பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
08:39

மியூச்சவல் பண்ட் முதலீட்டில் முன்னணி நகரங்களை விட சிறிய நகரங்கள் முன்னிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. சிறிய நகரங்களில், எஸ்.ஐ.பி., வகை முதலீடுகள் அதிகரித்து உள்ளன.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் பலவகையான திட்டங்கள் இருக்கின்றன. நீண்ட கால முதலீட்டிற்கு இவை ஏற்றதாக கருதப்படுகின்றன. மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் எஸ்.ஐ.பி., முறையிலும் முதலீடு செய்யலாம். மாத, காலாண்டு உள்ளிட்ட அடிப்படையில் எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யலாம்.
இந்த வகை முதலீட்டில் முன்னணி, 15 நகரங்களை விட சிறிய நகரங்கள் முன்னிலையில் இருப்பது கிரிசல் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிய நகரங்களில் இந்த வகை முதலீடு 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் இது அதிகரித்துள்ளது.
இதனால் மியூச்சுவல் பண்ட் முதலீடும் அதிகரித்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் துறையில், 14 மில்லியன் எஸ்.ஐ.பி., கணக்குகள் இருக்கின்றன. 2017 நிதியாண்டுக்கான முதலீட்டில் பாதிக்கு மேலான பங்களிப்பு எஸ்.ஐ.பி., திட்டங்கள் மூலம் வந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|