காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியாகாலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்­டி­ வி­கித குறைப்பின் தாக்கம் எப்­படி இருக்கும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
08:24

ரிசர்வ் வங்கி வட்டி விகி­தத்தை குறைத்­தி­ருப்­பதை அடுத்து, வைப்பு நிதி உள்­ளிட்ட முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்கம் பற்றி ஓர் அலசல்.
எதிர்­பார்த்­தது போலவே ரிசர்வ் வங்கி, ரெப்போ விகி­தத்தை குறைப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. அண்­மையில் நடை­பெற்ற ரிசர்வ் வங்­கியின், 3வது, இரு மாத கூட்­டத்தில் வங்­கி­க­ளுக்­கான குறு­கிய கால கட­னுக்­கான வட்டி விகி­த­மான ரெப்போ விகிதம், 25 அடிப்­படை புள்­ளிகள் குறைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது. இதையடுத்து இந்த வட்டி குறைப்பின் தாக்கம் எப்­படி இருக்கும் என்­பது பற்­றியும், வரும் மாதங்­களில் ரிசர்வ் வங்­கியின் அணு­கு­முறை எப்­படி இருக்கும் என்­பது பற்­றியும் தீவிர விவாதம் நடை­பெற்று வரு­கி­றது.
கட­னுக்­கான வட்டிரிசர்வ் வங்கி கூட்­டத்தில் ரெப்போ விகிதம் குறைப்பு தவிர, வங்­கிகள் கடன் வழங்கும் வட்டி விகி­தத்தை தீர்­மா­னிக்கும் எம்.சி.எல்.ஆர்., முறை பற்­றியும் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டது. இந்த முறை, வட்­டி­வி­கித மாற்­றத்தின் பலனை வழங்­கு­வதில் ஓர­ளவு வெளிப்­ப­டை­யாக இருந்­தாலும் முழு­அ­ளவு திருப்­தி­க­ர­மாக இல்லை என்றும், இது தொடர்­பாக பரி­சீ­லனை செய்ய குழு அமைக்­கப்­பட்டு உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பழைய பேஸ் ரேட் முறையில் வட்டி குறைப்பின் பலன் உட­ன­டி­யாக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மாற்­றப்­ப­டு­வ­தில்லை எனும் நிலையில் தான், எம்.சி.எல்.ஆர்., முறை அமல் செய்­யப்­பட்­டது. தற்­போ­தைய இந்த முறையும் ஆய்­வுக்­குள்­ளாகி உள்­ளது.
ரிசர்வ் வங்கி, எம்.சி.எல்.ஆர்., முறைக்கு பதி­லாக வேறு ஒரு முறையை கொண்டு வரு­வது குறித்து பரி­சீ­லித்­தாலும், இது உட­ன­டி­யாக நிகழ வாய்ப்­பில்லை என கரு­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், தற்­போ­தையை வட்டி குறைப்பு மாறும் கடன் விகி­தங்கள் மீது எந்த வகை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் எனும் கேள்­வியும் எழுந்­துள்­ளது. வட்டி குறைப்­புக்கு ஏற்ப கட­னுக்­கான வட்டி விகி­தமும் குறையும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டாலும், ஒட்­டு­ மொத்த நோக்கில் பார்க்கும் போது, இந்த வட்டி குறைப்பை எதிர்­பார்த்து வங்­கிகள் ஏற்­க­னவே இதை கணக்கில் கொண்டு செயல்­பட்­டி­ருப்­ப­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.
வங்­கி­களின் ‘டிபாசிட்’ வட்டி விகிதம் எப்­படி அமை­கின்­றன என்­பதை கவ­னிக்க வேண்டும் என்­கின்­றனர். எனினும் வட்டி குறைப்பின் எதிர்­பார்ப்பு இதிலும் கருத்தில் கொள்­ளப்­பட்­ட­தாக வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். எனவே, சிறிய அளவில் மாற்றம் இருக்­க­லாமேத் தவிர பெரிய அளவில் தாக்கம் இருக்க வாய்ப்­பில்லை என்ற கருத்தும் முன்­வைக்கப்படு­கி­றது.
வைப்பு நிதி தாக்கம் எனினும் வீட்­டுக்­கடன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சாத­க­மான நிலையில் மாற்­றங்கள் அமை­யலாம் என கரு­தப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே வட்டி குறைப்பு கணக்கில் கொள்­ளப்­பட்டாலும், எம்.சி.எல்.ஆர்., முறை­யுடன் தொடர்பு கொண்ட கட­னுக்­கான வட்டி விகிதம் ஓர­ளவு குறைக்­கப்­ப­டலாம். புதி­தாக வீட்­டுக்­கடன் பெற விரும்­பு­கி­ன்ற­வர் பல்­வேறு வங்­கிகள் அளிக்கும் கடன் விகி­தங்­களை ஒப்­பிட்டுப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும் என்றும் வல்­லு­னர்கள் ஆலோ­சனை சொல்­கின்­றனர். அதே நேரத்தில் மற்ற கட்­ட­ணங்­க­ளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்­கின்­றனர்.
வங்­கி­களின் வைப்பு நிதி வட்டி விகி­தமும் குறைந்து வரு­கி­றது. அண்­மையில் பாரத ஸ்டேட் வங்­கியின் சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகி­தமும் குறைக்­கப்­பட்­டுள்­ளது. சில தனியார் வங்­கிகள் வைப்பு நிதி வட்­டியை குறைத்­துள்­ளன. கடன் வளர்ச்­சியின் போக்கின் அடிப்­ப­டை­யி­லேயே வைப்பு நிதிக்­கான வட்டி விகித போக்கு அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும் குறைந்த வட்டி விகித சூழலில் வைப்பு நிதியை நாடு­ப­வர்­க­ளுக்­கான பலன் குறை­வா­கவே இருக்கும் நிலையே நீடிக்க உள்­ளது.
டெப்ட் பண்ட்கள்வைப்பு நிதியை நாடு­ப­வர்கள் டெப்ட் பண்ட் முத­லீட்டு வாய்ப்பை பரி­சீ­லிப்­பது பொருத்­த­மாக இருக்கும் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. சேமிப்பு கணக்­கிற்­கான வட்டி விகி­தமும் குறையும் சூழலில் சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்­தி­ருப்­பதை விட பொருத்­த­மான லிக்விட் பண்ட் திட்­டங்­களை நாடலாம் என, வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். டெப்ட் பண்ட் உள்­ளிட்ட மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களும் இந்த வட்டி குறைப்பை எதிர்­பார்த்து அதற்­கேற்ப செயல்­பட்­டி­ருப்­ப­தாக வல்­லு­னர்கள் தெரி­விக்­கின்­றனர். நீண்ட கால திட்­டங்­களில் இதன் தாக்கம் இருக்­கலாம் என கரு­தப்­ப­டு­கி­றது. எனினும் குறிப்­பிட்ட கால அள­வி­லான பண்ட்­களில் முத­லீடு செய்­தி­ருப்­ப­வர்கள் அவற்றை தொடர்­வது சரி­யாக இருக்கும் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது.
மாற்று வாய்ப்­புகள் என்ன?* சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை லிக்விட் பண்ட் வகை மியூச்­சுவல் பண்ட்­க­ளுக்கு மாற்­றலாம்.* சிறு­சே­மிப்பு திட்­டங்­களை பொறுத்­த­வரை முத­லீட்டை தொடர்­வதே பொருத்­த­மாக இருக்கும்.* பேமென்ட் வங்­கிகள் அளிக்கும் வாய்ப்­பு­க­ளையும் பரி­சீ­லிக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)