அன்னிய முதலீட்டு திட்டங்கள் அனுமதிக்காக காத்திருப்புஅன்னிய முதலீட்டு திட்டங்கள் அனுமதிக்காக காத்திருப்பு ... ஒரு சவ­ரன் தங்­கம் விலை ரூ.22 ஆயி­ரத்தை தாண்­டி­யது ஒரு சவ­ரன் தங்­கம் விலை ரூ.22 ஆயி­ரத்தை தாண்­டி­யது ...
வளர்ந்து வரும் பெரு நிறுவன கலாசாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2017
00:02

புதுடில்லி : இந்­தி­யா­வில், பெரிய கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் கடை­பி­டிக்­கும் நிர்­வாக கலா­சா­ரத்தை, இதர நிறு­வ­னங்­களும் பின்­பற்­றும் போக்கு அதி­க­ரித்­துள்­ள­தாக, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

சர்­வ­தேச ஆய்வு நிறு­வ­ன­மான, கிரான்ட் தார்ன்­டன், 36 நாடு­க­ளைச் சேர்ந்த, 2,500 நிறு­வ­னங்­களின் நிர்­வாக கலா­சார நடை­மு­றை­கள் குறித்து வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வில், 85 சத­வீத நிறு­வ­னங்­கள், நிர்­வாக நடை­மு­றை­யில் ஒழுங்­குத்­தன்மை, பணி­யா­ளர்­களை நடத்­தும்விதம் உள்­ளிட்ட அம்­சங்­களில், சுய கட்­டுப்­பா­டு­களை உரு­வாக்கி வரு­வ­தாக தெரி­வித்து உள்ளன.

உல­க­ள­வில், நிறு­வ­னங்­கள், சிறந்த நிர்­வாக கலா­சா­ரத்­திற்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் அளிக்க துவங்கி உள்ளன. இதற்கு, அந்­தந்த துறை­கள் சார்ந்த, ஒழுங்­கு­முறை கட்­டுப்­பாட்டு ஆணை­யங்­களின் அறி­வு­றுத்­த­லும் முக்­கிய கார­ணம். பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ சமீ­பத்­தில், நிறு­வ­னங்­களின் நிர்­வா­கக் குழுக்­கள், நிறு­வ­னங்­களின் நிர்­வாக செயல்­பா­டு­க­ளுக்­கான கலா­சா­ரத்தை உரு­வாக்க வேண்­டும் என, தெரி­வித்­தி­ருந்­தது. அதன் அடிப்­ப­டை­யில், இந்­திய நிறு­வ­னங்­கள், சிறந்த நிர்­வாக நடை­மு­றை­களை மேற்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளன.

குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­யில், அனைத்து ஊழி­யர்­களின் கூட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்து, அவர்­க­ளு­டன் நிறு­வ­னம் சார்ந்த தக­வல்­களை, பகி­ரங்­க­மாக பகிர்ந்து கொள்ள துவங்கி உள்ளன. அத்­து­டன், நிறு­வன செயல்­பா­டு­க­ளுக்­கான ஒழுங்­கு­முறை விதி­களை வகுப்­பது, அது தொடர்­பாக ஊழி­யர்­க­ளுக்கு பயிற்சி அளிப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்றன. இது போன்ற செயல்­பா­டு­கள் மூலம், நிறு­வ­னங்­களின் மதிப்­பும், அவற்­றின் வர்த்­த­க­மும் உய­ரும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)