பதிவு செய்த நாள்
15 ஆக2017
23:54

புதுடில்லி : தங்கம் இறக்குமதி, நடப்பு நிதியாண்டில், ஏப்., – ஜூலை வரையிலான காலத்தில், 1,335 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த ஜூலையில் மட்டும், தங்கம் இறக்குமதி, 210 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூலையில், 107 கோடி டாலராக இருந்தது. தங்கம் இறக்குமதி, இரு மடங்கு அதிகரித்துள்ளதற்கு, தென் கொரியா உடன், இந்தியா, 2010ல் செய்து கொண்ட, தாராள வர்த்தக ஒப்பந்தம் தான் காரணம் என, கூறப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்கு பின், தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் தங்கத்திற்கான அடிப்படை சுங்க வரி நீங்கி விட்டது. அத்துடன், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக, சுங்க வரி மீது விதிக்கப்பட்டிருந்த, 12.5 சதவீத கூடுதல் வரியும், ஜி.எஸ்.டி.,யில் சேர்க்கப்பட்டு விட்டது. இதன்படி கணக்கிட்டால், தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் தங்கத்திற்கு, 3 சதவீத, ஐ.ஜி.எஸ்.டி., தான் வருகிறது. தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தங்கத்திற்கு, 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இந்த வேறுபாடு காரணமாகவே, தென் கொரியாவில் இருந்து, அதிகளவில் தங்கம் இறக்குமதியாகி உள்ளது. இதையடுத்து, உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பிற்காக, வரி விதிப்பை ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை, சமீபத்தில், மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கை, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|