பதிவு செய்த நாள்
15 ஆக2017
23:54

மும்பை : பெங்களூரைச் சேர்ந்த, பார்பெக்யு – நேஷன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், நாடு முழுவதும், உணவகங்களை நடத்தி வருகிறது.
இந்நிறுவனம், அதன் வர்த்தகத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், பழைய கடன்களை திரும்பத் தரவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 700 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை, இந்நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அளித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டில், தகுதி உள்ள பணியாளர்களுக்கு 1.50 லட்சம் பங்குகள், சலுகை விலையில் வழங்கப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பார்பெக்யு – நேஷன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், எடல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஜெப்ரீஸ் இந்தியா மற்றும் எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|