மாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லைமாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ... எஸ்.ஐ.எஸ்., நிறுவன பங்குகள்  நாளை வெளியீடு துவக்கம் எஸ்.ஐ.எஸ்., நிறுவன பங்குகள் நாளை வெளியீடு துவக்கம் ...
ஜி.எஸ்.டி., - கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2017
01:25

எல்.ஐ.சி., பாலி­சி­யின் கீழ், ஆயுள் காப்­பீட்டு திட்­டத்­திற்கு,‘பிரீ­மி­யம்’ தொகை வசூல் செய்­யும் போது அதற்­கும், ஜி.எஸ்.டி., உண்டா? ஆம் எனில், இது நுகர்­வோரை பாதிக்கா​தா​?– நாரா­ய­ணன், சேலம்ஏற்­க­னவே இருந்த சேவை வரி­யின் கீழ், இத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு வரி விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதே முறை, ஜி.எஸ்.டி., சட்­டத்­தி­லும் பின்­பற்றி, இதற்கு வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. நீங்­கள் கூறு­வது போல், ஆயுள் காப்­பீட்டு திட்­டத்­திற்கு வரி­யில்­லா­மல் இருந்­தால், நுகர்­வோ­ருக்கு பலன்­கிட்­டும். இந்த கோரிக்­கையை, தகுந்த முறை­யில் பிர­தி­நி­தித்­து­வம் செய்­தோ­மா­னால், வரி­யி­லி­ருந்து விலக்­க­ளிக்க வாய்ப்­புள்­ளது.
சார், ஜி.எஸ்.டி., வந்த பின், சரக்கு விலைப் பட்­டி­ய­லின் ​வரிசை ​எண்­கள் ​முத­லி­லி­ருந்து துவங்க வேண்­டுமா அல்­லது ஏற்­க­னவே இருந்த, விலைப் பட்­டி­ய­லின் வரிசை எண்ணை தொட­ர­லாமா?– கண்­ணப்­பன், அர­வங்­காடுஜி.எஸ்.டி., வந்த பின், விலைப் பட்­டி­ய­லின் எண்­கள் ​முத­லி­லி­ருந்து​ துவங்க வேண்­டு­மென்ற கட்­டா­யம் இல்லை. நீங்­கள், ஏற்­க­னவே பயன்­ப­டுத்தி வந்த வரிசை எண்ணை தொட­ர­லாம்.
சேவை வழங்­கு­னர், 18 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதித்­தால், அதற்கு பணம் செலுத்­தும் போது, வரு­மான வரி சட்­டம் – 194​ ​‘ஜெ’ பிரி­வின் படி, பிடித்­தம் செய்து, மீதித் தொகையை அளிக்­கி­றோம். ​விலைப் பட்­டி­ய­லி­லுள்ள, ஜி.எஸ்.டி., தொகைக்­கும் வரு­மான வரி பிடித்­தம் செய்ய வேண்­டுமா?– சஞ்­சய், மேட்­டுப்­பா­ளை­யம்சேவை வழங்­கு­ன­ருக்கு செலுத்த வேண்­டிய தொகை­யில், ஜி.எஸ்.டி.,யின் மீது, வரு­மான வரி பிடித்­தம் செய்­யக் கூடாது.உதா­ர­ண­மாக, சேவை­யின் மதிப்பு, 1 லட்­சம் ரூபாய் என்­றால், அவர், 18 ஆயி­ரம் ரூபாய், ஜி.எஸ்.டி., சேர்த்து, விலைப்பட்­டி­யல் வழங்­கு­வார். நீங்­கள், 194 ‘ஜெ’ பிரி­வின் கீழ், 10 சத­வீத வரு­மான வரி பிடித்­தம், 1 லட்­சம் ரூபாய்க்கு தான் செய்ய வேண்டு​மே தவிர, ​1​.18​ லட்­சம் ரூபாய்க்கு பிடித்­தம் செய்­யக் கூடாது.​ ​குறிப்பு: உங்­களின் சேவை வழங்­கு­னர், ஜி.எஸ்.டி.,யின் விப­ரத்தை, தன் வரி விலைப் பட்­டி­ய­லில், தனி­யாக குறிப்­பிட்­டி­ருக்க வேண்­டும். ​அவ்­வாறு குறிப்­பி­ட­வில்லை என்­றால், மொத்த மதிப்­பிற்­கும் வரு­மான வரி பிடித்­தம் செய்ய வேண்­டும்.​
​ஜி.எஸ்.டி., அமைப்­பின் கீழ், ‘விலக்­க­ளிக்­கப்­பட்ட வழங்­கல்’ என்­றால் என்ன? இதில் வரி­யில்லா வழங்­க­லும் அடங்­குமா?– ஜெக­தீ­சன், தர்­ம­புரிஜி.எஸ்.டி., சட்­டத்­தின்­படி, இந்த சொல்­லிற்குதனி­யாக விளக்­கம் உள்­ளது. பின் வரும் வழங்­கல்­கள்,‘விலக்­களிக்­கப்­பட்ட வழங்­கல்’ என, கரு­தப்­படும். ஐ.ஜி.எஸ்.டி., சட்­டப் பிரிவு, 6/11ன் கீழ், வரி­யி­ல் இ­ருந்து முழு­வ­தும் விலக்­க­ளிக்­கப்­பட்ட வழங்­கல்­கள் அல்­லது வரியை ஈர்க்­கக்­கூ­டிய​,​ ஆனால், வரி விகி­தம் இல்­லாத சரக்கு மற்­றும் சேவை­யின் வழங்­கல்­கள் அல்­லது வரி விதிப்பு இல்­லாத வழங்­கல்­கள். இவை அனைத்­தும், ‘விலக்­க­ளிக்­கப்­பட்ட வழங்­கல்­கள்’ என, கரு­தப்­படும்.
நாங்­கள், ‘ஸ்பின்­னிங் மில்’ நடத்தி வரு­கி­றோம். ஜூன் வரை, மத்­திய கலால் வரி (சி.எஸ்.டி.,) 2 சத­வீ­தம் கட்டி, வெளி மாநி­லத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட பஞ்சு பேல்­கள் ஸ்டாக் உள்ளன. இந்த, சி.எஸ்.டி., 2 சத­வீத வரியை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாமா? அதற்கு, நாங்­கள் என்ன நடை­மு­றை­களை மேற்­கொள்ள வேண்­டும்?– முரு­க­ராஜ், ராஜ­பா­ளை­யம்நீங்­கள் செலுத்­திய, 2 சத­வீ­தம், சி.எஸ்.டி.,யை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது. ஜி.எஸ்.டி., வரு­வ­தற்கு முன் இருந்த சட்­டப் ­படி, இத்­த­கைய வரியை பய­னாக பெற முடி­யாத கார­ணத்­தால், இத்­த­கைய வரியை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)