இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும்இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி ரக­சி­யங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
08:19

நிதி விஷ­யங்கள் தொடர்­பாக ஆலோ­சனை பெறு­வதும், நிதி சாத­னங்கள், முத­லீட்டு வாய்ப்­புகள், சேமிப்பு உத்­திகள் தொடர்­பாக நட்பு வட்­டா­ரத்தில் கலந்­து­ரை­யா­டு­வதும் நல்­லது தான். கடன் சுமை, சேமிப்பு சிக்கல் போன்­றவை இருந்தால், நிதி விஷ­யங்கள் குறித்து, நம்­ப­க­மா­ன­வர்­க­ளிடம் வெளிப்­ப­டை­யாக பகிர்ந்து கொண்டால் தெளிவு பிறக்கும் வாய்ப்­புள்­ளது. அதே போல, குடும்­பத்­திற்­கான நிதி திட்­ட­மிடல் என வரும் போது, கணவன், மனைவி சேர்ந்து திட்­ட­மி­டு­வது அவ­சியம். நிதி விஷ­யங்­களில் பகிர்தல் நல்­லது என்­றாலும், சில முக்­கி­ய­மான நிதி தக­வல்­களை, யாரி­டமும் தெரி­விக்­காமல் இருப்­பது அவ­சியம். இப்­படி காக்க வேண்­டிய நிதி ரக­சி­யங்கள் இவை:
கார்டு விப­ரங்கள்
கிரெடிட் கார்டு அல்­லது டெபிட் கார்டில், உங்கள் பெயர் மற்றும் கார்டு செல்லுபடியாகும் காலம் உள்­ளிட்ட விப­ரங்கள் இடம் ­பெற்­றி­ருக்கும். பெயர் தவிர மற்ற தக­வல்கள், மற்­ற­வர்கள் தெரிந்து கொள்­ளக்­கூ­டா­தவை. இந்த தக­வல்கள், பரி­வர்த்­த­னையில் முக்­கி­ய­மா­னவை. இவை தான், முதற்­கட்ட பாது­காப்பு. இவை ரக­சி­ய­மாக இருக்கும் வரை, முறை­கே­டான பயன்­பாட்­டிற்கு வாய்ப்­பில்லை.
பாஸ்­வேர்டு
இணைய வங்கிச் சேவை அல்­லது கிரெடிட் கார்டு பயன்­பாட்டின் போது, பாஸ்­வேர்டு தேவை. கார்டின் பயன்­பாடு தொடர்­பான மற்ற தக­வல்கள் கள­வா­டப்­படலாம் என்­றாலும் கூட, பாஸ்­வேர்டு என்­பது உங்கள் கட்­டுப்­பாட்டில் இருக்க வேண்டும். அதை எப்­போதும் ரக­சி­ய­மாக வைத்­தி­ருங்கள். பாஸ்­வேர்டை யாரி­டமும் தெரி­விக்கக் கூடாது என்­ப­தோடு, அதை காகி­தத்தில் குறித்து வைப்­ப­தையும் தவிர்க்க வேண்டும்.
ஒரு­முறை பாஸ்­வேர்டு
பல பரி­வர்த்­த­னை­களை பூர்த்தி செய்ய, ஒரு­முறை பாஸ்­வேர்டு அனுப்பி வைக்­கப்­படும். இவை பரி­வர்த்­த­னையின் பாது­காப்பை உறுதி செய்ய உத­வு­கின்­றன. இவையும் உங்­க­ளுக்­கா­னது மட்டும் தான். மற்­ற­வர்­க­ளிடம் தெரி­விக்­கவோ, பகிர்ந்து கொள்­ளவோ வேண்டாம். பொது­வாக வங்­கி­களோ நிதி அமைப்­பு­களோ, பாஸ்­வேர்டு அல்­லது பின் எண் போன்ற விப­ரங்­களை கேட்­ப­தில்லை. இப்­படி யாரேனும் கேட்­டாலே, எச்­ச­ரிக்­கை­யாகி விட வேண்டும்.
‘பின்’ எண்
பாஸ்­வேர்டு போலவே, ‘பின்’ எண் எனப்படும் பர்ஷனல் ஐடன்டிபிகேஷன் நம்பர், பயன்­பாட்­டிலும் கவனம் தேவை. டெபிட் கார்டு மூலம் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க அல்­லது பரி­வர்த்­த­னையின் போது அதற்­கான பின் எண்ணை பயன்­ப­டுத்­து­கிறோம். இது ரக­சி­ய­மா­னது மற்றும் பாது­காப்பு அளிப்­பது. இதை மற்­ற­வர்­க­ளிடம் தெரி­விக்க கூடாது. துண்டு சீட்டில் குறித்து வைப்­பது போன்­ற­வையும், கண்­டிப்­பாக தவிர்க்க வேண்டும்.
சி.வி.வி., எண்
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின் பக்கம் கார்டு வெரி­பி­கேஷன் வேல்யூ அல்­லது சி.வி.வி., எண் இடம் பெற்­றி­ருக்கும். ‘ஆன்லைன்’ மூல­மான பரி­வர்த்­த­னை­களை பூர்த்தி செய்ய இது அவ­சியம். கார்டில் அச்­சி­டப்­பட்­டி­ருக்கும் இந்த எண்ணை, எக்­கா­ரணம் கொண்டும், யாருக்கும் தெரி­விக்­கவோ, யாரு­டனும் பகிர்ந்து கொள்­ளவோ வேண்டாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)