மாலைநேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வுமாலைநேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... பிக் பஜார் கடைகளில், ‘5 நாள் மெகா சேமிப்பு’ விற்பனை பிக் பஜார் கடைகளில், ‘5 நாள் மெகா சேமிப்பு’ விற்பனை ...
ஜி.எஸ்.டி.,கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2017
00:43

சார், நாங்­கள், அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பில், அசோ­சி­யே­ஷன் வைத்து நடத்தி வரு­கி­றோம். குடி­யி­ருப்­போ­ரி­ட­மி­ருந்து ஒவ்­வொரு மாத­மும், 3,000 ரூபாயை​ பரா­ம­ரிப்­புத் தொகை­யாக வாங்கி, செலவு செய்து, அதற்கு கணக்­கும் வைத்­துள்­ளோம். எங்­க­ளு­டைய அசோ­சி­யே­ஷன், ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்­டுமா? இத்­த­கைய பரா­ம­ரிப்­புத் தொகைக்கு, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டுமா?– விக்­ரம், கோடம்­பாக்­கம்ஒரு நப­ரி­ட­மி­ருந்து வசூ­லிக்­கும் மாத பரா­ம­ரிப்­புத் தொகை­யா­னது, 5,000 ரூபாயை தாண்­டா­த­பட்­சத்­தில், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது. மேலும், அசோ­சி­யே­ஷ­னின் ஆண்டு வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய்க்கு கீழ் உள்ள வரை, ஜி.எஸ்.டி., பதிவு செய்ய தேவை­யில்லை.
ஏற்­று­மதி செய்­யும் போது செலுத்­திய, ஐ.ஜி.எஸ்.டி., தொகையை திரும்­பப் பெறு­வ­தற்­கான வழி­மு­றை­களை கூற­வும்.– அன்­வர், வண்­ணா­ரப்­பேட்டைநீங்­கள், ஏற்­று­மதி செய்­யும் போது தாக்­கல் செய்த, ஷிப்­பிங்பில், பணம் திரும்­பப் பெறு­வ­தற்­கான விண்­ணப்­ப­மாக கரு­தப்­படும். மேலும், ஏற்­று­ம­திக்­கான ​விப­ரத்தை,​ ஜி.எஸ்.டி.ஆர்., – 1ல் தாக்­கல் செய்து, ஜி.எஸ்.டி.ஆர்., – 3 மூலம் உறுதி செய்ய வேண்­டும். இதன் மூலம், உங்­க­ளு­டைய, ஐ.ஜி.எஸ்.டி., தொகை­யா­னது திரும்ப கிடைக்க பெறும்.நாங்­கள், பள்­ளிக்­கூ­டம் ஒன்றை நடத்தி வரு­கி­றோம். ஒவ்­வொரு ஆண்­டும்,​​எங்­கள் பள்ளி​யின் ​நாள்­காட்­டியை​, பெற்­றோர் மற்­றும் பொது­மக்­க­ளுக்கு ​ வழங்கி வரு­கி­றோம். இதை அச்­சி­டும் போது எங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா? ஏனெ­னில், பள்­ளி­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., இல்லை என, கேள்­விப்­பட்­டேன்.– எழில், சேலம்நீங்­கள் வழங்­கும் கல்வி சேவைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது. ஆனால், உங்­க­ளுக்கு ​​வழங்­கக் கூடிய சரக்கோ அல்­லது சேவை​யோ ​வரிக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தால், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். நீங்­கள் குறிப்­பிட்­டி­ருக்­கும் பரி­வர்த்­த­னை­யில், 12 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். உங்­க­ளுக்கு, உள்­ளீட்டு வரி பயன் இல்லை.
மத்­திய அர­சுக்கு செலுத்த வேண்­டிய, சி.ஜி.எஸ்.டி., தொகையை செலுத்த தவ­றி­னால், மாநில அர­சின் அதி­கா­ரி­க­ளால், அந்­தத் தொகையை வசூ­லிக்க அதி­கா­ரம் உள்­ளதா?– பிரியா, திண்­டுக்­கல்இதற்­கென, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் தனி பிரிவு உள்­ளது. மாநில அர­சின் அதி­கா­ரி­க­ளால், மத்­திய அர­சுக்கு செலுத்த வேண்­டிய வரி தொகையை, மாநில அர­சின் நிலு­வை­யா­கக் கருதி வசூ­லிக்க முடி­யும்.
