சிறிய நிறுவனங்களுக்கு ‘பந்தன்’ வங்கி அறிவுரை சிறந்த ஆடிட்டரை அமர்த்தினால் மிக சுலபமாக கடன் பெறலாம்சிறிய நிறுவனங்களுக்கு ‘பந்தன்’ வங்கி அறிவுரை சிறந்த ஆடிட்டரை ... ... வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி? வரி ஏய்ப்­போரை கண்­டு­பி­டிக்க இதுவா வழி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2017
08:31

கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­க­மா­னது. ஒரு பேரல், 49.85 டாலர் என்ற உச்­சத்தை தொட்­டது. இது நடப்­பாண்­டில், இரு மாதங்­களின் விலையை காட்­டி­லும் அதி­க­மா­கும். முத­லீட்­டா­ளர்­கள் மற்­றும் வியா­பா­ரி­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட எண்­ணெய் வரவு (உற்­பத்தி) குறை­யும் என்ற எண்­ணம், சந்­தை­யில் விலைக்கு சாத­க­மான போக்­குக்கு வழி­வ­குத்­தது.
அமெ­ரிக்­காவை முதன்­மை­யாக கொண்டு வர்த்­த­க­மா­கும், டபிள்யு.டி.ஐ., கச்சா எண்­ணெய், 49.85 டால­ருக்­கும், ஐரோப்­பாவை அடிப்­ப­டை­யாக கொண்டு வர்த்­த­க­மா­கும், பிரன்ட் கச்சா எண்­ணெய், 52.68 டால­ருக்­கும் உயர்ந்து, உச்­சத்தை அடைந்­தது.கடந்த புதன்­கி­ழமை வெளி வந்த, இ.ஐ.ஏ., இருப்பு விப­ரத்­தில், எண்­ணெய் இருப்பு, 9.5 மில்­லி­யன் பேரல்­கள் குறைந்து காணப்­பட்­டது. இதற்கு முந்­தைய நான்கு வாரங்­க­ளு­டன் சேர்த்­தால், மொத்­தம், 36.9 மில்­லி­யன் பேரல்­கள் குறை­வா­கும். இதுவே, விலை­யேற்­றத்­திற்கு முதன்­மை­யான கார­ண­மா­கும்.
கடந்த திங்­க­ளன்று நடை­பெற்ற, ‘ஒபெக்’ நாடு­களின் மேற்­பார்வை கூட்­டத்­தில், உற்­பத்தி குறைப்பு, சீரான அள­வில் தொடர முயற்சி செய்­யப்­படும் என்ற தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டது. இதில், கூட்­ட­மைப்­பில் இல்­லாத, ‘நான் ஒபெக்’ நாடு­களும் கலந்து கொண்­டன. இதில், உயர்ந்து வரும், நைஜீ­ரியா மற்­றும் லிபியா நாட்­டின் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­மதி கட்­டுக்­குள் கொண்டு வரப்­படும் என, தெரி­விக்­கப்­பட்­டது. மேலும், எண்­ணெய் உற்­பத்­தி­யில் மிகப்­பெ­ரிய நாடான, ரஷ்­யா­வும், தன் ஆத­ரவை மேலும் வலுப்­ப­டுத்­தும் என, கூறி­யது.இதில் ஏற்­பட்ட கொள்கை முடி­வு­க­ளால், சந்­தை­யில் எண்­ணெய் வரவு குறை­யக்­கூ­டும் என்ற எதிர்­பார்ப்பு, விலைக்கு சாத­க­மாக அமைந்­தது. வரும் நாட்­களில், ஒரு பேரல், 51 டாலர் என்­பது, நல்ல ரெசிஸ்­டென்ஸ் ஆகும்.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 3,144 3,100 3,212 3,260என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 48.50 47.00 51.00 52.80

தங்கம், வெள்ளி
தொடர்ந்து மூன்று வாரங்­க­ளாக, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை உயர்ந்து வரு­கிறது. சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம், 6 சத­வீ­தம்; வெள்ளி, 10 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.
அமெ­ரிக்க டாலர் குறி­யீ­டான, ‘டாலர் இண்­டெக்ஸ்’ குறைந்­தது, அமெ­ரிக்க மத்­திய வங்கி, தன் தாராள பத்­திர கொள்­கையை தளர்த்­தும் என்ற அறி­விப்பு, அமெ­ரிக்க பண­வீக்க குறைவு, அத­னால் வரும் காலங்­களில், உட­ன­டி­யாக இனி­யொரு வட்டி விகித உயர்­வுக்கு சாத­க­மில்லை என்ற சூழல் போன்­றவை, சந்­தை­யில் விலைக்கு ஆத­ர­வாக செயல்­பட்­டது. மேலும், அமெ­ரிக்க அர­சின், கரு­வூல பத்­தி­ரங்­களின் ஆதா­யம் குறைந்­தது, முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில், தங்­கத்­தின் மீதான முத­லீட்டு ஆர்­வத்தை அதி­க­ரித்­தது.
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­யில், அதன் நுகர்வு தேவையை காட்­டி­லும், உலக பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­படும் மாற்­றங்­கள், அதி­க­ள­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்றன. மேலும், நாடு­க­ளுக்கு இடையே ஏற்­படும் அசா­தா­ரண சூழல், பண­வீக்­கம் போன்­ற­வை­யும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது.வரும் நாட்­களில், சந்­தை­யில் இதே போக்கு தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அமெ­ரிக்­கா­வில், விவ­சா­யம் அல்­லாத துறை­களில், புதி­தாக பணி­யில் அமர்த்­தப்பட்­ட­வர்­கள் விப­ரத்தை அறி­விக்­கும், என்.எப்.பி., அறிக்கை, ஆக., 4ல் வெளி­வர உள்­ளது. இதன் முடி­வும், விலையை பாதிக்­கும்.
தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 28,360 28,100 28,650 28,900காம்எக்ஸ் (டாலர்) 1,255 1,243 1,275 1,288

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2

செம்பு
சர்­வ­தேச சந்­தை­யில், செம்பு விலை, நான்கு மாத உச்­சத்தை தொட்­டது. ஒரு டன், 6,500 டாலரை கடந்­தது. தொடர்ந்து, மூன்று வாரங்­க­ளாக தொழிற்­சாலை கனி­மங்­களின் விலை ஏறிய வண்­ணம் உள்­ளது.
இதில், செம்பு, துத்­த­நா­கம், கார்­பன், இரும்பு போன்­றவை அடங்­கும். சீனா­வின் பொரு­ளா­தா­ரம் வலுப்­படும் என்ற எதிர்­பார்ப்பு மற்­றும் செம்பு இறக்­கு­ம­தி­யில் விதிக்­கப்­பட்ட புதிய கொள்­கை­கள், உள்­நாட்டு சந்­தை­யில் தேவையை அதி­க­ரித்­தது. மேலும், மத்­திய மற்­றும் தெற்கு சீனா­வில், மழை­யால் ஏற்­பட்ட வெள்­ளம், அந்த பகு­தி­யில் உற்­பத்­தியை கடு­மை­யாக பாதித்­தது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 406.20 402.50 411.00 415.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)