நவரத்தினங்கள் – ஆபரணங்கள் ஏற்றுமதி 6,000 கோடி டாலர் இலக்கு நிர்ணயம்நவரத்தினங்கள் – ஆபரணங்கள் ஏற்றுமதி 6,000 கோடி டாலர் இலக்கு நிர்ணயம் ... விண்ணை முட்டும் வெங்காயம், தக்காளி விலை : இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை விண்ணை முட்டும் வெங்காயம், தக்காளி விலை : இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை ...
‘4ஜி ஸ்மார்ட் போன்’ பயன்பாட்டில் அமெரிக்காவை விஞ்சும் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2017
06:32

புதுடில்லி: ‘இந்­தியா, அடுத்த ஆண்டு, ‘4ஜி ஸ்மார்ட் போன்’ பயன்­பாட்­டில், அமெ­ரிக்­காவை விஞ்சி, இரண்­டா­வது இடத்­திற்கு முன்­னே­றும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

ஹாங்­காங்­கைச் சேர்ந்த, தொழிற்­நுட்ப ஆய்வு நிறு­வ­ன­மான, கவுன்­டர் பாயின்ட், இந்­திய தொலை தொடர்பு துறை குறித்து, ஆய்வு செய்து வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஸ்மார்ட் போனில், தக­வல், படங்­கள் உள்­ளிட்­ட­வற்றை, விரை­வாக பரி­மா­றிக் கொள்ள, ‘4ஜி’ தொழிற்­நுட்­பம் உத­வு­கிறது. இந்த தொழிற்­நுட்ப வசதி கொண்ட ஸ்மார்ட் போன் பயன்­பாட்­டில், சீனா முத­லி­டத்­தில் உள்­ளது. இந்­நாட்­டில், 74 கோடி ஸ்மார்ட் போன்­கள் புழக்­கத்­தில் உள்ளன. அமெ­ரிக்­கா­வில், 22.50 கோடி ஸ்மார்ட் போன்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்றன. இந்­தியா, 15 கோடி ஸ்மார்ட் போன்­க­ளு­டன் மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது.

இந்­நி­லை­யில், ரிலை­யன்ஸ் ஜியோ இன்­போ­காம் நிறு­வ­னம், செப்­டம்­ப­ரில், ‘4ஜி’ தொழிற்­நுட்­பத்­தில் தயா­ரிக்­கப்­பட்ட, ஆர்­ஜியோ போனை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது. ‘இந்­தி­யா­வின் ஸ்மார்ட் போன்’ என்ற சிறப்­பு­டன் வர உள்ள, இந்த சாத­னத்தை, 1,500 ரூபாய் முன்­ப­ணம் செலுத்தி பெற­லாம்; மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின், போனை ஒப்­ப­டைத்து முன்­ப­ணத்தை பெற்­றுக் கொள்­ள­லாம் என, ஆர்­ஜியோ அறி­வித்­துள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, மாதம், 153 ரூபாய் கட்­ட­ணத்­தில், இல­வச அழைப்­பு­கள், தக­வல்­கள், படங்­கள் ஆகி­ய­வற்றை பரி­மா­றிக் கொள்­ளும் வச­தி­கள் வழங்­கப்­படும் என­வும் தெரி­வித்­துள்­ளது.இத­னால், வரும் மாதங்­களில், நாடு முழு­வ­தும், ஆர்­ஜியோ போன் பயன்­பாடு மள­ம­ள­வென உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதை சமா­ளிக்க, போட்டி நிறு­வ­ன­மான ஏர்­டெல், ‘4ஜி வோல்டி’ தொழிற்­நுட்ப சேவையை, நாடு முழு­வ­தும் விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இதர நிறு­வ­னங்­களும், ‘4ஜி’ சேவை­யில் ஆழ­மாக காலுான்ற முயற்சி மேற்­கொண்டு உள்ளன. இத­னால், ‘4ஜி’ ஸ்மார்ட் போன் விற்­பனை, பல மடங்கு அதி­க­ரிக்­கும். இதில், ஆர்­ஜியோ போன் பெரும்­பான்மை பங்­க­ளிப்பை கொண்­டி­ருக்­கும்.இதன் கார­ண­மாக, அடுத்த ஆண்டு, இந்­தி­யா­வில், ‘4ஜி’ தொழிற்­நுட்­பத்­தி­லான ஸ்மார்ட் போன் பயன்­பாடு, தற்­போது உள்­ளதை விட, 19 கோடி அதி­க­ரித்து, 34 கோடி­யாக உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதே காலத்­தில், அமெ­ரிக்­கா­வின், ‘4ஜி’ ஸ்மார்ட் போன் பயன்­பாடு, 2 கோடி அதி­க­ரித்து, 24.50 கோடி என்ற அள­விற்கே உய­ரும். இதன் மூலம், அமெ­ரிக்கா, மூன்­றா­வது இடத்­திற்கு தள்­ளப்­படும். சீனா­வில், ‘4ஜி’ ஸ்மார்ட் போன் புழக்­கம், 4 கோடி அதி­க­ரித்து, 78 கோடி­யாக உய­ரும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

சாம்சங் முதலிடம்:
ஸ்மார்ட் போன் விற்­ப­னை­யில், சாம்­சங், 24.1 சத­வீத பங்­க­ளிப்­பு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்த இடங்­களில், ஜியோமி, 15.5 சத­வீ­தம்; விவோ, 12.7; ஓப்போ, 9.6; லெனோவோ, 6.8 சத­வீ­தத்­து­டன் உள்ளன. சாதா­ரண போன் மற்­றும் ஸ்மார்ட் போன் சந்­தை­யில், சாம்­சங், 25.4 சத­வீ­தத்­து­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்த இடங்­களில், ஐடெல், 10.2 சத­வீ­தம்; ஜியோமி, 7.2; மைக்­ரோ­மேக்ஸ், 7.1 மற்­றும் விவோ, 5.9 சத­வீ­தத்­து­டன் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)