பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
06:44

மும்பை : தேசிய திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ், தமிழகம், 8.45 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்து, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
மஹாராஷ்டிரா, 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு, வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து, முதலிடத்தை பிடித்துள்ளது. தேசிய திறன் மேம்பாட்டு கழகமான, என்.எஸ்.டி.சி., தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, ஜவுளி, ஆயத்த ஆடைகள், நிதி, ஐ.டி., தொலை தொடர்பு உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் திறன் வளர்ப்பு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களில், 15 – 59 வயதுடையோர் இணைந்து, தங்களுக்கு விருப்பமான துறையில் திறன் பயிற்சி பெற்று, வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்.இந்த வகையில், மஹாராஷ்டிராவில், 2011 முதல், இந்தாண்டு ஜூன் இறுதி வரை, 10 லட்சத்திற்கும் அதிகமானோர், 40க்கும் மேற்பட்ட துறைகளில் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். இம்மாநில அரசு, 2022ல், 4.50 கோடி பேருக்கு, வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து, என்.எஸ்.டி.சி., நிர்வாக இயக்குனர் மனீஷ் குமார் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சியை, நிறுவனம் வழங்கி வருகிறது. கடந்த ஓராண்டில், மூன்று லட்சம் பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், 45 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய பயிற்சியில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு பயிற்சி பெற்றோரில், 60 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி., 8.50 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்து, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|