இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும்இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிறு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு என்ன பாது­காப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
08:12

கறுப்­புப் பணத்தை பதுக்க உத­வி­ய­தாக கரு­தப்­படும், 331 போலி நிறு­வ­னங்­களின் (ஷெல் நிறு­வ­னங்­கள்) பங்கு வர்த்­த­கத்தை கண்­கா­ணிக்­கு­மாறு, பங்­குச் சந்­தை­க­ளுக்கு உஷார் அறிக்கை அனுப்­பி­யது, இந்­திய பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, செபி முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அதிர்ச்சி. இத்­தனை சட்­டங்­களும், கட்­டுப்­பா­டு­களும் இருக்­கும் போதே, பங்­குச் சந்­தை­களில், ‘ஷெல்’ நிறு­வ­னங்­கள் எப்­படி ஊடு­ருவ முடிந்­தது?

ஷெல் நிறு­வ­னங்­கள் என்­பவை, நேர­டி­யாக தொழில் நட­வ­டிக்கை எவற்­றி­லும் ஈடு­ப­டா­தவை. அவை, வேறு பெரிய நிறு­வ­னங்­களின் அர­வ­ணைப்­பில், ஒட்­டுண்­ணி­யாக வாழ்­பவை. பெரிய நிறு­வ­னங்­கள் ஈட்­டும் லாபத்­தையோ, வரு­வா­யையோ, வரி கட்­டா­மல் மடை மாற்­றி­வி­ட­வும் இவை பயன்­படும்.இப்­ப­டிப்­பட்ட ஷெல் நிறு­வ­னங்­கள், ஏரா­ள­மாக பெரு­கி­விட்­டன; அவை தான், பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­யின் போது, பழைய பணத்தை மாற்ற பயன்­பட்­டன என குற்­றஞ்­சாட்­டி­னார், பிர­த­மர் நரேந்­திர மோடி.

நிறு­வ­னங்­க­ளாக பதிவு செய்து கொண்டு, இரு ஆண்­டு­க­ளாக, எந்­த­வி­த­மான உற்­பத்தி நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­ப­டாத, 1.62 லட்­சம் நிறு­வ­னங்­களை இனங்­கண்டு, நீக்­கும் முயற்­சி­யும் முடுக்­கி­வி­டப்­பட்­டது. கூடவே, ஷெல் நிறு­வ­னங்­களை கண்­டு­பி­டிக்­கும் வேலை­யும் துவங்­கி­யது. அதன் தொடர்ச்­சி­யா­கவே, 331 நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை, செபி, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­க­ளுக்கு வழங்­கி­யது.

தடை நீக்கம்:
இந்த பட்­டி­யலை, கம்­பெனி விவ­கா­ரங்­க­ளுக்­கான துறை, ‘செபி’க்கு அனுப்பி வைத்­தது. இந்த, 331 நிறு­வ­னங்­களில், 162 நிறு­வ­னங்­கள் மும்பை பங்­குச் சந்­தை­யில் வர்த்­த­க­மாகி வரு­ப­வவை; 48 நிறு­வ­னங்­கள், தேசிய பங்­குச் சந்­தை­யி­லும் பங்கு வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­பவை.தங்­கள் மீது, எப்­படி நட­வ­டிக்கை எடுக்­க­லாம்? அதற்­கான அடிப்­படை முகாந்­தி­ரம் என்ன? எங்­க­ளி­டம் விளக்­கம் கோரி­யி­ருக்க வேண்­டாமா? என்­றெல்­லாம் கேள்­வி­கள் எழுப்பி, வெகுண்டு எழுந்த ஐந்து நிறு­வ­னங்­கள், பங்கு பரி­வர்த்­தனை மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யத்­தி­டம் முறை­யீடு செய்­தன.

அதில், ஜே.குமார் இன்ப்ரா, பிர­காஷ் இண்­டஸ்ட்­ரீஸ், பிரஷ்­வந்த் டெவ­ல­பர்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் மீதான, ‘செபி’யின் தடையை நிறுத்தி வைத்­தது தீர்ப்­பா­யம்.இந்த விசா­ர­ணை­யின் போது, தீர்ப்­பா­யம் தெரி­வித்தஒரு கருத்­தி­லி­ருந்து தான், நாம் கேள்­வி­களை துவக்க வேண்­டும். கம்­பெனி விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­கம்,‘செபி’க்கு, 331 ஷெல் நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை அனுப்பி வைத்­தது, ஜூன், 9ம் தேதி. ‘செபி’ நட­வ­டிக்கை மேற்­கொள்ள, சுளை­யாக இரு மாதங்­களை எடுத்­துக் கொண்­டது.

