பதிவு செய்த நாள்
01 ஆக2017
06:50

நான், ‘ஜெராக்ஸ்’ கடையும், வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் சேவையும் வைத்துள்ளேன். மொத்த பரிமாற்ற தொகை, 3 கோடி ரூபாய் வரும். 3 கோடி ரூபாய்க்கு, கமிஷன், 75 ஆயிரம் ரூபாய் வரும். எனக்கு, ஜி.எஸ்.டி., உண்டா? நான், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டுமா? ஆம் எனில், எத்தனை சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும்?– குருநாதன், திட்டக்குடிஜி.எஸ்.டி., சட்டப்படி, அன்னிய செலாவணி பரிமாற்றம் புரியும் நபர்கள், வழங்கலுக்கான மதிப்பை கணக்கிட, தனி விதி உள்ளது. அன்னிய செலாவணி வணிகத்தில், விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவற்றுக்கு உள்ள வித்தியாச தொகையை மட்டும் தான், வழங்கல் தொகையாக கருதப்படும். எனவே, நீங்கள், ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
சார், நாங்கள், ஜி.எஸ்.டி., பதிவு பெற்றுவிட்டோம். பதிவு செய்யப்படாத நபரிடமிருந்து பொருட்களை வாங்கும் போது, அவரிடமிருந்து, ‘ஆதார்’ எண் மற்றும் ‘பான்’ எண் பெற வேண்டுமா?– விஜயன், சிவகங்கைஜி.எஸ்.டி., சட்டத்தின்படி, அது போன்ற எவ்வித கட்டுப்பாடும் இல்லை. நீங்கள், ‘ஆதார்’ எண் மற்றும் ‘பான்’ எண் போன்றவற்றை பெற வேண்டிய அவசியமில்லை.
நாங்கள், கையால் மெழுகு தீப்பெட்டிகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். நாங்கள், 100 பண்டல்கள் வாங்கினால், 5 பண்டல்கள் இலவசம் எனும் கொள்கையில், விற்பனை செய்து வருகிறோம். விலைப் பட்டியல் போடும் போது, இலவசமாக கொடுக்கும் தீப்பெட்டிகளுக்கு பண்டல் விலை, ஜி.எஸ்.டி., ஆகியவற்றை போட்டு இலவசத்தை கழிக்க வேண்டுமா அல்லது பண்டல் விலையில் இருந்து, இலவசத்தை கழித்து, மீதமுள்ளதற்கு மட்டும், ஜி.எஸ்.டி., போட வேண்டுமா?– செல்வராஜ், சிவகாசிவிலைப் பட்டியலை எழுப்பும் போது, இலவசமாக நீங்கள் தரும் பொருட்களை கழித்து, மீதமுள்ளவற்றுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும். இலவசமாக அளிக்கும் வழங்கல்களுக்கு, வரி விதிப்பு இருக்காது.
சார், நாங்கள், ஒப்பந்த அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு, வேறு மாநிலத்தில் எந்த அலுவலகமும் இல்லை. தற்போது, ஜி.எஸ்.டி., வந்துவிட்ட காரணத்தால், அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனி, ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டுமா அல்லது தலைமை அலுவலகத்தில் ஒரு பதிவு செய்வது போதுமானதா?– சிவபோகம், சென்னைசேவை வழங்குபவர், அவர் சேவைகளை வழங்கும் இடத்திலிருந்து பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கூறிய பரிவர்த்தனைக்கு, அனைத்து மாநிலங்களிலும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தலைமை அலுவலகமுள்ள மாநிலத்தில் பதிவு செய்தால் போதும். நீங்கள், வேறு மாநிலத்திற்கு சேவை வழங்கும் போது, ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., வசூல் செய்து செலுத்த வேண்டும்.
ஐயா, எங்களுக்கு ஜூன் மாதத்திற்கான, ‘வாட்’ ரிட்டர்னில், உள்ளீட்டு வரி பயன் ஏதுமில்லை. ஆனால், எங்களிடம், 20 லட்சம் ரூபாய்க்கான கையிருப்பு சரக்கு உள்ளது. அந்த கையிருப்பு சரக்கிற்கு, 40 சதவீத, ஜி.எஸ்.டி.,யை எடுத்துக் கொள்ள இயலுமா?– மன்சூர், திருச்செந்துார்ஜி.எஸ்.டி., சட்டத்தில், உங்களுடைய உள்ளீட்டு வரி பயன், ஜூன் மாதத்திற்கான, ‘வாட்’ ரிட்டர்னை பொறுத்தே இருக்கும்.
சார், நாங்கள் காய்கறிகளை மட்டும், மொத்தமாக வாங்கி சில்லரை வணிகர்களுக்கு வழங்கி வருகிறோம். காய்கறிகளின் மீது, பூஜ்ஜிய சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. எங்கள் ஆண்டு விற்பனை தொகை, 20 லட்சம் ரூபாயை தாண்டிவிடும். நாங்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டுமா?– சாத்தப்பன், கொடைக்கானல்நீங்கள், பூஜ்ஜிய சதவீத பொருட்களை, அதாவது விலக்களிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதால், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|