இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும்இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கூடுதல் பான்­கார்டை ஒப்­ப­டைப்­பது அவ­சியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
08:17

ஒன்­றுக்கும் மேற்­பட்ட பான்­கார்டை வைத்­தி­ருப்­பது தவறு என்­பது உங்­க­ளுக்கு நிச்­சயம் தெரிந்­து இ­ருக்கும். ஆனால், இரண்டு பான் கார்டு பெற்­றி­ருப்­ப­வர்கள் தங்கள் கூடுதல் பான் கார்டை ஒப்­ப­டைப்­பது அவ­சியம் என்­பது தெரி­யுமா...

வரு­மான வரிச் சட்­டத்­தின்­படி, ஒருவர் ஒரு பான்­கார்டு மட்­டுமே வைத்­தி­ருக்­கலாம். ஒன்­றுக்கு மேற்­பட்ட பான்­கார்டு வைத்­தி­ருந்தால், அதற்­கான வரு­மான வரித் துறை நட­வ­டிக்கை எடுத்து, அப­ராதம் விதிக்­கலாம். அண்­மையில், ஒன்­றுக்கும் மேற்­பட்ட பான்­கார்டு வைத்­தி­ருப்­ப­வர்கள் மீது எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையில், 11 லட்­சத்­திற்கும் மேற்­பட்ட போலி பான்­கார்­டுகள் முடக்­கப்­பட்­ட­தாக, மத்­திய அரசு தெரி­வித்­தது.

நிரந்­தர கணக்கு எண் என குறிப்­பி­டப்­படும் பான்­கார்டு, முக்­கிய ஆவ­ண­மாக இருக்­கி­றது. வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது மட்டும் அல்­லாமல், பல பரி­வர்த்­த­னை­களில் பான் எண்ணை குறிப்­பி­டு­வது அவ­சியம். ஒரு­வரே பல கார்­டு­களை வைத்­தி­ருந்து ஏமாற்­று­வதை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது. ஒரு சிலர் தெரி­யா­மலே கூட, ஒன்­றுக்கும் மேற்­பட்ட பான் கார்­டுகள் வைத்­தி­ருக்­கலாம். உதா­ர­ண­மாக வெளி­நாட்டு வாழ் இந்­தி­யர்­களில் சிலர், இந்­தியா வருகை தரும் போது, வர்த்­தக நோக்கில் பான் கார்டு பெறு­கின்­றனர்.

அதன் பின், சில ஆண்­டுகள் கழித்து, மீண்டும் வரும் போது, அவர்கள் புதி­தாக விண்­ணப்­பித்து, பான் கார்டு பெற முயற்­சிக்­கலாம். அல்­லது, பழைய பான் கார்டு தொலைந்து போய்­விடும் நிலையில், முக­வரி மாற்றம் போன்ற பிரச்­னைகள் இருந்தால், பழைய எண்­ணுக்கு விண்­ணப்­பித்து பெறு­வது சிக்­க­லா­கலாம். எனவே, புதி­தாக பான் கார்­டுக்கு விண்­ணப்­பிக்கும் வழி­யையும் சிலர் நாடலாம். இது போல, எந்த கார­ணத்­திற்­காக ஒன்­றுக்கு மேற்­பட்ட பான் கார்டு பெற்­றி­ருந்­தாலும் சரி, கூடுதல் பான் கார்டை ஒப்­ப­டைத்­து­விட வேண்டும்.

இதற்காக, விரி­வான நடை­மு­றைகள் உள்­ளன. இணையம் மூலம் அல்­லது நேர­டி­யாக இதை செய்­யலாம். என்.எஸ்.டி.எல்., இணை­ய­த­ளத்­திற்கு சென்று, பான் கார்டு திருத்தம் வாய்ப்பை தேர்வு செய்து, அதில் கொடுக்­கப்­பட்­டுள்ள நடை­மு­றையை பின்­பற்றவும். இதற்­கான கட்­ட­ணத்தை செலுத்தி, அங்­கீ­கா­ரத்­தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை அச்­சிட்டு அஞ்சல் மூலமும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், என்.எஸ்.டி.எல்., கரெக் ஷன் மையங்­க­ளுக்கு சென்று, முறை­யாக கடிதம் கொடுத்து, நேரிலும் கார்டை ஒப்­ப­டைக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 14,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)