பதிவு செய்த நாள்
29 ஜூலை2017
16:20
புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர்போன்களுக்கு போட்டியாக ஐடியா செல்லுலார் நிறுவனம் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து மொபைல் போன்களின் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது.
மொபைல் போன் தயாரிப்பு கட்டணத்தை குறைத்து, இதன் மூலம் மொத்த விலையை கணிசமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ஜியோபோன்களின் விலைக்கு ஏற்ப ஸ்மார்ட்போனின் விலையை குறைக்க முடியும் என ஐடியா நிறுவன தலைவர் ஹிமான்ஷூ கபானியா தெரிவித்தார். இவ்வாறு தயாராகும் மொபைல் போனின் விலை ரூ.2500 முதல் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைவரும் வாங்க கூடிய விலையில் புதிய போனில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும். இதில் வாடிக்கையாளர்கள் 2ஜி அல்லது 4ஜி நெட்வொர்க்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும், அதற்கு ஏற்ற செயலிகளை பயன்படுத்த முடியும். புதிய சாதனத்தில் வழங்கப்பட இருக்கும் அம்சங்களை சந்தை ஆய்வுகளுக்கு பின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் ரிலையன்ஸ் ஜியோபோனிற்கு போட்டியாக புதிய பீச்சர் போன் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியானது. அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 4ஜி பீச்சர்போன் தயாரித்து வருவதாக கூறப்பட்டது. இதேபோல் லாவா நிறுவனமும் பீச்சர் போன் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் 4ஜி வோல்ட்இ கொண்ட விலை குறைந்த போனினை லாவா நிறுவனம் முதலில் வெளியிட்டது. லாவா 4ஜி கனெக்ட் எம்1 என அழைக்கப்படும் பீச்சர்போன் விலை இந்தியாவில் ரூ.3,333 என நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|