காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியாகாலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
08:15

கச்சா எண்­ணெய் விலை சிறிது குறைந்து, ஒரு பேரல், 49.50 டாலர் என்ற நிலை­யில், கடந்த வார வர்த்­த­கம் முடி­வ­டைந்­தது. ஒபெக் கூட்­ட­மைப்பு நாடு­களின் ஏற்­று­மதி அதி­க­ரிப்பு மற்­றும்உயர்ந்து வரும் அமெ­ரிக்க எண்­ணெய் உற்­பத்தி போன்­றவை விலை உயர்வை கட்­டுப்­ப­டுத்­தி­யது.
ஜூலை மாதத்­தில், ஒபெக் நாடு­களின் மொத்த உற்­பத்­தி­யா­னது, தின­சரி, 90 ஆயி­ரம் பேரல்­கள் அதி­க­ரித்­தன. இதற்கு, லிபியா நாட்­டின் உற்­பத்தி பெருக்­கம் முதன்­மை­யான கார­ண­மா­கும்.பேக்­கர் ஹக்ஸ் என்ற நிறு­வ­னம் வெளி­யிட்­டுஉள்ள நில­வ­ரப்­படி, அமெ­ரிக்க ஆழ்­கு­ழாய் கிண­று­களின் எண்­ணிக்கை உயர்ந்த வண்­ணம் உள்­ளது. தற்­போது, 766 கிண­று­கள் இயங்கி வரு­கின்றன. இது, 2015ம் ஆண்டு ஏப்­ரல் மாதத்தை விட அதி­க­மா­கும். மொத்த உற்­பத்தி, 9.41 மில்­லி­யன் பேரல்­கள் ஆகும். இது ஜூலை, 2015ம் ஆண்டை விட அதி­க­மா­கும்.
ஒபெக் மற்­றும் நான் ஒபெக் எனப்­படும், ஒபெக் கூட்­ட­மைப்­பில் அல்­லாத நாடு­களின் ஒப்­பந்­தப்­படி, தின­சரி உற்­பத்­தியை, 1.76 மில்­லி­யன் பேரல்­கள் குறைத்து, சந்­தை­யில் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுத்தி விலையை உயர்த்த திட்­ட­மிட்­டன. ஆனால், எதிர்­ம­றை­யாக, சில உறுப்பு நாடு­கள் இதை சரி­வர அமல்­ப­டுத்­த­வில்லை. அத­னால், மே, ஜூன், ஜூலை மாதங்­களில் உற்­பத்தி பெரு­கி­யது. இதன் பிறகு, ஜூலை மாத இறு­தி­யில் நடை­பெற்ற, ஒபெக் மேற்­பார்வை குழு கூட்­டத்­தில், லிபியா, நைஜீ­ரியா நாடு­கள் தங்­கள் உற்­பத்­தியை குறைக்­கும்­படி வலி­யு­றுத்­தப்­பட்­டது.
இதன், விளை­வாக, சந்­தை­யில் எண்­ணெய் விலை, 45.40 டால­ரி­லி­ருந்து, 50.45 டாலர் வரை அதி­க­ரித்­தது. இதன் அடுத்த கூட்­டம் ஆகஸ்ட் 21ம் தேதி ரஷ்­யா­வில் நடை­பெற இருக்­கிறது. வரும் நாட்­களில், ஒரு பேரல், 51 டாலர் என்ற நிலை நல்ல ரெசிஸ்­டென்ஸ் ஆகும். இதை கடக்க இய­லாத நிலை­யில், விலை குறைய வாய்ப்­புள்­ளது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,130 3,090 3,177 3,209என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 48.50 47.22 51.00 52.70

