காப்பீட்டு பாலிசிக்கும் ‘ஆதார்’ கட்டாயமாகிறது?காப்பீட்டு பாலிசிக்கும் ‘ஆதார்’ கட்டாயமாகிறது? ... ரூபாயின் மதிப்பும் சரிவுடன் வர்த்தகம் : ரூ.63.79 ரூபாயின் மதிப்பும் சரிவுடன் வர்த்தகம் : ரூ.63.79 ...
‘செட் – டாப் பாக்ஸ் போர்ட்டபிலிட்டி’ வசதி; அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2017
08:17

புது­டில்லி : மருத்­து­வக் காப்­பீடு, மொபைல் போன் சேவை ஆகி­ய­வற்றை தொடர்ந்து, ஒரு நிறு­வ­னத்­தின், செட் – டாப் பாக்சை மாற்­றா­மல், அதே சாத­னம் மூலம், வேறு நிறு­வ­னத்­தின், ‘டிவி’ சேனல்­களை காணும், ‘செட் – டாப் பாக்ஸ் போர்ட்­ட­பிலிட்டி’ வசதி, அடுத்த ஆண்டு அறி­மு­க­மாக உள்­ளது.

தற்­போது, ஒரு நிறு­வ­னத்­தின் மொபைல் போன் சேவை­யில் அதி­ருப்தி ஏற்­பட்­டால், வாடிக்­கை­யா­ளர், அதே எண் மூலம், வேறொரு நிறு­வ­னத்­தின் மொபைல் போன் சேவைக்கு மாறும் வசதி உள்­ளது. இதை, ‘மொபைல் நம்­பர் போர்ட்­ட­பி­லிட்டி’ என்­கின்­ற­னர். இது போன்ற வசதி, மருத்­து­வக் காப்­பீட்டு துறை­யி­லும் உள்­ளது. ஒரு மருத்­து­வக் காப்­பீட்டு நிறு­வ­னத்­தின் பாலி­சி­தா­ரர், காப்­பீட்டு காலத்­தின் இடை­யி­லேயே, வேறொரு காப்­பீட்டு நிறு­வ­னத்­தின் சேவைக்கு மாற­லாம். பழைய நிறு­வ­னத்­தில் அளிக்­கப்­பட்ட நோய் விப­ரங்­கள், பாலிசி கால, ‘போனஸ்’ சலு­கை­கள் ஆகி­யவை, புதிய நிறு­வ­னத்­தி­லும் தொட­ரும்.

இந்­நி­லை­யில், ‘டிவி’ சேனல் ஒளி­ப­ரப்­பிற்­கான, செட் – டாப் பாக்சை மாற்­றா­மல், விரும்­பிய, டி.டி.எச்., நிறு­வ­னத்­தையோ அல்­லது கேபிள் ஆப்­ப­ரேட்­ட­ரையோ மாற்­றிக் கொள்­ளும் வச­தியை அறி­மு­கப்­ப­டுத்த, தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணை­ய­மான, ‘டிராய்’ திட்­ட­மிட்டு உள்­ளது. இதன் மூலம், ஒரு நிறு­வ­னத்­தின், செட் – டாப் பாக்சை மாற்­றா­மலே, வேறொரு நிறு­வ­னத்­தின் வாடிக்­கை­யா­ள­ராக மாற­லாம்.

இது குறித்து, ‘டிராய்’ தலை­வர், ஆர்.எஸ்.ஷர்மா கூறி­ய­தா­வது: டி.டி.எச்., நிறு­வ­னங்­கள் மற்­றும் கேபிள் ஆப்­ப­ரேட்­டர்­கள் மூலம், செட் – டாப் பாக்ஸ் வாயி­லாக, ‘டிவி’ நிகழ்ச்­சி­களை காண்­போர், அடுத்த ஆண்டு முதல், ஒரே செட் – டாப் பாக்ஸ் மூலம், வேறொரு, டி.டி.எச்., நிறு­வ­னம் அல்­லது கேபிள் ஆப்­ப­ரேட்­டர்­களின், ‘டிவி’ சேனல்­களின் சேவையை பெற­லாம்.

தற்­போது, ஒரு நிறு­வ­னத்­தின் சேவை­யில் இருந்து, வேறொரு நிறு­வ­னத்­தின் சேவைக்கு மாறும் போது, மீண்­டும், செட் – டாப் பாக்ஸ் வாங்­கும் நிலை உள்­ளது. இதற்கு, அடுத்த ஆண்டு அறி­மு­க­மா­கும், ‘செட் – டாப் பாக்ஸ் போர்ட்­ட­பி­லிட்டி’ வசதி முடிவு கட்­டும். இதற்­கான தொழில்­நுட்­பத்­து­டன், மாதிரி கட்­ட­மைப்பு சாத­னத்தை, பெங்­க­ளூ­ரில் உள்ள, சி.டி.ஓ.டி., நிறு­வ­னம் உரு­வாக்கி உள்­ளது.

அதை பரி­சோ­தித்து பார்த்­த­தில், முழு திருப்தி ஏற்­பட்­டுள்­ளது. இந்த, செட் – டாப் பாக்சை, வர்த்­தக ரீதி­யில் அறி­மு­கப்­ப­டுத்­து­வது தொடர்­பாக, அனைத்து, டி.டி.எச்., நிறு­வ­னங்­கள், கேபிள் ஆப்­ப­ரேட்­டர்­கள் ஆகி­யோ­ரு­டன், பேச்சு நடத்த உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

செலவில்லாத தேர்வு:
தற்­போது, ஒரு, ‘செட் – டாப் பாக்ஸ்’ விலை, 1,700 – 2,200 ரூபாய் வரை உள்­ளது. இத­னால், பலர், மீண்­டும் ஒரு, செட் – டாப் பாக்ஸ் வாங்க விரும்­பா­மல், அதி­ருப்­தி­யு­டன், பழைய நிறு­வ­னத்­தின் சேவையை தொட­ரு­கின்­ற­னர். புதிய செட் – டாப் பாக்ஸ் இதே விலை­யில் அறி­மு­க­மா­னா­லும், அதில், வேறு நிறு­வ­னத்­திற்கு மாறக் கூடிய வசதி இருக்­கும் என்­ப­தால், மக்­கள் விருப்­ப­மான, டி.டி.எச்., நிறு­வ­னங்­கள் அல்­லது கேபிள் ஆப்­ப­ரேட்­டர்­களை, கூடு­தல் செல­வின்றி தேர்வு செய்து கொள்­ள­லாம்.
-ஆர்.எஸ்.ஷர்மா, தலைவர், ‘டிராய்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)