காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியாகாலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கவர்ந்திழுக்கும் தங்க பத்­திர முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
08:22

தங்க சேமிப்பு பத்­தி­ரங்­க­ளுக்­கான நெறி­மு­றை­களில் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளதை அடுத்து ஒரு முத­லீட்டு வாய்ப்­பாக இதன் ஈர்ப்பு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.
தங்க சேமிப்பு பத்­திர திட்டம், 2015ல் அறி­மு­க­மா­னது. நாட்டின் தங்க இறக்­கு­ம­தியை குறைக்கும் வகை­யிலும், காகித வடிவில் தங்க முத­லீட்டை ஊக்­கு­விக்கும் வகை­யிலும், தங்க பத்­தி­ரங்கள் மத்­திர அரசால் அறி­முகம் செய்­யப்­பட்­டன. இந்த திட்­டத்தின் கீழ், ஒரு கிராம் தங்­கத்­திற்கு நிக­ரான தங்க பத்­திரம் அளிக்­கப்­படும். குறைந்­த­பட்சம் ஒரு கிராம் முதல் முத­லீடு செய்­யலாம். (துவக்­கத்தில் 2 கிராம் என இருந்­தது). அதி­க­பட்­ச­மாக நிதி­யாண்­டுக்கு, 500 கிராம் வரை முத­லீடு செய்­யலாம். முத­லீடு காலத்தில் 2.5 சத­வீத வட்டி அளிக்­கப்­படும். (துவக்­கத்தில் 2.75 சத­வீ­த­மாக இருந்­தது). இதன் முதிர்வு காலம், 8 ஆண்­டுகள்.
இந்த பத்­தி­ரங்கள் பங்­குச்­சந்­தை­யிலும் பட்­டி­ய­லி­டப்­பட்டு, பரி­வர்த்­தனை செய்­யப்­படும். இது­வரை தங்க பத்­தி­ரங்கள் மூலம், 4,769 கோடி ரூபாய் திரட்­டப்­பட்டுள்­ளது. தற்­போது முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இந்த திட்­டத்தை மேலும் ஈர்ப்­பு­டை­ய­தாக்கும் வகையில் முக்­கிய மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அண்­மையில் மத்­திய அமைச்­ச­ரவை இதற்கு அனு­மதி அளித்­தது. மாற்றம் செய்­யப்­பட்ட நெறி­மு­றை­களின் படி நிதி­யாண்­டிற்­கான அதி­க­பட்ச முத­லிடு தற்­போ­தைய, 500 கிராமில் இருந்து, 4 கிலோ­வாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.
அறக்­கட்­ட­ளைகள், 20 கிலோ வரை முத­லீடு செய்­யலாம். இதன் மூலம் தங்க பத்­தி­ரங்­களில் முத­லீடு அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக அறக்­கட்­ட­ளைகள் அதிக அளவில் முத­லீடு செய்­யலாம். மேலும், பல்­வேறு வகை­யான முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஏற்ற வகையில், தங்க பத்­தி­ரங்­களை பல்­வேறு வட்டி விகிதம் அளவு மற்றும், ‘ரிஸ்க்’ தன்­மையில் வெளி­யி­டவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
தற்­போது ஒவ்­வொரு கட்­ட­மாக வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு பதி­லாக எப்­போதும் வாங்க கூடிய வகை­யிலும் வெளி­யீட்டு முறையை, ‘ஆன் டேப்’ என சொல்­லப்­படும் முறையில் அமைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. ஏஜன்ட்­க­ளுக்கு அதிக கமி­ஷனும் வழங்­கப்­ப­டலாம். இந்த மாற்­றங்கள் தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களை மேலும் ஈர்ப்­பு­டை­ய ­தாக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது. முத­லீட்டு நோக்கில் தங்கம் வாங்­கு­ப­வர்­க­ளுக்கு காகித வடி­விலான தங்க சேமிப்பு பத்­திர முத­லீடு ஏற்­ற­தாக அமை­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)