தங்கம், வெள்ளி
மூன்று வார தொடர் உயர்­வுக்­குப் பிறகு, கடந்த வாரம், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள் சரிந்து, வியா­பா­ரம் முடி­வ­டைந்­தது. ஜூலை மாதம் இவ்­விரு கனி­மங்­களின் விலை­யில் நல்ல உயர்வு காணப்­பட்­டது.
உலக சந்­தை­யில், அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ் பிற நாண­யத்­திற்கு எதி­ராக 14 சத­வீ­தம் குறைந்­தது, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை உயர முதன்மை கார­ண­மா­கி­யது. மேலும், அமெ­ரிக்க கரு­வூ­ல­கங்­களின் ஆதா­யம் குறைந்த கார­ணத்­தால், முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் தங்­கத்­தின் மீதான ஆர்­வம் அதி­க­ரித்­த­தும்விலை உயர்­வுக்கு கார­ண­மா­கும். இருப்­பி­னும், இவ்­விலை உயர்வு கடந்த வாரம் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது. கடந்த வெள்­ளி­யன்று வெளி­வந்த, அமெ­ரிக்க நாட்­டின் பொரு­ளா­தார கார­ணி­யான, என்.எப்.பி., எதிர்­பார்த்­ததை விட ஜூலை மாதத்­தில் அதி­க­மாக இருந்­தது. இதன் விளை­வாக, சரி­வில் இருந்த டாலர் இண்­டெக்ஸ் மீண்­டது. தங்­கம், வெள்ளி விலை சரிய ஆரம்­பித்­தது.
மேலும், அமெ­ரிக்­கா­வில் வேலை இல்­லா­தோர் எண்­ணிக்கை, 4.3 சத­வீ­த­மா­கும். இது மே மாதத்­தில், 4.4 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்­பி­டத்தக்­கது. இதன் தாக்­கம் விலை­கள் மீது இந்த வார­மும் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தங்­கம், 1,245 டாலர் வரை­யி­லும், வெள்ளி, 15.85 டாலர் வரை­யி­லும் விலை குறைய வாய்ப்­புள்­ளது.
தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 28,325 28,100 28,630 28,800காம்எக்ஸ் (டாலர்) 1,247 1,235 1,265 1,273

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 37,050 36,600 38,250 38,400காம்எக்ஸ் (டாலர்) 16.05 15.60 16.47 16.80

நிக்­கல்
நிக்­கல் விலை, கடந்த வாரம் அதி­க­ரித்து, வியா­பா­ரம் நடை­பெற்று வந்­தது. இது, 2017ம் ஆண்­டின் அதி­கப்­ப­டி­யான வார உயர்­வா­கும். உலக பங்கு சந்­தை­களில் ஏற்­பட்ட முன்­னேற்­றம், தொழிற்­சாலை உற்­பத்தி பெரு­கும் என்ற எதிர்­பார்ப்பு ஆகி­யவை, நிக்­கல், செம்பு உள்­ளிட்ட பிற உற்­பத்தி இடு­பொ­ருட்­களின் விலை­யும் உயர கார­ண­மா­கி­யது.
எல்.எம்.இ., (லண்­டன் மெட்­டல் எக்­சேஞ்ச்) சந்­தை­யில், ஜூலை மாதம் மட்­டும், 18 சத­வீ­தம் விலை உயர்ந்­துள்­ளது. ஒரு டன் நிக்­கல், 10 ஆயிரத்து, 500 டாலரை தாண்­டி­யது. எல்.எம்.இ.,வெளி­யிட்ட வர்த்­த­கர்­கள் குறிப்­பில், நெட் லாங் பொசி­ஷன், 32 ஆயிரத்து, 363 லாட் ஆகும். இது மே மாதம், 15ம் தேதி, நெட் ஷார்ட், 887 ஆக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் எல்லா மாத­மும், ௧ம் தேதி­யன்று வெளி­வ­ரும், சீனா­வின் தொழில்­ துறை வளர்ச்சி குறி­யீ­டான, பி.எம்.ஐ., ஜூலை மாதத்­தில் வளர்ச்சி கண்­ட­தாக அறி­விப்பு வெளி­யா­னது. இது­வும் சந்­தை­யில், நிக்­கல் விலை உயர கார­ண­மா­கி­யது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 404.80 402.00 409.00 412.50

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)