பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
23:42

புதுடில்லி : மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ராஜ்யசபாவில் கூறியதாவது: கடந்த, 2016 – 17ம் வரி மதிப்பீட்டு ஆண்டில், ‘பான்’ கார்டு வைத்திருந்தும், 6.83 லட்சம் நிறுவனங்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதில், டில்லி, 1.44 லட்சம் நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, மும்பையில், 94 ஆயிரத்து, 155 நிறுவனங்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் உள்ளன.
பிராந்திய அளவில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், 63 ஆயிரத்து, 567 நிறுவனங்கள், வருமான வரி கணக்கை தெரிவிக்கவில்லை. நான்காவதாக, மேற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகியவை உள்ளன. தொடர்ந்து, இரு நிதியாண்டுகளாக செயல்படாமல், வருமான வரி கணக்கும் தாக்கல் செய்யாத அனைத்து நிறுவனங்களுக்கும், ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன், ஏராளமான நிறுவனங்கள், நிறுவன பதிவாளர் அலுவலக பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|