பதிவு செய்­யப்­பட்ட நபர், வங்­கிக் கட­னுக்­காக வட்­டித் தொகையை செலுத்­தி­னால், அதற்கு, ஜி.எஸ்.டி., உண்டா? ஆம் எனில், எத்­தனை சத­வீ­தம்?– யாழினி, குன்­றத்­துார்வட்­டித் தொகை­யில், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது. இதில், பதிவு செய்­யப்­பட்ட நபர், பதிவு செய்­யப்­ப­டாத நபர் என்ற வித்­தி­யா­சம் இல்லை.நாங்­கள், எங்­கள் நிறு­வ­னத்­தில் உள்ள செயல் அலு­வ­லர்­க­ளுக்கு, இல­வச குடி­யி­ருப்பு வச­தியை செய்து தரு­கி­றோம். அதன் வாடகை மதிப்பை, அவர்­களின் ஊதி­யத்­தின் ஒரு பகு­தி­யாக கரு­து­கி­றோம். இதற்கு, ஜி.எஸ்.டி., வருமா? ஆம் என்­றால், எத்­தனை சத­வீ­தம்?– வித்­யா­த­ரன், பெருங்­குடிநீங்­கள் அளிக்­கும் இந்த சேவை​,​ ஊதி­யத்­தின் ஒரு பகு­தி­யாக கரு­தப்­ப­டு­வ­தால், இதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது.
சார், நாங்­கள், இன்­ஜி­னி­ய­ரிங் துறை­யில் உள்­ளோம். இயந்­திர உதிரி பாகங்­களை, வேலை பணிக்­காக அனுப்­பு­கி­றோம். அங்கு ஏற்­ப­டு­கிற ஸ்கி­ராப் மற்­றும் இயந்­திர கழி­வு­களை, வேலை பணி­யா­ளர் இடத்­தி­லி­ருந்து விற்­பனை செய்ய இய­லுமா?– ஆதர்ஷ், சேலை­யூர்வேலை பணி­யா­ளர், ஜி.எஸ்.டி., பதிவை பெற்­றி­ருந்­தால், அவ­ரு­டைய இடத்­தி­லி­ருந்து அவரே விலைப் பட்­டி­யலை உரு­வாக்கி விற்­பனை செய்ய இய­லும். அதுவே, ஜி.எஸ்.டி., பதிவு பெறா­த­வர் என்­றால், முதன்மை வழங்­கு­ன­ரான நீங்­கள், வரி விலைப் பட்­டி­யலை எழுப்ப வேண்­டும்.சார், நான், மிதி­வண்­டி­க­ளுக்­கான உதிரி பாகங்­களை வாங்கி, விற்­பனை செய்து வரு­கி­றேன். இதற்கு, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்? 12 சத­வீ­தமா அல்­லது 28 சத­வீ­தமா?– விவேக், நாகப்­பட்­டி­னம்மோட்­டார் பொருத்­தப்­ப­டாத மிதி­வண்­டி­யின் உதிரி பாகங்­க­ளுக்கு, 12 சத­வீ­தம், ஜி.எஸ்.டி.,யும், அதுவே, மோட்­டார் பொருத்­தப்­பட்ட மிதி­வண்டி என்­றால், அதன் உதிரி பாகங்­க­ளுக்கு, 28 சத­வீ­தம், ஜி.எஸ்.டி.,யும் விதிக்­கப்­படும்.ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­திற்கு முன், வரி விலைப் பட்­டி­ய­லில் இருந்த சேவை வரி செலுத்­தாத கார­ணத்­தால், அதற்­கான உள்­ளீட்டு வரி பயனை, நாங்­கள் பெற­வில்லை. தற்­போது, ஜி.எஸ்.டி., வந்த பின், அத்­த­கைய தொகையை செலுத்­தும் போது, சேவை வரிக்­கான உள்­ளீட்டு வரி பயனை, ஜி.எஸ்.டி., பய­னாக பெற இய­லுமா?– மதி­ய­ழ­கன், சிவ­கங்கைஆம். பெற இய­லும். நீங்­கள் குறிப்­பிட்ட சேவை வரியை, செப்., 30க்குள் செலுத்­தும்­பட்­சத்­தில்​,​ நீங்­கள் செலுத்­திய சேவை வரியை, சி.ஜி.எஸ்.டி., உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம்.ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)