பதிவு செய்த நாள்
15 ஆக2017
23:52

புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், வாகன உற்பத்தியை அதிகரிக்கவும், இதர விரிவாக்கத் திட்டங்களுக்காகவும், 450 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, எஸ்.ஜி.முரளி கூறியதாவது: நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்காக, 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் உற்பத்தித் திறன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
தற்போது, நிறுவனத்திற்கு, கர்நாடக மாநிலம், மைசூரு; தமிழகத்தின், ஓசூர்; ஹிமாச்சல பிரதேசம், நாலகரா ஆகிய இடங்களில், உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், நடப்பு நிதியாண்டில், வாகன உற்பத்தியை, தற்போதைய, 40 லட்சத்தில் இருந்து, 45 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு சந்தையில், ஏப்., – ஜூலை வரையிலான காலத்தில், நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 9.26 சதவீதம் உயர்ந்து, 8.94 லட்சமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|