பதிவு செய்த நாள்
11 ஆக2017
00:03
சென்னை : நீண்ட நாட்களுக்கு பின், சென்னையில், மீண்டும், ஒரு சவரன் தங்கம் விலை, 22 ஆயிரம் ரூபாயை தாண்டியது.
சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. சென்னையில், ஜூலை, 1ல், ஒரு கிராம் தங்கம், 2,758 ரூபாய்க்கும்; ஒரு சவரன், 22 ஆயிரத்து, 64 ரூபாய்க்கும் விற்பனையானது. சர்வதேச சந்தையில், தங்கம் விலை குறைந்ததால், சென்னையில், ஒரு சவரன், 22 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விற்பனையானது.
இந்நிலையில், சில தினங்களாக, தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில், நேற்று முன்தினம், ஒரு கிராம் தங்கம், 2,727 ரூபாய்க்கும்; ஒரு சவரன், 21 ஆயிரத்து, 816 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 29 ரூபாய் உயர்ந்து, 2,756 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 232 ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து, 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 80 காசு அதிகரித்து, 41.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|