‘சிக்கனம் தான் நிறுவனங்களை வளர்க்கும்’‘சிக்கனம் தான் நிறுவனங்களை வளர்க்கும்’ ... வாட்ஸ் ஆப்-க்கு போட்டியாக டெஸ்க்டாப்பிலும் வந்தது கூகுள் அல்லோ ஆப் வாட்ஸ் ஆப்-க்கு போட்டியாக டெஸ்க்டாப்பிலும் வந்தது கூகுள் அல்லோ ஆப் ...
தொலை தொடர்பு சேவைக்கான இணைப்பு கட்டணம் குறைகிறது; முன்னணி நிறுவனங்கள் அச்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
08:42

மும்பை : தொலை தொடர்பு சேவை­யில், அழைப்­பு­களை இணைக்­கும் வச­திக்­காக, நிறு­வ­னங்­கள் பெறும் கட்­ட­ணத்தை குறைக்க, தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை வாரி­ய­மான, ‘டிராய்’ திட்­ட­மிட்டு உள்­ளது. இத­னால், ஏற்­க­னவே, ரிலை­யன்­சின், ‘ஆர்­ஜியோ’ வர­வால், லாபம் குறைந்­து­விட்ட நிலை­யில், மேலும் பாதிப்பு ஏற்­படும் என்ற அச்­சம், பார்தி ஏர்­டெல், வோட­போன் உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு தொலை தொடர்பு சேவை நிறு­வன வாடிக்­கை­யா­ள­ரின் அழைப்பு, வேறொரு சேவை நிறு­வன வாடிக்­கை­யா­ள­ருக்கு செல்­லும் போது, ஐ.யு.சி., எனப்­படும், இணைப்பு கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. உதா­ர­ண­மாக, ஆர்­ஜியோ வாடிக்­கை­யா­ளர், ஏர்­டெல் வாடிக்­கை­யா­ளரை மொபைல் போனில் அழைக்­கி­றார் என, வைத்­துக் கொள்­வோம். இந்த அழைப்பை இணைத்து தரும் சேவைக்­காக, ஏர்­டெல்­லுக்கு, ஆர்­ஜியோ, நிமி­டத்­திற்கு, 14 காசு­கள் வீதம் தர வேண்­டும். இக்­கட்­ட­ணம், 2015ல், 20 காசு­க­ளாக இருந்­தது. இக்­கட்­ட­ணத்தை, ‘டிராய்’ நிர்­ண­யிக்­கிறது. தற்­போது, தொழில்­நுட்ப முன்­னேற்­றம் கார­ண­மாக, ஐ.யு.சி., கட்­ட­ணத்தை அடி­யோடு நீக்­கு­வது குறித்து, ‘டிராய்’ பரி­சீ­லித்து வரு­கிறது.

இது குறித்து, தொலை தொடர்பு துறை அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ஐ.யு.சி., கட்­ட­ணத்தை அடி­யோடு நீக்க வேண்­டும் என, பல, எம்.பி.,க்கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர். இது தொடர்­பாக, தொலை தொடர்பு வாடிக்­கை­யா­ளர்­கள் உட்­பட, பல்­வேறு அமைப்­பி­ன­ரும், ‘டிராய்’க்கு கோரிக்கை விடுத்­துள்­ள­னர். அவற்றை பரி­சீ­லித்த டிராய், மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­க­ளி­ட­மும் கருத்து கேட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, இம்­மாத இறு­தி­யில், ஐ.யு.சி., கட்­ட­ணம் குறித்த அறி­விப்பு வெளி­யா­கும் என, தெரி­கிறது.

இக்­கட்­ட­ணம் முழு­மை­யாக நீக்­கப்­ப­டா­விட்­டா­லும், பாதி­யாக, அதா­வது, 5 – 8 காசு­க­ளாக குறைக்­கப்­ப­ட­லாம் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இக்­கட்­ட­ணத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே, நிறு­வ­னங்­கள், தொலை தொடர்பு சேவை கட்­ட­ணங்­களை நிர்­ண­யிக்­கும். அத­னால், மொபைல் போன் சேவை கட்­ட­ணம் மேலும் குறைய வாய்ப்­புண்டு. இவ்­வாறு அவர் கூறினார்.

இத­னி­டையே, ‘ஐ.யு.சி., கட்­ட­ணத்தை குறைக்­கக் கூடாது’ என, மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு, டிரா­யி­டம் வலி­யு­றுத்தி உள்­ளது. ஏற்­க­னவே, ஆர்­ஜி­யோ­வால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், ஐ.யு.சி., கட்­ட­ணக் குறைப்பு, மேலும் கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என, தெரி­வித்­துள்­ளது.ஐ.யு.சி., கட்­ட­ணம் குறைக்­கப்­பட்­டால், இல­வச அழைப்­பு­களை வழங்­கும் ஆர்­ஜியோ அதிக பய­ன­டை­யும். அதன் இணைப்பு கட்­டண செலவு, வெகு­வாக குறை­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தொலை தொடர்பு அழைப்­பு­களை இணைப்­ப­தற்­கான, ஐ.யு.சி., கட்­ட­ணத்தை அடி­யோடு நீக்க வேண்­டும். அப்­போது, மேலும் குறைந்த கட்­ட­ணத்­தில், மொபைல் போன் சேவை அளிக்க முடி­யும். எங்­களின் இல­வச அழைப்­பு­க­ளால் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக, பார்தி ஏர்­டெல், வோட­போன், ஐடியா செல்­லு­லார் நிறு­வ­னங்­கள் கூறு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. அந்­நி­று­வ­னங்­களின் வர்த்­தக நிலைப்­பாடு தான், வரு­வாய் இழப்­பிற்கு கார­ணம்.
– ரிலை­யன்ஸ் ஜியோ

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 17,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)