பதிவு செய்த நாள்
16 ஆக2017
18:25

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆக., 16) அதிக எழுச்சியுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. இருப்பினும் இடையில் சரிந்த வர்த்தகம் மீண்டும் ஏற்றம் கண்டு நாள் முழுக்க உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 321.86 புள்ளிகள் உயர்ந்து 31,770.89-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 103.15 புள்ளிகள் உயர்ந்து 9,897.30-ஆகவும் முடிந்தன. இதன்மூலம் இந்த மாதத்தில் அதிக எழுச்சியுடன் முடிந்த வர்த்தக நாளாக இன்றைய நாள் அமைந்தது.
அமெரிக்கா - வட கொரியா இடையேயான போர் பதற்றம் சற்று தணிந்து இருப்பதன் எதிரொலியாக உகளவில் ஐரோப்பிய, ஆசிய உள்ளிட்ட பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. அத்துடன் ஜூலை மாத பணவீக்கமும் எதிர்பார்த்த அளவுக்கு இருந்ததால் இன்றைய வர்த்தகம் அதிக எழுச்சி கண்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|