பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
06:40

‘ஜாப் ஒர்க்’ செய்பவரின் இருப்பிடத்திலிருந்து, முதன்மை சப்ளையராகிய எங்கள் இடத்திற்கு சரக்குகளை கொண்டு வராமல், நேரடியாக வழங்கல் செய்ய இயலுமா?– பரிமளா, சைதாப்பேட்டைஇயலும். ‘ஜாப் ஒர்க்’ செய்யும் வேலை பணியாளர் பதிவு செய்தவராக இருந்தால், சரக்குகளை அவரது இருப்பிடத்திலிருந்தே, நேரடியாக வழங்கல் செய்ய முடியும். ஒருவேளை, வேலை பணியாளர் பதிவு செய்யாத நபராக இருப்பின், அவரது முகவரியை, தொழில் புரியும் கூடுதல் இடமாக, பணி அளிப்பவர் அறிவிக்க வேண்டும்.
நாங்கள், ‘மைக்ரோ பைனான்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு, 50 சதவீத உள்ளீட்டு வரி பயன் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாடு, நாங்கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் செலுத்தும் வரிக்கும் உண்டா அல்லது அத்தகைய வரித் தொகையை, முழுமையாக உள்ளீட்டு வரி பயனாக பெறலாமா?– குமார், மதுரைவங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களுக்கு, உள்ளீட்டு வரி பயனானது, 50 சதவீதம் மட்டுமே கிடைக்கப் பெறும். இந்த விதியானது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் செலுத்திய வரிக்கும் பொருந்தும். எனவே, தங்களால், 50 சதவீதத்தை மட்டுமே, உள்ளீட்டு வரி பயனாக பெற முடியும்.
உணவகங்களில், 60 ரூபாய்க்கு விற்ற பண்டங்கள், ஜி.எஸ்.டி., விதிப்பிற்கு பின், 72 ரூபாயாக உயர்த்தி, பின் அதற்கு, 18 சதவீதம், ஜி.எஸ்.டி.,யும் விதிக்கின்றனர். ஜி.எஸ்.டி., வந்த பின், விலை குறையும் என, அரசு கூறியிருந்த நிலையில், இத்தகைய விலை உயர்வு பற்றி தங்களின் கருத்து என்ன?– கோகுல், டி.சி.எஸ்.,ஜி.எஸ்.டி.,யின் பயனை, அதை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே உணர முடியாது. அதிக உள்ளீட்டு வரி பயனால், அனைத்து பொருட்களின் விலையும் படிப்படியாக நிச்சயம் குறையும். நீங்கள் கூறியது போல, அனைத்து உணவகங்களிலும் விலையேற்றம் செய்யவில்லை. சில உணவகங்களில் விலை ஏற்றம் செய்துள்ளதையும் மறுக்க முடியாது. அவ்வாறான விலையேற்றத்துக்கு காரணம், ஜி.எஸ்.டி., குறித்த சரியான புரிதல் இல்லாதது தான். விலையேற்றமும் செய்து, அதில், 18 சதவீதம், ஜி.எஸ்.டி.,யும் விதித்தல் தவறானது. இதற்கு, அரசு தக்க நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. அதற்கு, ஜி.எஸ்.டி., சட்டத்தில் வழிவகையும் உள்ளது.
ஐயா, நான், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின், இந்திய துணை நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எங்களது வெளிநாட்டு கம்பெனி, சில நேரங்களில், இந்திய துணை நிறுவனத்திற்கு சாப்ட்வேர் சேவையை, கட்டணமில்லாமல் வழங்குகிறது. இத்தகைய சேவைக்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் வரி விதிக்கப்படுமா?– முகேஷ், அயப்பாக்கம்பொதுவாக, மறு பயனில்லாத (கட்டணம் இல்லாத) சேவையின் இறக்குமதிக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படாது. ஆனால், பதிவு பெற்ற ஒரு நபர், வியாபார முன்னேற்றத்தின் பகுதியாக தொடர்புடைய நபரிடமிருந்தோ அல்லது வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய வேறொரு நிறுவனத்திலிருந்தோ, சேவைகளை இறக்குமதி செய்தால், மறு பயன் எதுவும் பெறவில்லை என்றாலும், அது வழங்கலாக கருதப்படும். அத்தகைய வழங்கலுக்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் வரி விதிக்கப்படும்.
சார், வருடாந்திர, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலும், இறுதி,ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலும் ஒன்றா?– கவுரி, சங்கரன்கோவில்இல்லை. வருடாந்திர, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலை, சாதாரண வரி செலுத்துவோராக பதிவு செய்துள்ள ஒவ்வொருவரும் சமர்ப்பிக்க வேண்டும். இதை, ஜி.எஸ்.டி.ஆர்., 9 எனும் படிவத்தில், அடுத்த நிதியாண்டு டிச., 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இறுதி, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் என்பது, ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்வதற்காக, தாக்கல் செய்யும் படிவமாகும். ஜி.எஸ்.டி.ஆர்.இ.ஜி., 16 எனும் படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|