தப்­பித்­து­வி­ட­லாம் என, நம்­பும் நிறு­வ­னங்­க­ளுக்கு, இத்­த­கைய முயற்­சி­கள் ஒரு எச்­ச­ரிக்கை மணி­யா­கவே இருக்­கும்.ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 24,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)