அப்­ப­டி­யா­னால், இது ஒன்­றும் அவ்­வ­ளவு அவ­ச­ர­மான, தலை­போ­கிற பிரச்னை இல்லை என, ‘செபி’ கருதி உள்­ளது. அத­னால், இந்­நி­று­வனங்­களின் பங்கு வர்த்­த­கத்­துக்கு மட்­டும் தடை விதிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என தெரி­வித்­தது, தீர்ப்­பா­யம். சிக்­கலே இங்கு தான் துவங்­கு­கிறது. 331 நிறு­வ­னங்­களின் பட்­டி­யல், எப்­படி தயா­ரிக்­கப்­பட்­டது; அவை என்­னென்ன விதி­மீ­றல்­களில் ஈடு­பட்­டன; எப்­படி ஷெல் நிறு­வ­னங்­க­ளாக இருக்­க­லாம் என்ற தீர்­மா­னத்­துக்கு, கம்­பெனி விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­கம் வந்­தது? பட்­டி­ய­லில் உள்­ள­வற்­றில், பல நிறு­வ­னங்­கள் மிகப்­பெ­ரிய நிறு­வ­னங்­கள். 331 நிறு­வ­னங்­களில், மக்­கள் பணம், 12 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கிறது, மும்பை பங்­குச் சந்தை. அதில், குறைந்­த­பட்­சம், 13 நிறு­வ­னங்­க­ளே­னும், 300 கோடி ரூபாய்க்கு மேல் விற்­று­மு­தல் காண்­பிக்­கும் நிறு­வ­னங்­கள்.

இவ்­வ­ளவு பெரிய நிறு­வ­னங்­களே, போலி நிறு­வ­னங்­க­ளாக இருக்க முடி­யுமா? இத்­தனை ஆண்­டு­க­ளாக, கம்­பெனி விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­கம் என்ன செய்து கொண்­டி­ருந்­தது? ஒவ்­வொருஆண்­டும், அவை தாக்­கல் செய்­யும் ஆண்டு வரவு – செலவு கணக்கை, யாருமே கூர்­மை­யாக கவ­னிக்­க­வில்­லையா; கவ­னித்­தும் கண்டு கொள்­ளா­மல் விட்­டு­விட்­டனரா? அப்­ப­டி­யா­னால், அந்­நி­று­வ­னங்­களின் மொத்த கணக்­கும் சந்­தே­கத்­துக்­கி­ட­மா­னவை தானே?அப்­ப­டிப்­பட்ட நிறு­வ­னங்­கள், எப்­படி பங்­குச் சந்­தை­யில் காலுான்ற முடிந்­தது?

நிறு­வ­னங்­களை பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டு­வ­தற்­கான நடை­மு­றை­கள் என்­பவை, அவ்­வ­ளவு கிள்­ளுக்­கீ­ரை­யாக மாறி­விட்­ட­னவா? பங்­குச் சந்தை நிர்­வா­கங்­கள் என்­பவை, சிறு முத­லீட்­டா­ளர்­கள் மூல­த­னத்தை பாது­காக்­கும் பொறுப்பு கொண்­ட­வையா இல்­லையா? இப்­ப­டிப்­பட்ட நிறு­வ­னங்­களில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­கள் எப்­படி முத­லீடு செய்­தன? அவர்­கள் முத­லீடு செய்­வ­தற்கு முன், நிச்­ச­யம் அடிப்­படை ஆய்­வு­க­ளைச் செய்­தி­ருக்க வேண்­டுமே? ராகேஷ் ஜுன்­ஜுன்­வாலா போன்ற தேர்ந்த முத­லீட்­டா­ளர்­கள் கூட, இத்­த­கைய நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­துள்­ள­னர் என, செய்தி வரு­கிறது.

மேலும், இந்த, 2017ம் ஆண்­டி­லேயே, பிர­காஷ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின் பங்கு, 188 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. ஷெல் நிறு­வ­னங்­கள் என, சந்­தே­கிக்­கப்­படும் வேறு சில­வற்­றின் பங்­கு­கள், 40 சத­வீ­தத்­துக்கு மேல் உயர்ந்­துள்ளன. அடிப்­ப­டையே இல்­லா­மல், எப்­படி இப்­ப­டிப்­பட்ட அசுர வளர்ச்சி சாத்­தி­யம்?

சரிவு:
நிறு­வ­னங்­களை பதி­வது துவங்கி, பின், அவை சமர்ப்­பிக்க வேண்­டிய ஆண்டு வரவு – செலவு கணக்­கு­களை கண்­கா­ணிப்­பது வரை, பின்­பற்ற வேண்­டிய நெறி­மு­றை­யில் தொய்வு... பங்­குச்சந்­தை­யில் பட்­டி­ய­லிட வரும் போது, அங்கே கடை­பி­டிக்­கப்­பட வேண்­டிய, ‘கறார்’ தன்­மை­யில், சரிவு... விளைவு, திடீ­ரென்று ஒரு நாள் விழித்­துக் கொண்டு, இவை­யெல்­லாம் ஷெல் கம்­பெ­னி­க­ளாக இருக்­க­லாம் என்ற எச்­ச­ரிக்கை மணி!

அரசு அமைப்­பு­களை நம்பி, கோடா­னு­கோடி சிறு முத­லீட்­டா­ளர்­கள், தங்­கள் சின்­னச் சின்ன சேமிப்­பு­களை கூட, பங்­குச் சந்­தை­யில் போட வரு­கின்­ற­னரே, அவர்­க­ளுக்கு என்ன பாது­காப்பு? இனி­யே­னும், இத்­த­கைய ஷெல் கம்­பெ­னி­கள் இங்கே செயல்­பட முடி­யாது என்ற நம்­பிக்­கை­யை­யும், உத்­த­ர­வா­தத்­தை­யும் அர­சாங்­கம் ஏற்­ப­டுத்த வேண்­டும்.

-ஆர்.வெங்­க­டேஷ்,பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)