இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 % ஐ எட்டுவது கடினம் : மத்திய அரசுஇந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 % ஐ எட்டுவது கடினம் : மத்திய அரசு ... மாலைநேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு மாலைநேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ...
விற்பனைக்கு முன்பே 'பல லட்சம்' பேரின் வரவேற்பை பெற்ற நோக்கியா 6
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2017
16:10

புதுடில்லி : சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன.

அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6 முன்பதிவுகள் ஜூலை 14-ம் தேதி துவங்கியது. ஆகஸ்டு 23-ம் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

அமேசான் தளத்தில் நோக்கியா 6 வாங்கும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பே கணக்கில் ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. வோடபோன் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டா வங்கும் போது 9 ஜிபி கூடுதல் டேட்டா ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மைக்மைட்ரிப் (Makemytrip.com) தளத்தில் தங்கும் விடுதி மற்றும் விமான பணச்சீட்டுகளில் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போல் அமேசான் கின்டிள் புத்தகங்களில் அதிகபட்சம் 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)