கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... பழைய – புதிய பொருட்கள் விற்பனை ‘அமேசான்’ சேவை துவக்கம் பழைய – புதிய பொருட்கள் விற்பனை ‘அமேசான்’ சேவை துவக்கம் ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2017
08:15

சார், எங்­க­ளு­டைய அலு­வ­ல­கத்­திற்கு, லாரி மூலம் தண்­ணீர் சப்ளை செய்­கின்­ற­னர். ஒரு­முறை சப்ளை செய்ய, 1,500 ரூபாய் வீதம், மாதம், 25 ஆயி­ரம் ரூபாய் – 30 ஆயி­ரம் ரூபாய் வரை, ‘பில்’ செய்­கின்­ற­னர். இதற்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ வரி முறை வருமா?– ஜெய­லக் ஷ்மி, சென்னைதண்­ணீர் சப்­ளைக்கு, ஜி.எஸ்.டி., கிடை­யாது. எனவே, இதற்கு நீங்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டிய அவ­சி­யம் இல்லை.
‘பி 2 பி’ சப்ளை என்­றால் என்ன; ‘பி 2 சி’ சப்ளை என்­றால் என்ன? தயவு செய்து விளக்­க­வும். உள்­ளீட்டு வரி பயன் உண்டா?– தர்­ம­ராஜ், ராஜ­பா­ளை­யம்‘பி 2 பி’ சப்ளை என்­பது, ஒரு வர்த்­த­கர் இன்­னொரு வர்த்­த­க­ருக்கு வழங்­கும் வழங்­க­லா­கும். அதா­வது, ‘பிசி­னஸ் டு பிசி­னஸ்’ ஆகும். அதுவே, ஒரு வர்த்­த­கர், நுகர்­வோ­ருக்கு வழங்­கும் வழங்­கல், ‘பி 2 சி’ அதா­வது, ‘பிசி­னஸ் டு கன்ஸ்­யூ­மர்’ என, அழைக்­கப்­ப­டு­கிறது. ‘பி 2 பி’ சப்ளை முறை­யில், உள்­ளீட்டு வரி பயன் இருக்­கும்.
ஐயா, யு.டி.ஜி.எஸ்.டி., மற்­றும் ஐ.ஜி.எஸ்.டி., இவற்­றிற்கு உள்ள வித்­தி­யா­சம் என்ன? யு.டி.ஜி.எஸ்.டி., எப்­போது விதிக்க வேண்­டும். இதில் சற்று குழப்­பம் உள்­ளது. இதை விளக்­க­வும்.
தமி­ழ­கத்­தில், உள் மாநில வழங்­க­லில் ஈடு­படும் போது, சி.ஜி.எஸ்.டி., மற்­றும் எஸ்.ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும். இதுவே, யூனி­யன் பிர­தே­சங்­களில், உள் மாநில வழங்­க­லில் ஈடு­படும் போது, சி.ஜி.எஸ்.டி., மற்­றும் யு.டி.ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும். தமி­ழ­கத்­தில் நீங்­கள் விற்­ப­னை­யில் ஈடு­படும் போது, யு.டி.ஜி.எஸ்.டி., பற்றி கவலை வேண்­டாம். ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., வெளி மாநில வழங்­களில் விதிக்­கப்­பட வேண்­டும். ஒரு வழங்­கு­னர், எந்த மாநி­லத்­தில் இருந்­தா­லும், வெளி மாநில வழங்­க­லில் ஈடு­படும் போது, ஐ.ஜி.எஸ்.டி., மட்­டுமே விதிக்க வேண்­டும்.
சார், ஜி.எஸ்.டி., சட்­டத்­தில், புதிய பதி­விற்­காக பதிவு செய்­யும் போது, இணைப்பு வரி நிலையை (காம்­போ­சி­ஷன் திட்­டத்தை) தேர்வு செய்ய முடி­யுமா அல்­லது ஏற்­க­னவே, காம்­போ­சி­ஷன் திட்­டத்­தில் உள்­ள­வர்­கள் தான் இதில் சேர முடி­யுமா?– சாமி­நா­தன், மயி­லாப்­பூர்புதிய பதி­விற்­காக நீங்­கள் விண்­ணப்­பிக்­கும் போது, காம்­போ­சி­ஷன் திட்­டத்தை தேர்வு செய்து கொள்­ள­லாம். ஏற்­க­னவே, இந்த திட்­டத்­தில் உள்­ள­வர்­கள் தான், இதில் சேர முடி­யும் என்ற கூற்று தவ­றா­னது.
நாங்­கள், தற்­போது மூல­தன பொருட்­களை, வெளி­நாட்­டில் இருந்து இறக்­கு­மதி செய்­யும் போது, இ.பி.சி.ஜி., அனு­ம­தி­யின் கீழ், வரி இல்­லா­மல் பெற்று வரு­கி­றோம். ஜி.எஸ்.டி., வந்த பின், இதில் மாற்­றம் இருக்­குமா?– ராக­வன், சென்னைஜி.எஸ்.டி., சட்­டப்­படி, இத்­த­கைய இறக்­கு­ம­திக்கு, ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். நீங்­கள் அதை செலுத்தி, உள்­ளீட்டு வரி பயன் பெற­லாம் அல்­லது அந்த தொகையை, அர­சி­ட­மி­ருந்து விண்­ணப்­பித்து திரும்ப பெற­லாம்.
ஒரே நபர், இரண்டு மாநி­லங்­களில், ஜி.எஸ்.டி., பதிவு பெற்­றி­ருந்­தால், ஒரு மாநி­லத்­தில், காம்­போ­சி­ஷன் திட்­டத்­தை­யும், மற்­றொரு மாநி­லத்­தில் சாதா­ரண வரி நிலை­யை­யும் தேர்வு செய்ய இய­லுமா?– மீனாக் ஷி கணேஷ், நங்­க­நல்­லுார்அவ்­வாறு தேர்வு செய்ய வழி­யில்லை. நீங்­கள் காம்­போ­சி­ஷன் திட்­டத்தை தேர்வு செய்­தால், அனைத்து மாநி­லங்­க­ளி­லுமே அதையே தேர்வு செய்ய வேண்­டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)