அடுத்த 5 ஆண்டுகளில்... ‘இன்வெர்ட்டர் ஏசி’ விற்பனை 37 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புஅடுத்த 5 ஆண்டுகளில்... ‘இன்வெர்ட்டர் ஏசி’ விற்பனை 37 சதவீதம் அதிகரிக்க ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய சாதனை : முதன்முறையாக நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை எட்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2017
10:13

மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.

கடந்த ஒரு மாதகாலமாகவே இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுவதோடு தினம் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. நேற்று நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை நெருங்கிய நிலையில் இன்று(ஜூலை 25-ம் தேதி) அந்த சாதனையை எட்டியது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 128.43 புள்ளிகள் உயர்ந்து 32,320.86 எனும் புதிய சாதனையையும், நிப்டி 44.90 புள்ளிகள் உயர்ந்து 10,011.30-ஆகவும் வர்த்தகமாகின.

முன்னணி நிறுவன பங்குகளின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால் அது தொடர்பான பங்குகள் உயர்வுடன் இருப்பதுடன், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த ஏற்றம் நிலைக்கவில்லை. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 5.64 புள்ளிகள் உயர்ந்து 32,251.51-ஆகவும், நிப்டி 2.95 புள்ளிகள் உயர்ந்து 9,969.35-ஆகவும் வர்த்தமாகின.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)