பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
08:40

காப்பீடு சேவை தொடர்பாக அதிருப்தியோ, முறையீடோ இருந்தால், அதை எழுத்துப் பூர்வ மாக அளிக்க வேண்டும் என, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.
பாலிசிதாரர்களின் நலன் காக்கும் வகையில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பு, அண்மையில் புதிய விதிமுறைகளுக்கான அறிக்கையை வெளியிட்டது. கிளைம்களை செட்டில் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான நெறிமுறைகள் அடங்கியுள்ள இந்த அறிக்கையில், காப்பீடு புகார் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் படி, புகார் அல்லது முறையீடு என்பது காப்பீட்டு நிறுவனம், ஏஜன்ட் அல்லது புரோக்கர் மீதான அதிருப்திக்கான எழுத்து பூர்வமான வடிவம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் சேவை தரம் அல்லது குறைபாடு தொடர்பான நடவடிக்கை அல்லது நடவடிக்கை இன்மை தொடர்பாக இருக்கலாம்.
எழுத்துப்பூர்வமான என குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியமாக அமைகிறது. இதற்கு முன் வாய்மொழி வடிவிலான புகாரும் இதில் அடங்கும். ஆனால் தற்போது புகார் அல்லது முறையீடு எழுத்து வடிவில் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. இ–மெயில் வடிவமும் இதில் அடங்கும். எனவே எழுத்து வடிவில் புகாரை பதிவு செய்ய வேண்டும்.ஏஜன்ட் அல்லது வங்கி மூலம் காப்பீட்டு நிறுவனத்திடம் புகாரை பதிவு செய்யலாம். அல்லது நேரடியாக காப்பீட்டு நிறுவனத்திடம் புகார் செய்யலாம். எல்லா காப்பீட்டு நிறுவனங்களும் குறை தீர்ப்பு தொடர்பான தங்கள் நடைமுறைகளை இணையதளத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஒரு சில காப்பீட்டு நிறுவன இணையதளங்களில் வாடிக்கையாளர் சேவை பகுதியில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இ–மெயில் முகவரியும் இதில் இடம்பெற்றுள்ளன. ‘கால்சென்டர்’ வழியாகவும் புகார் செய்யலாம் என்றாலும் அதை கடிதம் அல்லது இ–மெயில் மூலம் உறுதி செய்ய வேண்டும். புகார் தெரிவித்த, 3 நாட்களுக்குள் நிறுவனங்கள் அதை அங்கீகரிக்க வேண்டும்.காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் நிர்வாக அமைப்பான ஐ.ஜி.எம்.எஸ்., மூலமும் புகார் செய்யலாம். அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்பான புகார்களின் மைய அமைப்பாக இது இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு: www.igms.irda.gov.in
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|