பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
08:41

நிதி இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிட்டு சேமிப்பதும், முதலீடு செய்வதும் எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு எதிர்பாராத நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு கவசமாக அவசர கால நிதியை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம். போதுமான அளவு அவசர கால நிதி கையில் இருந்தால், நிதி சவால்களை திறம்பட சமாளிக்கலாம்!.
என்ன?மூன்று முதல் ஆறு மாத காலத்திற்கான அடிப்படை செலவுகளை நிறைவேற்றிக் கொள்ள தேவையான தொகை அவசர கால நிதி (எமர்ஜென்சி பண்ட்) என குறிப்பிடப்படுகிறது. வாகனத்தில் ரிசர்வில் இருக்கும் பெட்ரோல் போல இதை புரிந்து கொள்ளலாம். எப்போதும் இத்தகைய தொகை கையில் இருக்க வேண்டும். வேறு எந்த தேவைக்காகவும், இதில் கைவைக்க கூடாது.
எப்போது தேவை?வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் இடர்கள் ஏற்படலாம். எதிர்பாராமல் பணி இழப்பு ஏற்பட்டு, வருமானம் திடீரென நின்று போகும் நிலையில் அல்லது மருத்துவ எமர்ஜென்சி ஏற்பட்டால் அப்போது அன்றாட செலவுகளை சமாளிக்க அவசர கால நிதி கைகொடுக்கும். நிலைமை சீராகும் வரை, அடிப்படை செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.
எப்படி?அவசர கால நிதியை, சேமிப்பின் மூலம் உருவாக்கலாம். உண்மையில் முதல் சேமிப்பு இதுவாக இருக்க வேண்டும். வங்கி கணக்கு அல்லது வைப்பு நிதியில் இதற்கான தொகையை சேமிக்கலாம். குறுகிய கால அளவிலான மியூச்சுவல் பண்ட்கள் அல்லது லிக்விட் பண்ட்களும் இதற்கு ஏற்றவை. பணத்தை உடனடியாக எடுக்கலாம் என்பதோடு, பலனும் அதிகம்.
சில வழிகள்ஊதிய உயர்வு அல்லது எதிர்பாராத விதமாக பணம் கையில் கிடைக்கும் போது அதை முழுவதும் செலவு செய்துவிடாமல், ஒரு பகுதியை அவசர கால நிதிக்கு ஒதுக்கலாம். ஏதேனும் ஒரு பழக்கத்தை கைவிட்டு அந்த தொகையை சேமிக்கலாம். கிரெடிட் கார்டு பயன்பாட்டை குறைப்பது, பில்களை ஒழுங்காக செலுத்துவது போன்ற பழக்கங்களும் உதவும்.
செய்ய வேண்டியதுதனியே சேமிப்பு கணக்கில் சேமிக்கலாம். பொருத்தமான மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். ஆனால், நீண்ட கால நோக்கிலான பண்ட்கள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட சமபங்கு பண்ட்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த தொகையை எப்போது தேவையோ அப்போது உடனடியாக எடுப்பது எளிதாக இருக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|