இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும்இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நேர நிர்­வாகம் உங்கள் கைகளில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
08:16

கையில் இருக்கும் நேரத்தை, திறம்­பட நிர்­வ­கிப்­பதன் மூலம், செயல்­களை வெற்­றி­க­ர­மாக செய்து முடிப்­ப­தோடு, வாழ்க்­கை­யையும் நம் கட்­டுப்­பாட்டில் எடுத்துக் கொள்­ளலாம் என, ‘கெட்டிங் திங்ஸ் டன்’ புத்­த­கத்தில், டேவிட் ஆலன் வழி­காட்­டு­கிறார்.

ஒரு­வ­ரு­டைய மனம் தெளி­வாக இருக்கும் போது, செயல் திற­னோடு விளங்க முடியும். அதா­வது ஒருவர் செய்து முடிக்­காத செயல்கள், அவர்கள் அடி­ம­னதில் தொங்கி கொண்­டி­ருக்­கின்­றன. இவற்றை நீக்க வேண்டும். குறு­கிய கால நினை­வுத்­தி­றனில் அதிக சுமை ஏற்­றினால் பாதிப்பே உண்­டாகும். செயல்­களை செய்து முடிக்க, முதலில் நாம் எப்­படி இருக்க விரும்­பு­கிறோம் என்­பதை எழுதி வைக்க வேண்டும். பின், ஒவ்­வொரு செய­லையும் அடுத்த கட்­டத்­திற்கு கொண்டு செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கையை எழுத வேண்டும்.

பணி­களை நிர்­வ­கிக்க, ஐந்து கட்­டங்­களை கொண்ட வழி இருக்­கி­றது. முதற்­கட்டம் செய்ய வேண்­டிய அனைத்­தையும் திரட்­டு­வது. இதற்­காக குறிப்­பேட்டை பயன்­ப­டுத்­தலாம். அடுத்­த­தாக செயல்­மு­றையில் கவனம் செலுத்த வேண்டும். செயல்­களின் தன்மை குறித்து பரி­சீ­லிக்க வேண்டும். அவை முக்­கியம் இல்லை என்றால் தள்ளி வைக்­கலாம். முக்­கியம் என்றால், அடுத்த கட்­ட­மாக என்ன செய்­வது என, யோசிக்க வேண்டும். முடிந்தால் அதை நாமே செய்ய வேண்டும்; இல்லை எனில் உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைக்­கலாம்.

இதன் பின், செயல்­களை பிரித்து வகைப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். நினை­வூட்டல் தேவையா, சேமித்து வைக்க வேண்­டுமா? போன்­ற­வற்றை தீர்­மா­னிக்க வேண்டும். வாரம் ஒரு­முறை ஆய்வு செய்து, குறிப்­பிட்ட செயல்­மு­றையை தடை­யில்­லாமல் தொடர வேண்டும். அடுத்­த­தாக திட்­ட­மி­டலில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் நோக்கம் மற்றும் குறிக்­கோளை தீர்­மா­னிக்க வேண்டும். ஏன்... எனும் கேள்வி எழுப்பி, அதற்­கான பதில்கள் மூலம் தெளிவை பெறலாம். திட்­டத்­திற்­கான வரை­ய­றை­களை வகுத்துக் கொள்­ளவும் இது உதவும்.

அடுத்­த­தாக முடிவின் பலனை உரு­வ­கப்­ப­டுத்தி பார்க்க வேண்டும். இனி திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­களை ஆலோ­சிக்க வேண்டும். யோச­னை­களை எழுதி வைக்­கலாம். இப்­படி செய்­வதன் மூலம், புதிய யோச­னை­களும் உரு­வாகும்.வழி­களை ஆலோ­சிக்கும் போது, உங்கள் செயல்­களை சீர்­துாக்­கிப்­பார்க்­கவோ, விமர்­சிக்­கவோ கூடாது. இவற்றை பின்­ன­ணியில் வைத்துக் கொள்­ளலாம். அடுத்த கட்­ட­மாக, முக்­கிய அம்­சங்­களை கண்­ட­றிந்து, அவற்றை நுணுக்­க­மாக திட்­ட­மிட வேண்டும்.

இந்த செயல்­முறை பலன் தர, இதில் நம்­பிக்கை வைக்க வேண்டும். எல்­லா­வற்­றையும் குறித்த காலத்தில் செய்­வதன் மூலம், நம்­பிக்கை உண்­டாகும். பின், அடுத்து செய்ய வேண்­டிய நட­வ­டிக்­கை­களை ஆய்வு செய்ய வேண்டும். வாராந்­திர ஆய்வு மூலம் இதை தொடர்ந்து கடை­பி­டிக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)