பதிவு செய்த நாள்
02 ஆக2017
23:58
மும்பை : ரிசர்வ் வங்கி, நேற்று, நிதி கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2016 அக்டோபருக்கு பின், தற்போது தான் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது, ஆறு ஆண்டுகளில் இல்லாத, குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 சதவீதத்தில் இருந்து, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சில்லரை பணவீக்கத்தை, 4 சதவீதத்திற்குள் வைத்திருக்கவும், தொழில் வளர்ச்சி, தனியார் முதலீடு, அடிப்படை கட்டமைப்பு வசதி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதையடுத்து, வங்கிகள், வாகன கடன், தனிநபர் கடன், வீட்டுவசதி கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|